போரில் யானைகளை மிரள வைத்த பன்றிகள்: பண்டைய வரலாற்றின் விசித்திரமான ஆயுதம்!

எதிரி நாட்டு போர் யானைகளை வீழ்த்த பண்டைய ரோமானியர்கள் பயன்படுத்திய விசித்திரமான பன்றிப்படை தந்திரம்!
போர் பன்றிகள் - Ancient warfare
போர் பன்றிகள் - Ancient warfareAI Image
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

முற்கால மனிதர்கள் பழங்காலப் போரில் விலங்குகளைப் பயன் படுத்தினார்கள் குதிரைகள், யானைகள், பூனைகள், நாய்கள், குரங்குகள் மற்றும் காண்டா மிருகங்கள் கூட போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டன. அந்த காலத்தில் பன்றிகள் கூட போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்றால் யார் நம்புவார்கள்?

கிமு 240 இல் ரோமானியர்கள்தான் முதலில் பன்றிகளை வைத்து போர் செய்தனர் இந்த காலத்தில் பீரங்கிகள் போலத்தான் அந்த காலத்தில் யானைகள். யாரிடம் யானை படை இருக்கோ அவர்கள் தான் போர்களை வென்றனர். ரோமானியர்கள் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாக இருந்தபோது அவர்கள் தலை வழியாக இருந்தது அவர்களினி எதிப்படையில் இருந்த யானைகள் தான்.

போர் பன்றிகள்:

இந்த புல் டோசர் மிருகங்கள் ரோமானிய படைகளை மிகவும் சேதப்படுத்தி வெற்றி வாய்ப்பை பெரிய கேள்வி குறியாகியது . அப்போது தான் ரோமானிய ஜெனரல் பன்றிகளை வைத்து யானைகளை சமாளித்து விடலாம் என்ற யுக்தியை கண்டறிந்தார். யானைகளின் வீக் பாயிண்ட் அவற்றின் காதுகள். சில சத்தங்களை அவைகளால் தங்கிகொள்ள முடியாது . அவற்றில் ஒன்று பன்றிகளின் கிரீச்சிடும் குரல் என்று அறிந்த அவர் ஒரு திட்டம் வகுத்தார்.

ஆக்ரோஷத்துடன் வரும் போர் யானைகளை நோக்கி பன்றிகளின் மேல் தார் போன்ற எரிபொருளை தடவி தீ மூட்டி விரட்ட வைத்தார் பன்றிகள் பாவம் அலறியபடி அங்கும் இங்கும் ஓடின. அப்படியே திரும்பி பிளிறியபடி தங்கள் படை ஆட்களையே மிதித்து த்வம்சம் செய்யதனே அவ்வளவுதான் போர் முடிவுக்கே வந்துவிட்டது யானைகளுக்கோ பன்றியின் சிறிய குரலை கேட்டாலே உதறல். ரோமானியர்கள் பைரஸின் போர் யானைகளை இப்படி பன்றிகளை வைத்து சிதறடித்தனர்.

போர் பன்றிகள் - Ancient warfare
போர் பன்றிகள் - Ancient warfareAi Image

ரோமானியர்களால் மட்டுமே இராணுவ ஆயுதமாக பன்றிகள் பயன்படுத்தப்படவில்லை. தீக்குளிக்கும் பன்றிகளின் பற்றி எழுத்தாளர் பாலியானஸ் மற்றும் ஏலியன் ஆகியோர் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர் . கிமு 266 இல் மெகாராவின் ஆன்டிகோனஸ் கோனாடாஸ் முற்றுகையை மெகாரியர்கள் சில பன்றிகளை எரித்து, எதிரிகளின் திரளான போர் யானைகளை விரட்டி தகர்த்ததாக இரு எழுத்தாளர்களும் தெரிவித்துள்ளனர் .

சத்தமிடும் பன்றிகளால் பயந்து, யானைகள் பெரும்பாலும் தங்கள் சொந்த வீரர்களை மிதித்து கொன்றன. மறைந்த பழங்கால வரலாற்றாசிரியர் புரோகோபியஸ் போரில் பன்றிகளைப் பயன்படுத்துவதை விவரிக்கிறார்.

கி.பி 544 இல் பெர்சியாவின் அரசரான I கோஸ்ராவ், மெசபடோமிய நகரமான எடெசாவை முற்றுகையிட்ட போது, அவருடைய போர் யானைகளில் ஒன்று கிட்டத்தட்ட எதிரிகளை வென்று நகருக்குள் நுழைந்தது. ஆனால் ரோமானியர்கள், பன்றியை கோபுரத்தில் தொங்கவிட்டதால், ஆபத்திலிருந்து தப்பினர்.

தொங்கவிடப்பட்ட பன்றி அலறோ அலரென்று அலறியது. தாக்க வந்த யானை சிறிது சிறிதாக பின்வாங்கியது, பின்வாங்கும் யானைகள், அதிக பயிற்சி பெற்றிருந்தாலும், கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. ஆனால் பிற்காலத்தில் யானைப் பயிற்சியாளர்கள் தங்கள் இளம் யானைகளை குட்டிப் பன்றிகளுடன் வைத்து வளர்த்து ஒரு வகையில் இந்த பன்றி பிரச்னையை சமாளித்தனர்.

இதையும் படியுங்கள்:
போர், போர், போர்! மனித குல வரலாற்றில் போரும் சமாதானமும்!
போர் பன்றிகள் - Ancient warfare

பண்டைய வரலாற்றின் மிகவும் விசித்திரமான இராணுவத் தந்திரத்தைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம், வலிமையான பலத்தைவிட உத்தி மற்றும் பலவீனத்தைக் கண்டறிவதே போரின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்ற சுவாரஸ்யமான வரலாற்று அறிவைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com