திருமணத்தில் இருபத்தைந்து வகைகளா? தலை சுத்துதடா சாமி!

Twenty-five types of marriage
Twenty-five types of marriage

திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கிடையிலான உறவு என்று பொதுவாக வரையறுக்கப்படுகிறது. பண்டையக் காலத்தில் எட்டு வகையாகப் பிரிக்கப்பட்ட திருமணம், தற்போது 25 வகைகளுக்கும் அதிகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. வாங்க, தற்போதைய திருமண வகைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

1. குடிசார் மற்றும் சமயத் திருமணம்

திருமணமானது அரசால் அங்கீகரிக்கப்படும் போது, அது குடிசார் திருமணம் (Civil Marriage) எனப்படுகிறது. அதேத் திருமணம், சமய அடிப்படையில் கோயில், தேவாலயங்களில் நடைபெற்று, சமய அமைப்பிலிருந்து அங்கீகாரம் பெறப்படும் போது அதனைச் சமயத் திருமணம் என்கின்றனர்.

2. நம்பிக்கைகளுக்கிடையேத் திருமணம்

சமயம் நம் வாழ்வில் பெரும்பகுதியாக இணைந்திருக்கிறது. முன்பெல்லாம், ஒரே சமயத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள். தற்போது, அது மாறுபட்டு வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். இரு வேறு சமயங்களுக்கிடையிலான திருமணம் என்பதால், இது நம்பிக்கைகளுக்கிடையேத் திருமணம் எனப்படுகிறது.

3. பொதுச் சட்டத் திருமணம்

பொதுச் சட்டத் திருமணம் என்பது இருவர் திருமணம் செய்து கொண்டு கணவன் – மனைவி போல் ஒன்றாக வாழ்பவர்களைக் குறிக்கிறது.

4. ஒரு தார மணம்

ஒரு தார மணம் என்பது உலகெங்கிலும் உள்ள மக்களிடையே வழக்கத்திலிருக்கும் பொதுவான திருமணமாகும். திருமணத்திற்கு வெளியே வேறு யாருடனும் உணர்ச்சி ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ ஈடுபடாமல் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டு வாழும் திருமணமாகும்.

5. பல தார மணம்

பல தார மணம் என்பது இப்போது சாதாரணமாக இல்லாவிட்டாலும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கமாக இருந்தது. மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரப்பூர்வ வாழ்க்கைத் துணைகளைக் கொண்டிருந்தனர்.

6. இடது கை திருமணம்

திருமண வகையில் உயர்நிலையிலுள்ள ஆணுக்கும் தாழ்நிலையிலுள்ள பெண்ணுக்கும் இடையே நிகழ்கிற திருமணம் இவ்வகையைச் சேர்ந்தது.

7. ரகசியத் திருமணம்

இவ்வகைத் திருமணம், சமூகம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து மறைக்கப்பட்ட திருமணமாகும். அவர்களது குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரிவிக்காமல், இரண்டு பேர் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதாகும்.

8. வேட்டைத் துப்பாக்கித் திருமணம்

ஆண் – பெண் இருவருக்கிடையே ஏற்பட்ட நெருக்கத்தால் உருவான கர்ப்பத்தின் காரணமாக, ஆணும் பெண்ணும் உடனடியாகத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது, அதை வேட்டைத் துப்பாக்கி திருமணம் என்கின்றனர்.

9. கலப்புத் திருமணம்

கலப்புத் திருமணம் என்பது இரு வேறு இனங்களுக்கு இடையிலான திருமணம் என்று அழைக்கப்படுகிறது. முன்பு தங்கள் சொந்த இனத்தில் மட்டுமேத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். தற்போது, பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் திருமணத்தில் ஒன்று சேர்கிறார்கள்.

10. ஒரே பாலினத் திருமணம்

ஓரினச் சேர்க்கைத் திருமணம் தற்போது பரவலாகி வருகிறது. சமூகவியலில் மற்ற வகை திருமணங்களைப் போல, இவ்வகைத் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும், ஒரே பாலினத் திருமணங்கள், உலகின் பல பகுதிகளில் சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கின்றன. இவ்வகைத் திருமணங்கள் சமூகக் கட்டமைப்பிற்கு மாறாக, ஒரு ஆண் ஆணை மணக்கிறான், ஒரு பெண் ஒரு பெண்ணை மணக்கிறாள்.

11. காதல் திருமணம்

காதல் திருமணம் என்பது ஒருவரையொருவர் நேசிப்பதால் திருமணம் செய்து கொள்ளும் திருமணமாகும். இது தற்போதைய நாகரீகத்தின் அடுத்தபடியாக இருக்கிறது.

12. ஏற்பாடு திருமணம்

குடும்பம், இனம், சமயம், சாதி போன்ற காரணிகளை மனதில் வைத்து, அனைத்திலும் சரியான ஆண் – பெண் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களுக்கிடையேத் திருமணம் செய்யப் பெரியோர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்படும் திருமணம் இவ்வகையைச் சேர்ந்தது.

13. வசதியான திருமணம்

இரண்டு பேர் தங்கள் வாழ்க்கையில் வசதியைக் கொண்டு வரும் காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்வது. இவ்வகைத் திருமணம் அன்பின் காரணமானது அல்ல. பணம் மற்றும் ஆடம்பரத்தைச் சேர்ந்தது.

