அழகிய கண்களைப் பராமரிக்க இயற்கையான 10 இளமை டிப்ஸ்...!

natural tips for maintaining eyes
care for the eyes
Published on

ழகின் முகவரி முகம் என்றால், அதற்கு கண்கள் தான் விசிட்டிங் கார்டு. சிலருக்குக் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்கவே தயக்கமாகவும், பயமாகவும் இருக்கும். காரணம் கண்கள்தான்.

வீங்கிய கண்களுக்கு அடிப்பக்கமாக  தசைப்பைகள் பெரிதாகத் தெரியும். சிலருக்கு வயசான அடையாளமாகவும், அக்கறையாக எச்சரிக்கவும் வைக்கும். இதற்கு சில எளிமையான வீட்டு சிகிச்சைகளே போதும். இதன் அற்புத பலன்களை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டும். அது என்ன என பார்ப்போம்.

1) சில சமயங்களில் கண்களின் அடிப்புறம் இப்படி வீங்கி பைகள் போல தூங்குவதற்கு முகத்தில் இரத்த ஓட்டத்தின் சமநிலை குலைவதே காரணம் கண்களை சுற்றியும் தண்ணீர் படுமாறு குளிர்ச்சியான தண்ணீரில் முகம் கழுவினால் முகத்தில் ஓடும் ரத்தக்குழாய் சுருங்கி ரத்த ஓட்டம் சீராகும். இதனால் விரைவில் வீக்கம் வடியும். ஆனால் ஐஸ் வாட்டரால் முகம் கழுவக்கூடாது.

2) ஃபிரிட்ஜிலிருந்து சில ஐஸ் கட்டிகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதற்குள் இரண்டு எவர்சில்வர் ஸ்பூன்களை வைத்து  ஜில்லென்று ஆனதும் அந்த ஸ்பூன்களை எடுத்து கண்களை மூடி, கண்கள் மீது ஸ்பூனின் உள்பக்கம் படுமாறு கவிழ்த்துவைத்து, குளிர்ச்சி குறைந்ததும், திரும்பவும் அதே போல் ஐஸில் வைத்து கண்களின் மேல் வைத்து எடுங்கள். நான்கைந்து முறை இப்படி செய்து வந்தால் கண்கள் இயல்புத் தோற்றம் பெறும்.

3) வெள்ளரிக்காயை வட்ட வடிவமாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஆனதும் அவற்றை எடுத்து கண்களை மூடிக்கொண்டு இரண்டை எடுத்து கண்கள் மீது வைத்து சில நிமிடங்கள் வரை வைத்து குளிர்ச்சி குறைந்ததும் திரும்பவும் குளிர்ச்சியான வெள்ளரியை வைத்து எடுக்கவும். குளிர்ச்சியான வெள்ளரியால் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரத்த ஓட்டத்தை இயல்பாகும்.

4) வெள்ளரியைப் போலவே கண்களுக்கு இதம் தரும் இன்னொன்று உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி வட்டமான துண்டு களாக வெட்டவும். ஈரப்பசையுடன் இருக்கும்போதே அதை அப்படியே கண்கள் மீது வைத்து பத்து நிமிடங்கள் கழித்து, அதை எடுத்துவிட்டு வேறு இரண்டு துண்டுகளை வைத்து பின் குளிர்ச்சியான தண்ணீரில் முகம் கழுவவேண்டும் உருளைக்கிழங்குக்கு வீக்கத்தை குறைக்கும் குணம் உள்ள மாவு சத்து இதில் அதிகம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
காலேஜ் முதல் கல்யாணம் வரை... 2025-ன் பெஸ்ட் குர்த்தி ஸ்டைல்ஸ்!
natural tips for maintaining eyes

