திருச்சி பொன்மலை சந்தை: உழவர் சந்தை டூ தமிழ்நாட்டின் மிகப்பெரிய செல்லப்பிராணிகள் மார்க்கெட்!

1926-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் தொடங்கி, இன்று வரை வாரந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் பிரம்மாண்ட பொன்மலை ஞாயிறு சந்தை!
பொன்மலை சந்தை - Ponmalai Sunday Market
பொன்மலை சந்தை - Ponmalai Sunday Market
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

பிரிட்டிஷ் காலனித்துவ காலத்துப் பகுதியான திருச்சி பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப் குடியிருப்பு, கால ஓட்டத்தில் தனது பரபரப்பை பெருமளவு இழந்திருக்கலாம், ஆனால் பொன்மலை சந்தையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகள் இப்பகுதியைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. நகரில் பல பிரிட்டிஷ் காலக் கட்டிடங்கள் மறைந்துவிட்ட போதிலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த ரயில்வே குடியிருப்பில் நடைபெறும் வாராந்திர சந்தை, மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக நிலைத்து நிற்கிறது.

1926-ல், பிரிட்டிஷ் நிர்வாகிகள் கடலோர நாகப்பட்டினத்திலிருந்து நிலத்தால் சூழப்பட்ட நகரமான பொன்மலைக்கு மத்திய ரயில்வே பட்டறையை மாற்றி, அதன் கட்டுமானத்தைத் தொடங்கிய உடனேயே, பட்டறைத் தொழிலாளர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரயில்வே மைதானத்தில் ஒரு காய்கறிச் சந்தை உருவானது. அது தான் பொன்மலை ஞாயிற்றுக்கிழமை சந்தை.

ஆரம்பகாலத்தில் உழவார் சந்தையாக செயல்பட்டு வந்த பொன்மலை சந்தை, 1928-ல் ராக்போர்ட் ஒர்க் ஷாப் தொடங்கப்பட்ட பிறகு இந்தச் சந்தை செழித்து வளர்ந்தது .ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தச் சந்தையில், மக்கள் தொகை பெருக்கத்தால் மக்களுக்கு தேவையான அனைத்து வகை உணவு பொருட்கள் முதல், வீட்டு உபயோகப் பொருட்கள், துணி வகைகள், இறைச்சி மற்றும் மீன், கோழி, கால்நடைகள் மற்றும் இதர பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மூர் மார்க்கெட் முதல் பட்டாணி சுண்டல் வரை... மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!
பொன்மலை சந்தை - Ponmalai Sunday Market

இரயில்வே ஊழியர்களுக்கு மாதம் இருமுறை சம்பளம் ரொக்கமாக வழங்கப்பட்டதால், தொடக்கத்தில், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும், ஞாயிற்றுக்கிழமைகளில் விடியற்காலை முதல் சாயங்காலம் வரையிலும் சந்தை பரபரப்பாகச் செயல்பட்டது.

பின்னர் ஒவ்வொரு மாதமும் 3-ம் தேதி ரொக்கமாகச் சம்பளம் வழங்கப்பட்டபோது, இருவார கால அட்டவணையைக் கைவிட்டு அந்த நாட்களில் மட்டுமே சந்தை நடத்தப்பட்டது. ஊழியர்களின் சம்பளம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதால், கடந்த பல ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமை மட்டுமே தற்பொழுது சந்தை செயல்படுகிறது.

தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 250-300 விற்பனையாளர்கள் கடைகளை அமைக்கின்றனர். காலை 6 மணிக்கு வியாபாரம் தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்கிறது. நாமக்கல் மற்றும் கரூர் போன்ற தொலைதூர இடங்களிலிருந்தும் விற்பனையாளர்களும் வாடிக்கையாளர்களும் வருகின்றனர். சில ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு 30,000 பேர் வருகின்றனர்.

