சம்மரில் சருமமும் கூந்தலும் ஆரோக்கியம்பெற கைவசம் இருக்க வேண்டிய 10 மேக்கப் சாதனங்கள்!

healthy skin and hair this summer!
healthy skin and hair
Published on

கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பம், வியர்வை போன்றவற்றால் களையிழந்து காணப்படும் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை புதுப்பித்து அவற்றின் பொலிவை மீட்டெடுக்க உங்களுடன் இருக்க வேண்டிய 10 மேக்கப் சாதனங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1.SPF 30+Broad-spectrum சன் ஸ்கிரீன்: வெளியில் செல்ல வீட்டிலிருந்து புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், பரந்த செயலாற்றலுள்ள SPF 30+ சன் ஸ்கிரீனை, முகம் மற்றும் வெளியில் தெரியக்கூடிய கழுத்து, கை, கால்கள் போன்ற எல்லா பாகங்களிலும் தாராளமாக பூசிக் கொள்ளவும். இது சூரியனின் தீங்கிழைக்கக் கூடிய அல்ட்ரா வயலட் கதிர் வீச்சுக்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும்.

2.Hydrating Mist: சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து முகத்தை மென்மையாகவும் பிரகாசமாகவும் ஆக்க உதவும் ஹைட்ரேட்டிங் மிஸ்டை அவ்வப்போது முகத்தில் ஸ்பிரே பண்ணிக்கொள்ளவும். உலர்ந்த சருமம் புத்துணர்ச்சிபெற இது உதவும். ஆலூவேரா அல்லது ரோஸ் வாட்டரை கூட்டுப் பொருளாக சேர்த்து தயாரிக்கப்பட்ட ஹைட்ரேட்டிங் மிஸ்டை தேர்ந்தெடுத்து வாங்குவது நலம்.

3.Moisturizers: வெப்பத்தால் நீர்ச் சத்தின்றி உலர்ந்து காணப்படும் சருமத்தில், எண்ணெய்ப் பசை இல்லாத, இலகுவான, ஈரப்பதமூட்டும் க்ரீம் தடவி நீரேற்றம்பெற உதவுங்கள். எண்ணெய்ப் பிசுக்கு இல்லாத, ஜெல் போன்ற பொருள் சேர்த்து தயாரிக்கப்படும் மாய்ஸ்சரைசர்ஸ் சருமத்தில் உள்ள துவாரங்கள் அடைபடாமல் பாதுகாக்க உதவிபுரியும்.

4.Exfoliating Scrub: சருமப் பள பளப்பிற்கு, வாரத்தில் ஒன்று அல்லது இரண்டுமுறை சருமத்தில் உள்ள இறந்த செல்களை உரித்தெடுப்பது அவசியம். இயற்கைப் பொருட்களான ஓட்மீல் அல்லது சர்க்கரை உபயோகித்து தயாரிக்கப்படும் மிருதுவான ஸ்கிரப்பின் உதவியால் எக்ஸ்ஃபோலியேட் செய்வது சருமம் புதிய வடிவம் பெற்று மின்னுவதற்கு உதவும்.

இதையும் படியுங்கள்:
சருமத்தை மென்மையாக்கும் மதுரை மரிக்கொழுந்து..!
healthy skin and hair this summer!

5. SPF Lip Balm: உஷ்ணத்தின் காரணமாக உதட்டில் வெடிப்பு ஏற்படுவது சகஜம். இதற்கு SPF லிப் பாம் உபயோகித்து உதடுகள் உலர்ந்து போகாமல் ஈரத்தன்மையுடன் இருக்க உதவுவது அவசியம். ஷியா பட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் லிப் பாம் வாங்கி, நாள் முழுக்க அடிக்கடி உதடுகளில் தடவி வந்தால், சன்பர்ன் மற்றும் வெடிப்புகளிலிருந்து உதடுகளைப் பாதுகாக்கலாம்.

6.Lightweight foundations: கோடை காலத்தில் மேக்கப் போடுவதற்கு மிக மெல்லிதான ஃபவுன்டேஷன் அல்லது மங்கிய நிறம் கொண்ட மாய்ஸ்சரைசர்ஸ் போடலாம். இது சருமம் குறைவில்லாத காற்றோட்டம் பெற உதவிபுரியும். சருமம் இயற்கையான மினு மினுப்புப்பெற பனித்துளி போன்ற ஈரப்பதம், மற்றும் சருமத்தின் தன்மைக்கு பொருந்துமாறு நிறத்தை தேர்ந்தெடுத்து மேக்கப்பை முடிக்கும்போது முகம் செயற்கைத் தன்மையின்றி ஒளிரும்.

7.லீவ்-இன்-கண்டிஷனர்: உங்கள் கூந்தலை ஊட்டச் சத்து குறையாமல் பாதுகாக்க லீவ்-இன்-கண்டிஷனர் உபயோகிக்கவும். கோடை வெயிலில் முடி உலர்ந்தும் உடைந்தும் போக வாய்ப்புண்டு. லைட் வெயிட் கொண்ட லீவ்-இன்-கண்டிஷனர் முடிக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

8.Setting Spray: கோடை காலத்தில் போடும் தினசரி மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க, நிறமோ பள பளப்போ இல்லாத செட்டிங் ஸ்பிரே ஒன்றை வாங்கி மேற்பரப்பில் தெளித்துவிடுதல் நல்ல பலன் தரும்.

இதையும் படியுங்கள்:
த்ரெட்டிங் செய்த பிறகு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்..!
healthy skin and hair this summer!

9.Foot Cream: வெயில் காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரிக்க மறந்து விடாதீர்கள். பாதங்களை மிருதுவாக வைத்திருக்க, ஷியா பட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் நல்ல தரமான ஃபுட் க்ரீம் வாங்கி படுக்கைக்குச் செல்லும் முன் இரண்டு பாதங்களிலும் தடவி வைத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

10.தண்ணீர்: எல்லாவற்றிற்கும் மேலாக கோடை காலத்தில் அதிகளவு தண்ணீர் குடித்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொண்டால், உடலின் உள்ளும் புறமும் ஆரோக்கியம் பெறுவதுடன் சருமமும் பொலிவு பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com