பொங்கல் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது கோலங்கள்தான். மார்கழி முடிந்து தை பிறக்கும் நாளான பொங்கல் அன்று அனைவரும் மிகவும் அழகான, பெரிய பெரிய கோலங்களைப் போட்டு அவற்றை அழகாக அலங்கரிக்க ஆசைப்படுகிறோம்.
கோலம் என்பது வீட்டு வாயில்களில் அரிசி மாவு அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி வரையப்படும் வடிவங்கள். கோலம் என்பது தமிழர்களின் பாரம்பரியம் மட்டுமில்லை, கர்நாடகா, தெலங்கானா, கேரளா, ஆந்திர பிரதேஷ், கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும், இந்தோனேசியா, மலேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் கோலம் போடப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் அதிகப்படியாக பெண்கள்தான் கோலம் போடும் வழக்கத்தைக் கடைபிடிக்கின்றனர்.
ஒவ்வொரு இடத்திலும் கோலம் என்ற சொல் வெவ்வேறு பெயரில் அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இதை ரங்கோலி என்றும் மித்தாலி மொழியில் ஏர்பான் என்றும் அழைக்கிறார்கள். ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இதை முக்குளு என்று அழைக்கிறார்கள். அரிசி மாவில் மட்டுமே கோலம் பொடுவதற்கு முக்கியக் காரணமே எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகத்தான். மேலும், பறவைகளும் உணவிற்காக வரலாம் என்ற ஈகை குணம்தான் கோலம் போடுவதன் நோக்கம்.
முன்பெல்லாம் யார் வீட்டில் பெரிய கோலம் இருக்கிறதோ அவர்கள் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று அர்த்தம். மேலும், கோலம் போடுவதற்கு முன்னால் மாட்டுச் சாணியால் தரையை மெழுகுவார்கள். இது கிருமி நாசினியாக செயல்படும். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் ஏற்படாது. எனவே, கோலம் என்பது வெறும் அலங்கரிக்கும் விஷயம் அல்ல.
என்னவிதமான கோலம் போடலாம்: பொங்கல் பானை கோலம் மற்றும் பொங்கல் வரவு கோலங்கள் பொங்கலின் முக்கியத்தை மற்றும் மகிழ்ச்சியை மிக அழகாக வெளிப்படுத்துகின்றன. கோலத்தில் நிறம், வண்ணம் மற்றும் வடிவங்கள் மூலம் தனித்துவமான இனிய நேரங்களைக் கொண்டாடலாம். பொங்கல் பானை கோலம் பொதுவாக, பானையுடன் நெல், சூரியன் மற்றும் தானியங்களின் குறியீடுகள் அடங்கும். இதுபோன்ற கோலங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சி மற்றும் வளம் கொண்டு வரும் என்றும் நம்பிக்கை. அழகான திருவிழா கோலங்களை உருவாக்குவதற்கு வண்ணப் பொடிகள் கூடுதல் அழகும் பரந்து பிரம்மாண்டமாகக் கொண்டாட முடியும்.
கோலத்தின் வகைகள்: புள்ளி கோலம், தாமரைக் கோலம் மற்றும் கம்பி கோலம் ஆகியவை மிகவும் பாரம்பரிய மற்றும் அழகிய வடிவமைப்புகளாகும்.
புள்ளி கோலம்: இந்தக் கோலங்களில், புள்ளிகள் அளவு மற்றும் இடையே இணைப்புகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டும் சீராகவும் உருவாக்கப்படும் கலைப்படிவமாகக் காணப்படும்.
தாமரைக் கோலம்: இந்தக் கோலங்கள் தாமரையின் வடிவமைப்பைக் கொண்டதாக இருக்கும். செழுமையான தாமரையின் அருமையான வடிவமும் அழகும் கோலத்தில் மிக அழகாகத் தெரியும்.
கம்பி கோலம்: இந்தக் கோலத்தை வடிவமைக்கும்போது கோலங்களில் கோடுகளை கம்பி பேணல் முறைப்படி அடையாளப்படுத்தவும் பல கோடுகளை இணைத்தும் உருவாக்கப்படும்.
இதுபோன்ற பாரம்பரிய மரபுகளால் நாம் நம் பாரம்பரியத்தைக் கொண்டாடி, மகிழ்ச்சிபூர்வமாக வாழலாம்.