14. நடைப்பிணத் திருமணம்

மூடிய கதவுகளுக்குப் பின்னால், இருவருக்கிடையே எந்த வகையான உறவையும் பகிர்ந்து கொள்ளாமல் பெயரளவில் வெளிப்படையாகச் செய்து கொள்ளப்பட்ட திருமணம் இவ்வகையைச் சேர்ந்தது. இவ்வகைத் திருமணங்களால் இருவரும் நடைப்பிணம் போன்றவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

15. குழுத் திருமணம்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை மணந்தால் குழுத் திருமணம் ஆகும். இது பல தார மணத்தில் இருந்து வேறுபட்டது, ஏனெனில் இங்கு, ஒரு குழுவினர் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதே வேளை, பலதார மணத்தில், ஒரு நபருக்கு பல மனைவிகள் உள்ளனர்.

16. பெற்றோர் திருமணம்

இந்த நாட்களில் மிகவும் பொதுவான திருமணத்தின் வெவ்வேறு வடிவங்களில் மற்றொன்று பெற்றோருக்குரிய திருமணம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு பேர் தங்கள் குழந்தைகளுக்காக ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.

17. பாதுகாப்புத் திருமணம்

பாதுகாப்பான திருமணம் என்பது ஒரு திருமணம் நிகழும் போது, அதற்குப் பதிலாக உறுதியான, பெரும்பாலும் பொருள் சார்ந்த ஒன்று கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. இந்த விதிமுறைகள் திருமணத்திற்கு முன்பேத் தீர்மானிக்கப்படுகின்றன.

18. திறந்த திருமணம்

அண்மைக் காலமாக பிரபலமாகி வரும் திருமணங்களில் ஒன்று வெளிப்படையான திருமணம். அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்ட இருவர், திருமணத்திற்கு வெளியே, தங்களுக்கு வேண்டியவர்களுடன் இணைந்து கொள்ள ஒருவருக்கொருவர் அனுமதிப்பது.

19. நீதிமன்றத் திருமணம்

நீதிமன்றத் திருமணம் என்பது, தம்பதியர் பாரம்பரிய விழாவைத் தவிர்த்து, நேரடியாக நீதிமன்றத்தில் தங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்து, திருமணச் சான்றிதழ் வழங்க விண்ணப்பிப்பது.

20. கால வரையறைத் திருமணம்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் திருமணம் செய்து கொண்டு இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்து, அதன் வழியாக மேற்கொள்ளும் திருமணம் கால வரையறைத் திருமணம் எனப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கின்னஸ் சாதனைப் படைத்த ‘மிகபெரும் மரபுவழி நடனம்’!
Twenty-five types of marriage

21. கூட்டாண்மைத் திருமணம்

இந்த வகையான திருமணத்தில், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் தங்களுக்கிடையே வணிகப் பங்காளிகளைப் போலச் செயல்படுகிறார்கள். அவர்கள் பல வழிகளில் சமமானவர்கள். பெரும்பாலும், அவர்கள் இருவரும் முழுநேர வேலைகளைச் செய்கிறார்கள். வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை வளர்ப்புப் பொறுப்புகளை சமமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வகையான திருமணங்களில், தம்பதிகள் தங்கள் பாதி பங்களிப்பில் ஆர்வமாக உள்ளனர், இது ஒரு முழுமையான ஒற்றுமையை உருவாக்குகிறது என்று அவர்கள் கருதுகின்றனர்.

22. சுயேச்சைத் திருமணம்

இந்த வகையான திருமணம் செய்து கொண்டவர்கள் சுயாட்சியை விரும்புகிறார்கள். அவர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒருவருக்கொருவர் தனித்தனியாக வாழ்கிறார்கள். ஒவ்வொரு நபரின் எண்ணங்களும் உணர்வுகளும் அவர்களிடமிருந்து தனித்தனியாகவும், அவர்களின் சொந்த உரிமையில் மதிப்பு மிக்கதாகவும் இருப்பதால், அவர்கள் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்காமல் வாழ்ந்து வருவது.

23. பட்டம் தேடும் திருமணம்

இந்த வகையான திருமணங்களில், கணவனும் மனைவியும் முற்றிலும் வேறுபட்டவர்கள் – எதிர்மறையாகவும் இருக்கிறார்கள். ஒருவர் ஏதோவொன்றில் நன்றாக இருக்க முடியும், மற்றொன்று அவ்வளவு அதிகமாக இல்லை, மற்றும் நேர்மாறாகவும் இருக்கலாம். எனவே அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர் வளர்க்க விரும்பும் திறன்களை மட்டுமேக் கொண்டு செயல்படுபவர்களாக இருக்கின்றனர்.

24. “பாரம்பரிய” பாத்திரத் திருமணம்

பழையத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சித்தரிக்கப்பட்ட திருமணம் இதுவாகும். மனைவி வீட்டில் தங்கி, வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். கணவர் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டி வர வேண்டும்.

25. தோழமை

இந்த வகைத் திருமணத்தில், கணவனும் மனைவியும் ஒரு வாழ்நாள் நண்பனை விரும்புகிறார்கள். அவர்களின் உறவு பழக்கமானது மற்றும் அன்பானது. இத்திருமண வாழ்க்கையானது ஒருவருடன் ஒருவர் தங்கள் வாழ்க்கையை நட்புடன் பகிர்ந்து கொள்வதாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com