

வரலாறு என்பது பல உண்மைகளையும், அதிசயங்களையும் தன்னுள் மறைத்து வைத்துள்ளது. இந்த நவீன உலகத்திலும் சில வரலாற்றுச் சம்பவங்கள், காலம் கடந்தும் இன்னும் விளக்கமளிக்க முடியாத புதிர்களாகவே இருக்கின்றன. அதனடிப்படையில், விஞ்ஞானிகளையும் வரலாற்றாசிரியர்களையும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் சில விசித்திரமான வரலாற்றுச் சம்பவங்களைப் பற்றி இந்தப் அப்தில் பார்க்கலாம்.
1. மேரி செலஸ்டி கப்பலின் மர்மம் (The Mystery of Mary Celeste):
1872 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் 'மேரி செலஸ்டி' என்ற கப்பல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. மற்றொரு கப்பலில் வந்த மாலுமிகள் அதைச் சோதித்தபோது, உள்ளே ஒருவரைக் கூட காணவில்லை. அதே சமயம், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கப்பலில் இருந்த உணவுகள், பொருட்கள் மற்றும் மாலுமிகளின் உடமைகள் அப்படியே இருந்தன. கப்பலில் இருந்த ஆல்கஹால் பீப்பாய்களில் சில கசிந்து, வெடிப்பு ஏற்படும் என்ற பயத்தில் மாலுமிகள் உயிர் காக்கும் படகில் ஏறிச் சென்றிருக்கலாம் என்பது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்றும் மர்மமே.
2. Dan Cooper விமான கடத்தல்:
1971 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 'டிபி கூப்பர்' என்ற நபர் ஒருவர், ஒரு விமானத்தைக் கடத்தினார். பயணிகளை விடுவிக்க 2,00,000 டாலர் பணத்தைப் பெற்றுக் கொண்டர். பின்பு அவர், நடுவானில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தார்.
அதன்பிறகு அவர் என்ன ஆனார்; அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது எங்கே மறைந்தார் என்பது பற்றி ஒரு சிறு துப்பு கூட அமெரிக்க எஃப்பிஐ (FBI) அமைப்புக்குக் கிடைக்கவில்லை. வரலாற்றில் பிடிபடாத ஒரே விமானக் கடத்தல்காரர் இவர்தான்.
3. இந்தியப் பெருங்கடலின் மர்ம ஒலிகள்:
கடலடியில் கேட்கும் சில விசித்திரமான ஒலிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களைக் குழப்பி வருகின்றன. குறிப்பாக 1997 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 'தி ப்ளூப்' (The Bloop) என்ற மிக உரத்த ஒலி. இந்த ஒலி ஒரு நீலத் திமிங்கிலத்தை விட பல மடங்கு பெரிய உயிரினம் எழுப்பியது போல இருந்தது. அண்டார்டிகா பகுதியில் பெரிய பனிப்பாறைகள் உடையும்போது ஏற்படும் அதிர்வு என்று NOAA (National Oceanic and Atmospheric Administration) உறுதிப்படுத்தியது. இருப்பினும், கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் இதை இன்னும் மர்மமாகவே பார்க்கிறார்கள்.
4. Dyatlov Pass Incident:
1959 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் உள்ள உரால் மலைப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது. ஒன்பது மாணவர்கள் மலை ஏறும் பயணத்தில் சென்றபோது, அவர்கள் மர்மமான சூழ்நிலைகளில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அவர்களின் கூடாரம் உள்ளிருந்து கிழிக்கப்பட்டிருந்தது. சிலர் பாதி உடையுடன் பனியில் ஓடியதற்கான அடையாளங்கள் இருந்தன. சிலருக்கு கடுமையான காயங்கள் இருந்தன. ஆனால், வெளிப்புற காயங்கள் இல்லை. 2020-களில் நடத்தப்பட்ட புதிய ஆய்வுகள், இதற்கு ஒருவகை 'சிறிய அளவிலான பனிச்சரிவு' காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றன. ஆனாலும், சிதைந்த உடல்கள் மற்றும் கதிரியக்கத் துகள்கள் பற்றிய கேள்விகளுக்கு முழுமையான பதில் இன்னும் கிடைக்கவில்லை.
5. Tunguska Event:
1908 ஆம் ஆண்டு, சைபீரியாவில் உள்ள டுங்குஸ்கா பகுதியில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. அது சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மரங்களை சாய்த்தது. ஒரு விண்கல் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து மோதலுக்கு முன்பே வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்பதே தற்போதைய விஞ்ஞானிகளின் பொதுவான கருத்து. ஆனால் அங்கு விண்கல் துகள்கள் கிடைக்காதது மர்மத்தை நீட்டிக்கிறது.
6. Wow! Signal:
1977 ஆம் ஆண்டு, விண்வெளியில் இருந்து ஒரு விசித்திரமான ரேடியோ சிக்னல் பதிவானது. அது 72 விநாடிகள் மட்டுமே நீடித்தது. அந்த சிக்னலை கண்ட விஞ்ஞானி, அதனை 'Wow!' என்று குறிப்பிட்டதால் இது அந்த பெயரால் அழைக்கப்படுகிறது. இது வேறு கிரக உயிரினங்களின் சிக்னலா? அல்லது இயற்கையான ஒரு நிகழ்வா? என இதுவரை இதற்கான உறுதியான பதில் இல்லை.
மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் மனித அறிவுக்கு சவாலாக இருக்கின்றன. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் எவ்வளவு வளர்ந்தாலும், சில விஷயங்கள் இன்னும் விளக்கமளிக்க முடியாதவையாகவே இருக்கின்றன. இந்த மர்மங்கள், மனிதர்களின் ஆர்வத்தையும் ஆராய்ச்சியையும் தொடர்ந்து தூண்டிக் கொண்டே இருக்கின்றன.