பொன்மலை சந்தை - Ponmalai Sunday Market
பொன்மலை சந்தை - Ponmalai Sunday Market

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தான் செல்லப் பிராணிகள் விற்பனையும், பச்சை குத்திக்கொள்ளும் கடைகளும் புதிதாகச் சேர்க்கப்பட்டன. ஆனால் , தற்போது தமிழ்நாட்டின் மிகப்பெரிய செல்லப்பிராணிகள் சந்தைபொன்மலை சந்தைதான்.

மிக முக்கிய சிறப்பம்சமே இதன் செல்லப்பிராணிகள் (Pet Market) பிரிவுதான். அனைத்து வகையான வளர்ப்பு பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் ஒரு புறமும், அதற்கு தேவையான கூண்டுகள் மற்றும் உணவுப் பொருட்களும் மற்றொரு புறமும் விற்பனை செய்கின்றனர். திருச்சியில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இங்கு கூடுகிறார்கள்.

Love Birds, வாத்து, கிளி வகைகள், புறா, சண்டைக் கோழி, வளர்ப்பு கோழி மற்றும் பலதரப்பட்ட பறவை வகைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. செல்லப்பிராணி வகைகளான நாய், பூனை, முயல் மற்றும் பலதரப்பட்ட செல்லப்பிராணி வகைகள்.அதற்கு அடுத்து வளர்ப்பு பறவை மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இங்கு விற்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து செடி வகைகள் மற்றும் மரக்கன்றுகள் விற்கப்படுகின்றன.

நகரத்தைச் சேர்ந்த பகுதி நேர விற்பனையாளர்களும், கிராம வியாபாரிகளும் அரிய வகை செல்ல நாய்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், காடை முட்டைகள் முதல் குறைந்த விலை மளிகைப் பொருட்கள் வரை அனைத்தையும் விற்கின்றனர். வண்ணமயமான மீன்கள் மற்றும் அதற்கு தேவையான மீன் தொட்டிகள் மற்றும் உணவு பொருட்கள் எல்லாம் இங்கு கிடைக்கின்றன. இதற்கெனவே பல கடைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வீட்டுக்கு தேவையான மரப் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூஜை பொருட்கள் என பலவகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
மூர் மார்க்கெட் முதல் பட்டாணி சுண்டல் வரை... மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!
பொன்மலை சந்தை - Ponmalai Sunday Market

பொன்மலை சந்தை திருச்சி சத்திரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சந்தையின் ஆரம்ப இடத்தில் மீன் இறைச்சி மற்றும் அனைத்து வகையான மீன்கள் விற்பனை செய்யப் படுகிறது. அதற்கு அடுத்ததாக காய்கறி வகைகள், மளிகை பொருட்கள், துணிக்கடைகள் மற்றும் பாத்திர வகைகள் என பலவிதமான அத்தியாவசிய பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சந்தை ஆரம்பத்தில் உழவர் சந்தையாக ஆரம்பிக்கப்பட்டதால்.அன்று முதல் இன்று வரை மலிவான விலையில் காய்கறிகள் விற்கப்படுகின்றன. வாரச் சந்தை என்பதால் நாள் முழுவதும் ஆயிரக் கணக்கானோர் பொன்மலை சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கியும் விற்பனை செய்தும் வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லாதது இந்த நூற்றாண்டு கண்ட சந்தையின் ஒரு குறைபாடு.அதே வேளையில் மழைக்காலத்தில் இந்த சந்தை சேறும் சகதியுமாகிவிடும் என்பதும் ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அடேங்கப்பா! பல கோடிகளுக்கு விற்பனையான உலகின் 5 சிறந்த ஓவியங்கள்!
பொன்மலை சந்தை - Ponmalai Sunday Market

சந்தையின் செயல்பாடு ஒரு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விற்பனையாளர் களுக்குக் கடைகளை ஒதுக்கித் தந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. “ஒப்பந்தத்தின்படி, உரிமம் பெற்றவர் நடமாடும் கழிப்பறைகளை நிறுவி, சுகாதாரமான சூழலை உறுதி செய்யவேண்டும். உரிமம் பெற்றவர் தற்போது நடமாடும் கழிப்பறைகளுக்கான தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்,” என்று திருச்சி ரயில்வே கோட்டத்தின் ஓர் அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com