இந்திய கலாசாரத்தில் புடைவைகளின் தோற்றமும் வளர்ச்சியும்!

டிசம்பர் 21, உலக புடைவை தினம்
World Sari Day
World Sari Day
Published on

லக புடைவை தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 21ம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. இது காலத்தால் அழியாத புடைவைகளின் அழகு மற்றும் கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டாடுவதற்கான நாளாகும். இந்தியப் பெண்களின் விருப்ப ஆடையான சேலை, நவீன அழகியலைத் தழுவி இந்தியாவின் வளமான மரபுகளையும் கலைத்திறனையும் உலகிற்கு பறைசாற்றுகின்றன.

புடைவையின் தோற்றம்: புடைவைகள் எங்கே தோன்றின என்பது பற்றிய விவாதங்கள் உள்ளன. ஆனாலும், சேலைகள் இந்தியத் துணைக் கண்டத்தில் பிறந்தவை என பரவலாக நம்பப்படுகிறது. புடைவையின் தோற்றம் இந்திய வரலாற்றில் ஆழமாக வேரூன்றி உள்ளது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தியவை என சான்றுகள் கூறுகின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தில் சேலை என்ற வார்த்தையின் ஆரம்ப காலக் குறிப்புகள் காணப்படுகின்றன. ‘சேலை’என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான ‘சதி’ என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது, துணியின் ஒரு துண்டு, அதன் ஆரம்ப எளிய வடிவத்தை தைக்கப்படாத துணியாகப் பிரதிபலிக்கிறது. அது உடலைச் சுற்றி அழகாக மூடப்பட்டிருக்கும்.

சிலைகள் மற்றும் சிற்பங்களில் நவீன புடைவை போன்ற உடையை பெண்கள் அணிந்திருப்பதை சித்தரிக்கின்றன. பாகிஸ்தானில் உள்ள காந்தாரப் பகுதியில் புடைவை அணிந்த பெண் சிற்பங்கள் காணப்படுகின்றன. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பங்கள் பெண்கள் சேலையை ஒத்த ஆடையை அணிந்திருப்பதைக் காட்டுகின்றன.

இதையும் படியுங்கள்:
தலைமுடி நரைப்பதைத் தவிர்க்க கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
World Sari Day

தனித்துவமான பாணிகள்: பல நூற்றாண்டுகளாக இந்தியக் துணை கண்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் தங்களின் தனித்துவமான பாணிகள் மற்றும் நெசவு நுட்பங்களை உருவாக்கியுள்ளன. புடைவையின் பரிணாமம், கலாசார சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகளால் பல மாறுபாடுகளுக்கு உட்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கலாசார அடையாளத்தைக் கொண்டுள்ளன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் புடைவையை உடுத்துவதற்கு ஒரு செழுமையான பாணியை உருவாக்கியுள்ளது.

வரலாற்றுப் பரிணாமம்: இந்தியாவில் புடைவைகளின் வரலாறு என்பது பல்வேறு காலகட்டங்களில் சமூக மற்றும் கலாசார அடையாளத்தின் மாற்றங்களை பிரதிபலிக்கிறது.

வேத சகாப்தம்: பண்டைய இந்தியாவில் புடைவைகள் பருத்தி அல்லது பட்டால் செய்யப்பட்ட எளிமையான ஆடைகளாக இருந்தன. அவை தைக்கப்படாத துணித்துண்டுகளாக பெண்களால் உடலில் சுற்றிக் கொள்ளப்பட்டிருந்தன.

மௌரிய மற்றும் குப்தர் காலம்: துணி உற்பத்தி மற்றும் நெசவு நுட்பங்களில் முன்னேற்றம் அடைந்தது பெண்கள் அலங்காரமான பார்டர்களுடன் கூடிய விரிவான புடைவைகளை அணியத் தொடங்கினர்.

இடைக்காலம்: இது இந்தியாவில் பல்வேறு கலாசார பக்கங்களின் இணைப்பிற்கு சாட்சியாக இருந்தது. முகலாய ஆட்சியாளர்கள் எம்ராய்டரிக் கலையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். பெரிதும் அலங்கரிக்கப்பட்ட புடைவைகளின் வளர்ச்சியை தோற்றுவித்தது. ஜரி வேலைப்பாடு சிக்கலான வடிவங்கள் மற்றும் பணக்கார துணி வகைகள் பிரபலம் அடைந்தன.

இதையும் படியுங்கள்:
தலையணைக்கு அருகில் செல்ஃபோனை வைத்து உறங்குபவரா நீங்கள்? உஷார்!
World Sari Day

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி: இந்தக் காலகட்டத்தில் புடைவைகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டன. இந்தியப் பெண்களை விக்டோரியன் ஆடைகளை ஏற்றுக்கொள்ள ஊக்குவித்தார்கள். புதிய துணிகள் மற்றும் வடிவமைப்புகளை இணைக்கும் பாணி உருவானது. 19ம் நூற்றாண்டில் சேலை மேலும் நவீனமயமாக்கப்பட்டது. பனாரசி, காஞ்சிபுரம், சந்தேரி போன்ற தனித்துவமான வகை புடைவைகள் உருவாகின. ஒவ்வொன்றும் தனித்துவமான உருவங்கள் மற்றும் கைவினைத்திறன் கொண்டவை.

இந்தியப் பெண்ணின் வாழ்க்கையில் புடைவைகளின் பங்கு:

வழிபாட்டு முறைகள்: ஒரு இந்தியப் பெண்ணின் வாழ்க்கையில் பல்வேறு சடங்குகளில் புடைவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு பெண் அணியும் முதல் புடைவை முதல் அவளது திருமணப் புடவை வரை, இந்த ஆடைகள் குறிப்பிடத்தக்க வாழ்க்கை நிகழ்வுகளின் ஒரு பகுதியாகும்.

திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்: திருவிழாக்கள், மத விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின்போது புடைவைகள் அணியப்படுகின்றன. குறிப்பிட்ட புடைவைகள் சுப நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டு, இந்த நிகழ்வுகளின் மகிழ்ச்சியையும் துடிப்பையும் பிரதிபலிக்கின்றன.

நவீனத் தழுவல்கள்: நவீன வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சேலைகள் வெற்றிகரமாக உருவாகியுள்ளது. துணிகள், பிரிண்ட்கள் மற்றும் ஸ்டைல்களில் உள்ள புதுமைகள், தங்கள் கலாசார பாரம்பரியத்தை தொடர்ந்து தழுவிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறை பெண்களுக்கு புடைவைகளை அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளது. புடைவைகளின் நேர்த்தியும் காலத்தால் அழியாத கவர்ச்சியும் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய ஃபேஷன் துறையை வசீகரித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com