காலை உணவாக அவல் எடுத்துக்கொள்வது ஒரு சிறந்த தேர்வாகும். அவலை சுலபமாக சமைக்கலாம். இதில் ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளன. எனவே, எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் அவலை எடுத்துக்கொள்வது நல்லது. இதைப் பற்றிய நன்மைகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. அவலில் அதிகமாக இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி உள்ளது. எனவே, அவலை அடிக்கடி எடுத்துக்கொள்ளவதால் இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து அனிமியா ஏற்படாமல் பாதுகாக்கிறது.
2. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவல் மிகவும் நல்லது. இதில் வெறும் 250 கிராம் கலோரிகளே உள்ளன.
3. அவலை Easy meal என்று சொல்வார்கள். இது சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய உணவாகும். இதை எடுத்துக் கொள்வதால் வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்னைகள் வராது. எனவே, அவலை காலையிலோ அல்லது மாலை வேளை ஸ்நாக்ஸாகவோ சாப்பிடக் கொடுக்கலாம்.
4. அவலில் 76.9 சதவீதம் கார்போஹைடரேட் உள்ளது. மேலும் 23 சதவீதம் கொழுப்பு உள்ளது. இது உடலில் கொழுப்பு சத்து சேர விடாமல் தடுத்து நாள் முழுவதும் உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கிறது.
5. அவல் Gluten free உணவு என்பதால் இதை Gluten உணவுகளை சாப்பிட முடியாதவர்களும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
6. அவலில் வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் B6, வைட்டமின் B3, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற மினரல்களும் அதிகம் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். அவலில் குறைந்த கொழுப்பு இருப்பதால் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
7. காலை உணவாக அவலை எடுத்துக்கொள்வது உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும். அவலுடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது புத்துணர்ச்சியை தரும்.
8. குழந்தைகளுக்கு காலையில் எண்ணெய்யில் பொரித்த உணவுகளைக் கொடுப்பதற்கு பதில் அவலில் செய்யப்பட்ட உணவுகளைக் கொடுக்கலாம். சிவப்பு அரிசியில் தயாரிக்கப்படும் அவலை சாப்பிடுவதால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சிறுதானியத்தால் செய்யப்பட்ட அவலை காலை உணவாக சாப்பிடுவது மிகவும் நல்லது. எனவே, காலையில் அவலை எடுத்துக்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.