பாரம்பரிய ராக்குடி அலங்காரம்: மணப்பெண்களை ராயல் தோற்றத்தில் ஜொலிக்கச் செய்யும் ரகசியம்!

பாரம்பரிய அழகுடன் நவீன காலத்திற்கு ஏற்ப ராக்குடி அலங்காரம் செய்யும் எளிய வழிகள்!
ராக்குடி அலங்காரம் -  Rakudi hair decoration
ராக்குடி அலங்காரம் - Rakudi hair decoration
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

ராக்குடி அலங்காரம் என்பது பெண்களின் தலைமுடியில் அணியப்படும் வட்ட வடிவமான பாரம்பரிய நகையைக் கொண்டு செய்யப்படும் தலை அலங்காரமாகும். பரதநாட்டிய கலைஞர்கள், மணப்பெண்கள் மற்றும் திருவிழாக்களின் பொழுது சுவாமி சிலைகளுக்கு இந்த அலங்காரம் முக்கியமாக செய்யப்படுகிறது.

இது தலைமுடியின் பின்பக்க கொண்டையின் மையப் பகுதியில் வைக்கப்படும் ஒரு வட்ட வடிவமான நகையாகும். பரதநாட்டியப் பெண்கள் தங்கள் தலை அலங்காரத்தில் சூரிய பிரபை, சந்திர பிரபையுடன் சேர்த்து இந்த ராக்குடியையும் அணிவார்கள்.

முற்காலத்தில் பெண்கள் தங்களின் கூந்தலை அழகாக அலங்கரித்து அதன் நடுவே இந்த தங்க அல்லது கல் பதித்த ராக்குடியை அணிவதை ஒரு பெருமையாகக் கருதினார்கள். இது ஜடை பில்லை என்றும் அழைக்கப்படுகிறது. திருமணம், வளைகாப்பு போன்ற விசேஷங்களின் பொழுது பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள இந்த ராக்குடியை இன்றும் பயன்படுத்துகிறார்கள்.

பாரம்பரிய நகை:

ராக்குடி என்பது தங்கம் அல்லது வெள்ளியில் சிவப்பு (கெம்புக் கல்) மற்றும் பச்சைக் கற்கள் பதிக்கப்பட்டு நடுவில் வட்ட வடிவமாக செய்யப்படும் ஒரு கலைநயம் மிக்க நகையாகும். சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிற கெம்ப் கற்கள் (Kemp Stones), முத்துக்கள் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டு பாரம்பரிய தோற்றத்துடன் இவை உருவாக்கப்படுகிறது.

தலைமுடியைப் பின்னி அல்லது கொண்டையிட்டு அதன் மையப் பகுதியில் இந்த நகையை இறுக்கமாக பொருத்துவார்கள். பொதுவாக சூரியனின் வடிவத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டிருக்கும் இது பிரகாசத்தையும் சக்தியையும் குறிப்பதாக கருதப்படுகிறது.

ராக்குடி அலங்காரம் -  Rakudi hair decoration
ராக்குடி அலங்காரம் - Rakudi hair decoration

ஜடை பில்லை அலங்காரம்:

உச்சித் தலையில் ராக்குடியை வைத்து, அங்கிருந்து தொடங்கும் நீண்ட பின்னலில் சூரியன், சந்திரன் மற்றும் ஜடாநாகம் போன்ற மற்ற ஆபரணங்களை வரிசையாகப் பொருத்தி அலங்கரிக்கும் முறை இது. தற்போது அழகுக்கலைத் துறையில் மணப் பெண்களுக்கு எளிதாக பயன்படுத்தும் வகையில் பின்புறம் எளிமையான கிளிப் (Hair Bun Clip) வசதியுடன் கூடிய நவீன ராக்குடி ஆபரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

அரச தோற்றம்:

