உலகின் 3வது மிகச்சிறிய நாடு பெயர் மாற்றம்! 'நவோரா' பற்றித் தெரியுமா?

கொரோனா அலை தீண்டாத, 21 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நவுரு நாட்டின் புது அவதாரம்!
நவுரு வரலாறு - Naoero republic
நவுரு வரலாறு - Naoero republic
Updated on

பாஸ்பேட் சுரங்கம் மூலம் 1970களில் செழிப்பு கண்ட நவ்ரு, தற்போது காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு காரணமாக ஆபத்தான நிலையை எதிர்கொள்கிறது. உலகில் அதிக உடல் பருமன் கொண்டோர் வாழும் நாடாகவும், இதுவரை ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்படாத நாடாகவும் தனித்துவம் பெற்றுள்ளது. காமன்வெல்த், ஐ.நா. உறுப்பினராகவும் உள்ளது.

பசுபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடான நவ்ரு (Nauru) உலகின் மிகச் சிறிய குடியரசாகவும், உலகின் மூன்றாவது மிகச்சிறிய நாடாகவும் உள்ளது. தென்மேற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவின் ஈக்வட்டாருக்கு அருகில் அமைந்துள்ளது.

நவுரு வரலாறு...

இந்நாடு சுமார் 21 சதுர கிலோமீட்டர் அதாவது எட்டு சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. 12000 பேர் வசித்து வரும் நவ்ரு நாடு மக்கள் தொகை அடிப்படையில் துலாலு மற்றும் வாடிகன் நகரத்திற்கு அடுத்ததாக உலகின் மூன்றாவது மிகச்சிறிய நாடாக உள்ளது.

இந்நாட்டில் அதிகாரப்பூர்வ தலைநகரம் இல்லை என்றாலும் அரசு அலுவலகங்கள் யாரேன் (Yaren) மாவட்டத்தில் இயங்குகின்றன. நவ்ரு மற்றும் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ள நவுரு `நவோரா குடியரசு `என தனது நாட்டின் பெயரை பாரம்பரிய பெயராக மாற்றியுள்ளது.

பல்வேறு இன மக்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நவ்ருவில் குடியேறினர். பிரிட்டிஷ் கப்பல் ஒன்று 1700 களின் இறுதியில் இந்த தீவை அடைந்து வெளியுலகத்துடன் முதல் தொடர்பை ஏற்படுத்தியது.

1888 ல் ஜெர்மனி நவ்ருவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பின்னர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து நாடுகள் இணைந்து நிர்வகித்தன. 1968 ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஆதிக்கத்தின் கீழிருந்து விடுபட்டு சுதந்திர குடியரசாக மாறியது. ஜப்பான் இரண்டாம் உலகப் போரின் போது நவ்ருவை கைப்பற்றியது.

நவுரு வரலாறு - Naoero republic
நவுரு வரலாறு - Naoero republic

அப்போது மைக்ரோனேசியாவிற்கு பலர் கட்டாய தொழிலாளர்களாக நாடு கடத்தப்பட்டனர். `நவுரு` என அழைக்கப்பட்டு வந்த உலகின் மிகச் சிறிய மூன்றாவது நாடு இனிமேல் `நவோரா குடியரசு( Naoero) `என மாறியுள்ளது.

தேசிய மொழியின் எழுத்துக் கூட்டல் மற்றும் உச்சரிப்புக்கு ஏற்ற வகையில் பெயர் மாற்றம் அமைந்துள்ளதாகவும், மொழி மற்றும் அடையாளத்தை மதிக்கும்படி இருப்பதாகவும் இந்நாட்டின் ஜனாதிபதி டேவிட் அடேங் (David Adeang), தெரிவித்துள்ளார்.

என் ஆர் யு என இதுவரை இருந்த நவ்ரு நாட்டின் சர்வதேச குறியீடு என் ஆர் ஓவாக (NRO) மாறிவிடும். நௌருவான் என அழைக்கப்பட்ட அந்நாட்டு மக்கள் டெய்- நௌரோ (dei-Naoero) என்று அழைக்கப்படுவார்கள். நவுரு அரசின் இந்த நடவடிக்கை அதன் பாரம்பரிய பெயருக்கு அதனை கொண்டு செல்லும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நிலத்தடியில் ஒரு பிரம்மாண்ட நகரம்: போலந்தின் வியக்கவைக்கும் உப்புச் சுரங்கம்!
நவுரு வரலாறு - Naoero republic

பவளப்பாறைகள் மற்றும் சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த இந்த பசிபிக் தீவு, பாஸ்பேட் சுரங்கம் மூலம் 1970களில் பெரும் செல்வம் ஈட்டி வந்தது. பொருளாதார சிக்கல்களை அதன் பின்னர் சந்தித்த இந்நாடு தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் கடல் மட்ட உயர்வு காரணமாகவும் ஆபத்தான நிலையை எதிர்கொள்கிறது. தற்போது காமன்வெல்த் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முழு நேர உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருநீல நிறத்தில் 12 கால்களைக் கொண்ட வெள்ளை நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடி. இதில் தங்க நிறத்தில் ஒரு கோடு. இதுதான் நவ்ரு நாட்டின் தேசியக் கொடி.

உலகிலேயே உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகம் வாழும் நாடாக நவ்ரு நாடு இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் தொகையில் 72% பேர் உடல் பருமன் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
குகைக்குள் பாயும் நீல நிற நீர்வீழ்ச்சி: வியக்க வைக்கும் சுவிஸ் பயணம்!
நவுரு வரலாறு - Naoero republic

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி பல நாட்டு மக்களும் தங்களுடைய மக்களை கொரோனாவுக்கு பலி கொடுத்தனர். ஆனால் உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி நவ்ரு நாட்டு மக்கள் இது நாள் வரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் ஆகும்.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் நவுரு நாட்டின் வரலாறு, சமீபத்திய பெயர் மாற்றம், இருப்பிடம், பரப்பளவு அதன் சிறப்புகள் முதலியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள ஒரு தீவு நாட்டின் கலாச்சார மாற்றத்தையும், அதன் புவியியல் மற்றும் பொருளாதார சவால்களையும் துல்லியமாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது.

logo
Kalki Online
kalkionline.com