இதுவரை போரில் கலந்து கொள்ளாத இராணுவத்தினர் எந்த நாட்டில் உள்ளனர் தெரியுமா?

War
War
Published on

இது வரை இந்த நாட்டின் ராணுவ வீரர்கள் எந்தப் போரிலும் ஈடுபடுட்டதில்லை. இவர்கள் மீது எந்த நாடும் போர் தொடுக்கப்பபோவதும் இல்லை. அதனால் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. மற்ற நாட்டு இராணுவத்தினரை போல எப்போதும் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் இந்த நாட்டின் மீது மதிப்போடு இருப்பதால் யாரும் சண்டைக்கும் வர மாட்டார்கள். அப்படிப்பட்ட இராணுவத்தினர் இருக்கும் நாடு தான் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் வசிக்கும் வாடிகன் நகர்.

உலகின் மிகச் சிறிய நாடான வாடிகன் நகரம், இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்குள் அமைந்துள்ளது. வாடிகனை சுற்றி இத்தாலி இருப்பதால் அவர்கள் எப்போதும் அரணாக இருப்பார்கள். அதனால் வாடிகன் அமைதி பூமியாகவே இருக்கிறது. இந்த நாட்டின் இராணுவத்தினர்தான் இதுவரை எந்த ஒரு சண்டையிலும் ஈடுபட்டதில்லை. இவர்கள் போன்டிஃபிகல் சுவிஸ் காவலர் என்று அழைக்கப்படுகின்றனர். போப்பின் பாதுகாவலர்களாக இவர்கள் இருப்பதால் இவர்களுக்கு மற்ற நாட்டு இராணுவத்தினரை விட மதிப்பு அதிகம் கொடுக்கப்படுகிறது. இவர்களின் பாதுகாப்பு பணிகள் பெரும்பாலும் வாடிகன் நகர் எல்லைக்குள் மட்டும் என்பதால் அது பாதுகாப்பான வேலையாக உள்ளது. 

இதையும் படியுங்கள்:
கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் மயிலாப்பூர் திருவிழா 2025!
War

போன்டிஃபிகல் சுவிஸ் காவலர் பிரிவு மரியாதைக்கான காவலர் பிரிவாக இருந்தாலும், இது ஆயுதம் தாங்கிய ராணுவமாகும். இவர்கள் பாரம்பரியமிக்க ஈட்டி போன்ற ஹால்பர்ட் ரக ஆயுதத்தை பயன்படுத்தினாலும் சிறிய ரக நவீன துப்பாக்கிகளையும் பயன்படுத்துவதிலும் பயிற்சி பெற்றவர்கள். சுவிஸ் காவலர் சீருடை 15 ஆம் நூற்றாண்டில் தோற்றம் கொண்டது. இவர்களின் தொப்பிகள், உடைகள், கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் அனைத்துமே பழமையையும் கலாச்சாரத்தையும் நினைவுபடுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
‘பெருங்கல் சவுக்கை’ பற்றித் தெரியுமா?
War

தகுதிகள் : 

சுவிஸ் காவலர் பணியில் சேர ஒருவர் சுவிட்சர்லாந்தின் குடிமகனாகவும், ரோமன் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 அடி 8 அங்குல உயரம் மற்றும் ஆண்களாகவும் இருக்க வேண்டும். இந்த ராணுவத்தில் புதியவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே 6 ஆம் தேதி பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இரண்டு வருடம் மட்டுமே இவர்கள் இந்த பணியில் ஈடுபட முடியும். 

விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினைக் கொண்ட 150 இராணுவ வீரர்களைக் கொண்ட இந்த சிறிய குழு போப்பைப் பாதுகாக்கிறது. இவர்களின் காவல் எல்லை 100 ஏக்கர் பரப்பை கொண்ட வாடிகன் நகருக்குள் வருகிறது. 

பாதுகாப்பு பணி:

சுவிஸ் காவலரின் பாதுகாப்புப் பணியானது போப்பின் அப்போஸ்தலிக்கப் பயணங்கள், காஸ்டல் கந்தோல்போவின் போன்டிஃபிகல் அரண்மனை மற்றும் போப்பாண்டவர் சிம்மாசனம் காலியாக இருக்கும்போது கார்டினல்கள் கல்லூரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போப் வசிக்கும் அப்போஸ்தலிக்க அரண்மனையைப் பாதுகாப்பதற்குப் ஹோலி சீ என்ற உயரடுக்கு இராணுவப் பிரிவு உள்ளது.

இதையும் படியுங்கள்:
கொரிய கலாச்சாரத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! 
War

இந்த ஸ்விஸ் காவல் படைக்கு மாத சம்பளமாக 4-5 லட்ச ரூபாய் தரப்படுகிறது. மேலும் இவர்களுக்கு ஆண்டு தோறும் 13 மாத சம்பளமும் 1 மாத விடுமுறையும், பிற படிகளும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இவர்களின் ஆண்டு வருமானம் 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி வரை தாராளமாக வருகிறது. தங்கும் வீடுகளும் உணவும் மற்ற வசதிகளும் இலவசமாக செய்து தரப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com