தபால் பெட்டி சிவப்பு நிறத்தில் இருப்பது ஏன்? இதன் பின்னணியில் உள்ள ரகசிய வரலாறு!

இந்தியத் தபால் பெட்டிகள் சிவப்பாக மாறிய சுவாரஸ்யக் பின்னணியும் அதன் வண்ண மாயங்களும் இதோ!
தபால் பெட்டி - India post history
தபால் பெட்டி - India post historyImage credit: Gemini
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

சிவப்பு என்றால் நினைவுக்கு வருவது சிக்னல் லைட்டும், தபால் பெட்டியும் எனலாம். சிக்னலில் சிவப்பு ஆபத்தைக் குறிக்கும் வண்ணமாக உள்ளது. ஆனால் தபால் பெட்டி சிவப்பு நிறத்தில் இருப்பது ஏன் என்று தெரியுமா? இதோ தபால் பெட்டிகள் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு பிண்ணனியில் இருக்கும் சுவாரஸ்யமான வரலாறு உங்களுக்காக..

இந்தியா முழுவதும் தெருக்களின் ஓரங்களிலும், தபால் நிலையங்களிலும் காணப்படும் சிவப்பு நிறத் தபால் பெட்டிகள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கின்றன. இந்தியாவில் நவீன தபால் அமைப்பு 19-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தது. குறிப்பாக, 1854-ஆம் ஆண்டு இந்தியத் தபால்துறை நவீன நிர்வாக அமைப்புடன் மறுசீரமைக்கப்பட்டதாகவும்

அதன்பின்னர் கடிதங்களைச் சேகரித்து, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் தபால் சேவை விரிவடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தபால் பெட்டிகள் முதல் கூவம் ஆறு வரை: நாம் தொலைத்த பொக்கிஷங்கள்!
தபால் பெட்டி - India post history

இன்றைய மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்ற வசதிகள் இல்லாத காலத்தில், தபால் பெட்டிகள் மக்களை இணைக்கும் முக்கியமான வழியாக இருந்தன என்றால் மிகையாகாது. குறிப்பாக ஒரு சிவப்பு நிறப் பெட்டி, ஒருவரின் அன்புக் கடிதத்தையும், குடும்பச் செய்தியையும், வேலைவாய்ப்புத் தகவலையும் கொண்டு சேர்க்க உதவியதை அக்கால மக்கள் என்றும் மறக்க முடியாத இனிய அனுபவமாகவே குறிப்பிடுகின்றனர்.

ஆனால், தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மறைந்து போனதில் கடிதம் எழுதும் பழக்கமும் ஒன்று. ஆனால் இன்றும் வக்கீல் நோட்டீஸ் போன்ற வெவ்வேறு காரணங்களுக்காக பயன்பாட்டில் உள்ள தபால் பெட்டிகளுக்கு ஏன் சிவப்பு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது? இதற்கான வரலாறும், நடைமுறை காரணங்களும் என்ன?

தொலைவிலிருந்தே எளிதாகத் தெரியவேண்டும் என்பது முதல் காரணமாக இருக்கலாம். பொதுவாக சிவப்பு நிறம் கண்களைக் கவரும் வகையில் அதிக கவனத்தை ஈர்க்கும் தன்மை கொண்ட நிறங்களில் ஒன்று. பொது இடங்களில் ஒரு குறிப்பிட்ட பொருளை அடையாளம் காண்பதற்கு இந்த நிறம் பயனுள்ளதாக இருக்கிறது.

தெருக்களில் செல்லும்போதும், மக்கள் கூட்டத்திலும் தபால் பெட்டியை எளிதாக அடையாளம் காண இது உதவுகிறது.

குறிப்பாக, தபால் பெட்டிகள் சாலையோரங்களில் வைக்கப்படுவதால், அவற்றை விரைவாகக் கண்டுபிடிப்பது முக்கியமாக இருப்பதால் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரு மெசேஜ் செய்ய காத்திருந்த காலம் முதல் ஏஐ வரை: தகவல் தொடர்பின் பரிணாம வளர்ச்சி!
தபால் பெட்டி - India post history

பிரிட்டிஷ் ஆட்சிக்கால வரலாறு இன்னொரு காரணம்.

இந்தியாவில் நவீன தபால் சேவை அப்போதிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சியடைந்து பிரிட்டனில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிறத் தபால் பெட்டிகளின் தாக்கம் இந்தியாவிலும் பரவி காலப்போக்கில் சிவப்பு நிறம் இந்தியத் தபால் பெட்டிகளின் அடையாளமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, 1856–57 காலத்திலேயே இந்தியாவில் பிரிட்டிஷ் பாணியிலான தபால் பெட்டிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள அனைத்து தபால் பெட்டிகளும் சிவப்பு நிறத்தில் இருப்பது இல்லை. இந்தியாவில் தபால் பெட்டிகளின் நிறமும் வடிவமும் அவற்றின் பயன்பாடு மற்றும் வரலாற்றைப் பொறுத்து மாறுபட்டுள்ளன. பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட சில தபால் பெட்டிகள் வேறு நிறங்களிலும் இருந்தன. ஆனால், பரவலாக பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிறம் பொதுமக்களின் மனதில் இந்தியத் தபால் சேவையுடன் தொடர்புடைய முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.

மேலும் இன்று நாம் பார்க்கும் சிவப்பு நிறத் தபால் பெட்டிகள் ஒரே வடிவத்தில் உருவானவை அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தொடங்கி, காலப்போக்கில் இந்தியத் தபால் பெட்டிகளின் வடிவம், நிறம், அமைப்பு ஆகியவை பலமுறை மாறியுள்ளதாக குறிப்புகள் உள்ளன.

தபால் பெட்டி - India post history
தபால் பெட்டி - India post historyImage credit; Gemini

தபால் பெட்டிகளின் நிறங்களும் அவற்றின் பயன் பாடுகளும் சுவாரஸ்யமானவை. ஆம். இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் கடிதங்களை வகைப்படுத்த உதவுவதற்காக வெவ்வேறு நிறத் தபால் பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டன.

சிவப்பு நிறம் பொதுவான தபால் சேவை பயன்பாட்டிற்கும், பச்சை நிறம் ஒரே நகரத்திற்குள் அனுப்பப்படும் கடிதங்களுக்கும், நீலம் பெருநகரத் தபால் வழித்தடத்தை குறிக்கவும், மஞ்சள் டெல்லியை நோக்கிச் செல்லும் ராஜ்தானி தபால் வழித்தடத்திற்கும் குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன.

இந்த நிற வேறுபாடுகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் கடிதங்களை ஆரம்ப நிலையிலேயே வகைப்படுத்த உதவியதாக தெரிகிறது.

1856–1857 களில் இந்தியாவில் முதன் முதலில் கிரீட வடிவத் தபால் பெட்டி (Victorian Crown Type) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் பரிணாமம் பெற்று இறுதியில் சுவரில் மாட்டும் வகையில் தபால் பெட்டிகள் உருவாகியுள்ளது.

பிரிட்டிஷ் காலம் முதல் பல கோடி இந்திய மக்களின் துயர் துடைக்க காரணமான சிவப்பு தபால் பெட்டிகளுக்கு இப்போதும் மவுசு குறையவில்லை என்பதும் உண்மை.

logo
Kalki Online
kalkionline.com