பொதுவாக மணப்பெண் அலங்காரம் (Bridal Makeup) மற்றும் பரதநாட்டியக் கலைகளில் இந்த அலங்காரம் கூந்தலுக்கு ஒரு கம்பீரமான, பழமையான மற்றும் அரச தோற்றத்தை (Heritage & Royal Look) வழங்குகிறது. தற்பொழுது அழகுக்கலையில் ஆடை மற்றும் தீமிற்கு (Theme) ஏற்ப பல வகையான ராக்குடிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அழகுக் கலை நிபுணர்கள் (Beauticians) ராக்குடியை இரண்டு முக்கியமான வழிகளில் அலங்கரிக்கின்றனர். கொண்டை அலங்காரம் மற்றும் ஜடை அலங்காரம்என்று.

*கொண்டை அலங்காரம் (Bun Style):

கொண்டை அலங்காரத்தில் தலைமுடியை உயரமாக அள்ளி ஜூடா (Juda Bun) அல்லது கொண்டையாக மாற்றி, அதன் நடுப்பகுதியில் ராக்குடி வில்லை பொருத்தப்படுகிறது. இந்த வட்ட வடிவ ஆபரணத்தைச் சுற்றி மல்லிகை பூ, கனகாம்பரம் அல்லது செயற்கை மலர்ச் சரங்கள் போன்ற பூச்சரங்கள் சூட்டப்படுகிறது.

*ஜடை அலங்காரம் (Braid Style):

தலைமுடியை நடுவகிடு எடுத்து நீளமாகப் பின்னி ஜடை நாகம் அல்லது ஜடை வில்லைகள் வைப்பதற்கு முன்பாக கூந்தலின் உச்சிப் பகுதியில் ராக்குடி வைத்து, இதன் கீழ் பிறை வடிவிலான சந்திரன் ஆபரணமும் அதைத் தொடர்ந்து தாழம்பூ அமைப்பும் பொருத்தப்பட்டு ஒரு ராயல் தோற்றத்தை தரக்கூடிய அலங்காரமாக செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஜரிகை மத்தாப்பூ வேண்டாம்! இந்த தீபாவளிக்கு 'க்வயட் லக்ஸுரி' ட்ரெண்ட்!
ராக்குடி அலங்காரம் -  Rakudi hair decoration

நவீன ராக்குடி அலங்கார டிப்ஸ்:

பாரம்பரிய கொண்டை மட்டுமின்றி தற்காலிக ட்ரெண்டில் உள்ள 'மெஸ்ஸி பன்' (Messy Bun) நடுவே ஒரு பெரிய ஆன்டிக் ராக்குடியை வைப்பது.

கூந்தலைப் பாதியாக வாரி பின்னால் கிளிப் போடும் இடத்தில் சிறிய அளவிலான ராக்குடி பின்னைப் பயன்படுத்துவது லெஹங்கா மற்றும் கவுன்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

பளபளப்பான தங்க நிறத்திற்கு பதிலாக ஆன்டிக் கோல்டு அல்லது மேட் ஃபினிஷ் கொண்ட கெம்ப் கற்கள் பதிக்கப்பட்ட ராக்குடிகள் மாடர்ன் பட்டுப்புடைகளுக்கு ராயல் லுக் தரும்.

முத்துச்சரங்கள் அல்லது குந்தன் கற்கள் பதிக்கப்பட்ட ராக்குடிகள் நவீன பேஸ்டல் நிற ஆடைகளுக்கு (Pastel Colours) கச்சிதமாகப் பொருந்தும்.

தற்போதைய ட்ரெண்டில் பிளவுஸில் உள்ள ஆரி ஒர்க் டிசைனை நெட் துணியில் தனியாகச் செய்து அதை ராக்குடி போல கொண்டையின் மீது பொருத்துகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய கொண்டைகளும் பொய் முடி வரலாறும்: தமிழர்களின் அழகு ரகசியங்கள்!
ராக்குடி அலங்காரம் -  Rakudi hair decoration