

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் மகாராஷ்டிரா. தேவாஸ் மத்திய பிரதேசம், மைசூர் கர்நாடகா மற்றும் சல்போனில் மேற்குவங்கம் ஆகிய நான்கு இடங்களில் அச்சிடப் படுகிறது. மும்பை ஹைதராபாத் கொல்கத்தா நொய்டா ஆகிய இடங்களில் நாணயங்கள் அச்சிடப்படுகிறது
நாசிக்கில் மத்திய அரசுக்கு சொந்தமான கரன்சி நோட் பிரஸ் மூலம் அச்சிடப்படுகிறது. தேவாஸ் மத்திய பிரதேசத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான பேங்க் நோட் பிரஸ் மூலம் அச்சிடப்படுகிறது.
மைசூரில் ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் மூலம் அச்சிடப்படுகிறது.
சல்போனி மேற்கு வங்கத்தில் ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான பாரதிய ரிசர்வ் வங்கி நோட்டு முத்திரன் பிரைவேட் லிமிடெட் மூலம் அச்சிடப்படுகிறது.
இந்திய பணம் அச்சிடும் பொறுப்பு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் செக்யூரிட்டி பிரின்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மூலம் இயங்கி வருகிறது.
நாணயங்கள் அச்சிடப்படும் காகிதங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள கோஷங்காபாத் மற்றும் மைசூரில் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் வடிவமைப்பு வரலாறு:
பதினோராம் நூற்றாண்டில் பேரரசர் ஷா சூரி என்பவர் ரூபி என்று நாட்டின் நாணயத்தை பயன்படுத்த தொடங்கினார். 150 கோடி மக்கள் தொகை இருக்கும் நாட்டில் பணத்தை எப்படி எங்கு அச்சடிக்க வேண்டும் எவ்வளவு இடம் தேவை என்பதை எண்ணிப் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது.
இந்திய அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் தங்கம் வெள்ளி செம்பு இவற்றின் நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. 1869 இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரூபி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
இது சுதந்திரத்திற்கு பிறகும் இந்த ரூபி என்ற சொல் தொடர்ந்து இருந்து வந்தது. நம் நாட்டில் பணத்தை அச்சடிக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ளது.
நாணயங்கள் அச்சடிக்கும் பொறுப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது ரூபாய் நோட்டுகளில் தலைவர் படங்கள் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மகாத்மா காந்தியை படத்தை மாற்றும் எண்ணம் இல்லை என இந்த விவாதங்களுக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கியும் நாணயங்கள் அச்சடிக்கும் பணியை மத்திய அரசும் கவனித்துக்கொள்கிறது.
ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை மாற்றி அமைக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. நாணயங்களின் வடிவமைப்பை மாற்றி அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. நாணயங்களை அச்சடித்த பின் அதை விநியோகிப்பதற்காக ரிசர்வ் வங்கிக்கு அனுப்புகிறது. ரூபாய் நோட்டுகள் நாணயங்களை ரிசர்வ் வங்கியின் மேலாண்மை துறை நிர்வகித்து வருகிறது.
இது துணை ஆளுநர் வரம்பிற்குள் உள்ளது. கள்ள நோட்டு புழக்கத்தை இந்த துறையை கவனித்து வருகிறது. சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் கிழிந்த ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை மாற்றும் பொறுப்பையும் இந்த மேலாண்மை துறை கவனித்து வருகிறது. 1969 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் ரூபாய் நோட்டில் காந்தியின் படம் இடம்பெற்றது.
புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் அதன் பின்னால் இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள்:
1949 ஆம் ஆண்டில் இந்திய ரூபாய் நோட்டுகள் வடிவமைக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டில் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நூறு ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. 1953 இல் ரூபாய் நோட்டுகளை ஹிந்தி எழுத்துக்கள் இடம் பெற்றன. 1954 ஆம் ஆண்டு ஆயிரம் ரூபாய் 2000 பத்தாயிரம் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 1978ல் இந்த நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன.
சிங்கம் மான் போன்ற உருவங்கள் ஐந்து ரூபாய் நோட்டில் இடம்பெற்றது. 1975 இல் 100 ரூபாய் நோட்டில் தேயிலை தோட்டம் இடம்பெற்றது. 1969 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் நூறாவது பிறந்த நாளின்போது ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இடம்பெற்றது. 1987ல்தான் முதன் முதலாக 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. தற்போது இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
2011 முதல் 25 பைசா அதற்கு கீழ் உள்ள பைசாக்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது 50 பைசா ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நாணயங்கள் சந்தையில் கிடைக்கிறது. இந்த ரூபாயில் 17 மொழிகளில் அச்சிடப்படுகிறது.
இவை அகர வரிசைப்படி அமைந்துள்ளன. ரூபாய் நோட்டுகளில் முன்புறம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது. சிறிய பெட்டி போன்று உள்ளதில் 15 மொழிகள் அச்சிடப்பட்டுள்ளன.
பத்து ரூபாய் நோட்டில் கோனாரக் கோவில் படமும், இருவது ரூபாய் நோட்டில் எல்லோரா குகை மற்றும் கைலாசநாதர் கோவில் படம் பெற்றுள்ளது. ஐம்பது ரூபாயில் ஹம்பி, தேர் சிற்பம் 100 ரூபாயில் ராணிக்கு வாவ் குஜராத் படமும், 200 ரூபாயில் சாஞ்சி ஸ்தூபி படமும் 500 ரூபாயில் டெல்லி செங்கோட்டை படமும், 2000 ரூபாயில் மங்கள்யான் படமும் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், தினமும் நீங்கள் பயன்படுத்தும் இந்தியப் பணத்தின் மதிப்பு, அதன் பின்னால் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வரலாற்றுப் பின்னணியை முழுமையாக அறிந்துகொண்டு, கள்ள நோட்டுகளை எளிதாகக் கண்டறியும் விழிப்புணர்வையும், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு மீதான தெளிவான புரிதலையும் நீங்கள் அடைவீர்கள்.