‘பெருங்கல் சவுக்கை’ பற்றித் தெரியுமா?

பெருங்கல் சவுக்கை - Mên-an-Tol
பெருங்கல் சவுக்கை - Mên-an-Tol
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

பெருங்கற்கால மக்கள் காலக்கணிப்புக்குப் பயன்படுத்திய அமைப்பினை, ‘பெருங்கல் சவுக்கை' என்கின்றனர். இந்தப் பெருங்கல் அமைப்பானது, இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள பழனியிலும், இங்கிலாந்து நாட்டில், கோர்ன்வால் மாகாணத்திலும், இத்தாலியிலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலுள்ள சவுக்கையிலும் சில மாறுபாடுகள் காணப்பட்டாலும், கல்லின் நடுவிலோ, கல்லமைப்பின் நடுவிலோ ஒரு வட்டப் பொந்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயிருக்கும் ஆண்டிப்பட்டி ஊராட்சியின் மலைப்பகுதியில் ஒரு பெருங்கல் சவுக்கை உள்ளது. இந்தச் சவுக்கையின் படி, ஒரு ஆண்டின் ஆரம்பத்தையும், அரைப்பகுதியையும், முடிவையும் எளிமையாகக் கணித்தனர். சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் ஆறு மாத காலப் பயணத்தை, தெற்கு நோக்கிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்காகச் செல்லும் ஆறு மாத காலப் பயணத்தை வடக்கு நோக்கிய காலம் என்றும் கூறுவர். இச்சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் தென்மேற்காக ஊடுருவியதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பழனியில் உள்ள சவுக்கை மூன்று கற்களை ஆய்த எழுத்து போன்ற தோற்றத்தில் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள சவுக்கையின் அமைப்பு வேறுபட்டுக் காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் மயிலாப்பூர் திருவிழா 2025!
பெருங்கல் சவுக்கை - Mên-an-Tol

ஆம், இங்கிலாந்து வழக்கில் இந்தச் சவுக்கையை மென்-அன்-டோல் (Men an Toll) என அழைக்கின்றனர். இது கார்னிசு மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்குவியல் ஆகும். ஆனால், இந்தச் சவுக்கைகள் தமிழகத்தில் உள்ளது போல் ஒன்றாக அல்லாமல் 20 சவுக்கைகள் ஒரு வட்டவடிவில் வரிசையாக அமைந்திருக்கின்றன. மேலும், துவாரம் ஒரே கல்லில் துளைக்கப்பட்டுள்ளதுடன், துவாரக்கல்லின் இரு பக்கத்திலும் இரண்டு குத்துக்கற்கள் நிற்கின்றன. அவற்றை முப்பரிமாணத் தோற்றத்தில் பார்க்கும் போது 101 என்னும் எண்ணை சுட்டுவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சவுக்கையை பயன்படுத்தியே பண்டைய இங்கிலாந்து மக்கள் தங்கள் நாட்காட்டியை உருவாக்கினர் என்று கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கொரிய கலாச்சாரத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! 
பெருங்கல் சவுக்கை - Mên-an-Tol
logo
Kalki Online
kalkionline.com