புத்தாண்டை வரவேற்க 'பன்னிரண்டு திராட்சைகள்' விழா!

'Twelve Grapes' Festival to welcome the New Year
'Twelve Grapes' Festival
Published on

ஜப்பான் மற்றும் போர்த்துக்கீசியத்தில் புத்தாண்டை வரவேற்கும் 'பன்னிரண்டு திராட்சைகள்' விழா

கிரிகோரியன் நாட்காட்டியின்படி டிசம்பர் 31 ஆம் நாளானது ஆண்டின் கடைசி நாளாக இருக்கிறது. இந்நாளில் ஜப்பான் மற்றும் போர்த்துக்கீசிய வழக்கப்படி, டிசம்பர் 31 அன்று நள்ளிரவில் ‘பன்னிரண்டு திராட்சைகள்’ (Twelve Grapes) எனும் விழா கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வானது, புத்தாண்டை வரவேற்க டிசம்பர் 31 அன்று நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்குக் கடிகார மணி ஒலிக்கும் போது, ஒவ்வொரு மணியோசைக்கும் ஒரு திராட்சையைச் சாப்பிடுவதை மரபு வழியாகக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு திராட்சையும், கடிகார மணியின் பன்னிரண்டும், ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள பன்னிரண்டு மாதங்களைப் பிரதிபலிக்கிறது.

இந்த மரபு வழியிலான நிகழ்வு 1895 ஆம் ஆண்டில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகு 1909 ஆம் ஆண்டில் மக்கள் மத்தியில் ஒருங்கிணைக்கப்பட்டது என்கின்றனர். 1909 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், அலிகாண்டீசு திராட்சை வளர்ப்பவர்கள், அதிக எண்ணிக்கையிலான திராட்சைகளை விற்பதற்காக இந்த வழக்கத்தை பரப்பினர் என்றும் சொல்வதுண்டு.

இதையும் படியுங்கள்:
பிளேடுகளின் நடுப்பகுதி ஏன் ஒரே மாதிரியான வடிவமைப்பைப் பெற்றுள்ளன தெரியுமா?
'Twelve Grapes' Festival to welcome the New Year

ஜப்பானிய மற்றும் போர்த்துக்கீசிய மரபு வழிகளின் படி, பன்னிரண்டு திராட்சைகளைச் சாப்பிடுவது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கிறது என்கிற நம்பிக்கை மிகுதியாக இருக்கிறது. இந்த நடைமுறை, முன்பு மந்திரவாதிகள் மற்றும் தீமைகளை விரட்டுவதாக நம்பப்பட்டது. ஆனால், தற்பொழுது இந்த நிகழ்வு பெரும்பாலும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் வரவேற்பதற்குமான ஒரு மரபு வழியிலான நிகழ்வாக மாற்றம் பெற்றுவிட்டது.

பன்னிரண்டு திராட்சைகளைச் சாப்பிட மக்கள் இரண்டு வகையான இடங்களில் கூடுகின்றனர். நோசெவிஜா எனப்படும் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு உணவிற்குப் பிறகு, இல்லங்களில் குடும்ப உறுப்பினர்கள் கூடி உண்கின்றனர். மற்றொரு வகையாக, நாடு முழுவதும் உள்ள முக்கிய சதுக்கங்களில் மக்கள் ஒன்று கூடி பன்னிரண்டு திராட்சைகளை உண்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
நீதிமன்றத்தில் வழங்கப்படும் வாய்தா பற்றி தெரியுமா?
'Twelve Grapes' Festival to welcome the New Year

மத்ரித் எனும் மரபு வழியைப் பின்பற்றி வருபவர்கள், புவேர்டா டெல் சோலில் உள்ள அரச இல்லத் தபால் நிலையக் கடிகாரத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையதாகக் கொண்டு, அவ்வேளையில் பன்னிரண்டு திராட்சைகள் உண்ணும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இந்நிகழ்வை ஜப்பான் நாட்டின் அனைத்து முக்கியமான தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வானொலி நிலையங்கள் வழியாக ஒளி ஒலி பரப்பு செய்யப்படுகின்றன.

பன்னிரண்டு திராட்சைகள் எனும் இந்நிகழ்வு ஜப்பான் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பரந்த கலாச்சார உறவைக் கொண்ட இடங்களிலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஹிஸ்பானிக் சமூகங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மரபு வழி நிகழ்வுகள் ஹிஸ்பானிக் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் ஒரு பகுதியாக இணைந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com