பாரம்பரியத்தின் பாதை – காலத்தை கடந்த பயணம்!

temple, field, pot, light, festival, saree, food
Tradaition
Published on

பயணம் என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல; அது காலத்தைக் கடந்து செல்லும் ஒரு மன அனுபவம். 'பாரம்பரியத்தின் பாதை' எனும் இந்தப் பயணம், நம் முன்னோர்கள் பதித்த தடங்களை மீண்டும் தேடிச் செல்லும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. கற்பாறை கோவில்கள், பழங்கால அரண்மனைகள், பாரம்பரிய கிராம வீடுகள், சந்தைகளின் சத்தம், நம் மூதாதையர்கள் உபயோகித்த கருவிகள் – இவை அனைத்தும் காலத்தின் கதைகளை நமக்குச் சொல்கின்றன.

மறைந்திருக்கும் வரலாற்றின் அழகு: பழங்கால நகரங்கள் மற்றும் ஊர்களின் சாலைகள், காலத்தால் மங்கிய கற்சிற்பங்கள், பல நூற்றாண்டுகளாக நிற்கும் ஆலயங்கள் இவை அனைத்தும் நம் வரலாற்று பெருமையை உணர்த்துகின்றன. ஒவ்வொரு கட்டிடமும் ஒரு கதை சொல்லும்; சில கதைகள் வீரத்தினை உணர்த்தும்; சில கதைகள் காதலின் சிறப்பை சொல்லும்; சில கதைகள் தியாகத்தினை படம் பிடித்துக் காட்டும்.

மரபுகளின் மணம்: பாரம்பரிய விழாக்கள், ஆடைகள், இசை, நடனம் இவை அனைத்தும் அந்த இடத்தின் ஆவியை உயிர்ப்பிக்கின்றன. ஒரு கிராமத்தில் நடைபெறும் திருவிழாவைக் காணும் போது, அங்கே பரவியிருக்கும் பூமாலை வாசனை, நாதஸ்வரத்தின் ஒலி, வண்ணக் கொடிகளின் அலங்காரம் எல்லாமும் மனதை வேறொரு காலத்துக்குக் கொண்டு செல்கின்றன.

கலாச்சாரம் மற்றும் விழாக்கள்: தை பொங்கல் திருநாளில் வயல்வெளியில் விளையாடும் பசுக்கள், புது மண் அடுப்பில் பொங்கும் சக்கரைப்பொங்கல். திருவிழா வேளையில் தெருக்களில் விளக்குகள், இசை, ஓலைக்கூடங்கள். கோவில் திருவிழா ஊர்வலம் செல்லும் போது மழை பெய்தாலும் நிற்காத மக்களின் உற்சாகம் அனைத்தையும் என்னவென்று சொல்வதம்மா!

வரலாற்றின் நினைவுச் சின்னங்கள்: பாறைகளில் செதுக்கிய சிற்பங்கள் நூற்றாண்டுகள் கடந்த கோவில்கள் மற்றும் அரண்மனைகள், பழைய சந்தைகளின் நெரிசல் மற்றும் வணிக மரபுகள் பழைய பயணங்களை நினைவூட்டுபவை.

கலை & கைவினைப் பாதைகள்: குயவுப் பணிமனை மற்றும் அதன் மண்வாசனை, கையால் நெய்யப்படும் பட்டு, பருத்தி துணிகள், மரத்தில் பொறிக்கும் அழகிய வடிவங்கள்.

இதையும் படியுங்கள்:
தமிழ் மொழிக்கே உரித்தான சிந்தனைக் கலை எது? அதாங்க நம்ம பட்டிமன்றம்!
temple, field, pot, light, festival, saree, food

இயற்கை & பாரம்பரிய வாழ்க்கை முறை: பாரம்பரிய பாசன முறைகள், விவசாயத்துடன் இணைந்த வாழ்வு, பசுமையும் பண்பாடும் இணைந்த கிராமப்புறம் அனைத்தும் நாம் கடந்து வந்த பாதைகள். அந்தப் பாதையில் நடந்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்களின் கதைகள், பழைய இடங்களில் உருவான உணர்வுகள் பாரம்பரியத்தின் பாதையாக கடந்த காலத்தின் கதவுகளைத் திறக்கும் சாவி.

உணவின் வழியாக வரலாறு: பாரம்பரிய சமையல்களும் ஒரு பயணத்தின் சிறப்பாகும். பழைய கால சமையல் முறைகள், இயற்கை வாசனைகள், நாட்டுப்புற சுவைகள், ஒவ்வொரு மொர்சலும் அந்த இடத்தின் கலாச்சாரத்தை உணர்த்தும். அந்த சுவைகள் தலைமுறைகளை கடந்த நினைவுகளை உயிர்ப்பிக்கின்றன.

இன்றைய வாழ்க்கைக்கான பாடங்கள்: பாரம்பரியத்தின் பாதையில் நடந்தால், எளிமை, ஒருமை, இயற்கையுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மதிப்பு புரிகிறது. அந்த பழைய வாழ்க்கை முறைகள், இன்றைய வேகமான உலகில் நமக்கு அமைதி தரும் வழிமுறைகளைக் கற்பிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
தன்னையே எரித்துக் கொண்டு கவி பாடிய கவிஞர்... உண்மையில் நடந்த சம்பவம்!
temple, field, pot, light, festival, saree, food

பாரம்பரியத்தின் பாதை என்பது நம் வேர்களை நினைவூட்டும் பாலமாகும். அது நமக்கு ஒரு இடத்தின் அழகையும், அதன் ஆன்மாவையும் உணர்த்தும். காலத்தை கடந்த இந்தப் பயணம், நம்மை நம் அடையாளத்துடன் மீண்டும் இணைக்கும் ஒருவித அற்புத அனுபவம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com