5) கண்களுக்கு கீழே  வீங்கித் தொங்கும் பையை தேநீர் பையாலும் சரி செய்யலாம். பாலில் நனைத்து குடிக்கும் மூலிகை டீ பேக்குகள் இரண்டு எடுத்து ஜில்லென இருக்கும் தண்ணீரில் அந்த டீ பேக்குகளை ஊறவிட்டு  ஒரு நிமிடம் ஊறியதும் சாறைப் பிழிந்து விட்டு டீ பேக்கை வெளியில் எடுத்து இரண்டு கண்கள் மீதும் தலா ஒரு டீப் பேக்கை வைத்து எடுங்கள். இதனால் டீ பேக்கின் குளிர்ச்சி ரத்த ஓட்டத்தை இயல்பாக்கும். நாளடைவில் வீக்கம் குறையும்.

6) இரண்டு உருளைக் கிழங்குகளை தோல் சீவி துண்டு துண்டாக அரிந்து சாறு எடுத்து அந்த சாறில் பஞ்சை நனைத்து மூடி கண்கள் மீது வைக்கவும் பஞ்சை இதே மாதிரி திருப்பித் திருப்பி வைத்து அரை மணிநேரம் அந்த சாறு கண்களை சுற்றி தசைகளை நனைக்குமாறு செய்யவும் பின் குளிர்ச்சியான தண்ணீரில் முகம் கழுவவும்.

7) ஒரு பாத்திரத்தில் கை பொறுக்கும் சூட்டில் அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி, பஞ்சை உப்பு நீரில் நனைத்து கண்கள் மீது வைத்து சுமார் அரை மணிநேரம் செய்தால் கண்களின் அடியில் தொங்கும் தசைப் பைகள் சரியாகும்.

8) கண்களைச் சுற்றி நீர் கோர்த்து தசைப்பைகள் தொங்குவதற்கு முக்கிய காரணம் போதுமான தண்ணீர் குடிக்காதது. அவ்வப்போது போதுமான அளவு தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி முறையாக தண்ணீர் குடிக்கா விட்டால், அதன் விளைவு தான் கண்களில் வீக்கம் ஆங்காங்கே ஏற்படும் வீக்கங்களும். ஒழுங்காக தண்ணீர் குடித்தால் உடல் இயல்பாக தண்ணீரை வெளியேற்றி கண்களை இளமையாக வைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
சேலை கட்டும் பெண்ணா நீங்க? இதோ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!
natural tips for maintaining eyes

9) எதுவுமே செய்ய இல்லாவிட்டால் கண்களைச் சுற்றி மசாஜ் செய்யலாம். கண்களைச் சுற்றிய பகுதிகளில் வலது கை ஆள் காட்டி விரலால் கண்களை சுற்றி வட்டமாக தேய்த்து விடவும். கண்களைச் சுற்றியத் தசைகள் மிருதுவானவை என்பதால் மென்மையாக செய்யவேண்டும். இப்படி ஒரு கண்ணில் 15 முறை வட்டமாக தேய்த்து விட்டு அடுத்த கண்ணிலும் செய்யவும். காலையில் விழித்ததும் இதை செய்துவிட்டு படுக்கையில் இருந்து எழுந்தால் போதும் கண்கள் சில நாட்களில் இயல்பு தோற்றம் பெறும்.

10) நிறைவான தூக்கம் உங்கள் உடலுக்கு மட்டுமில்லை கண்களுக்கும். ஒரு நாளில் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவிட்டால் கண்கள் நீர் கோர்த்துக் கொண்டு முதுமை தோற்றம் பெறும். நிறைவாக தூங்குங்கள். தலையணை வைத்து தலையை உயர்த்திய நிலையில் வைத்துக்கொண்டு தூங்கினால் கண்களைச் சுற்றி நீர் கோர்த்துக் கொள்வது தடுக்கப்படுகிறது. குப்புறப்படுத்து தூங்கக்கூடாது. மல்லாந்துஅல்லது ஒரு கழித்த நிலையில் தூங்கினால் கண்கள் மறுநாள் புத்துணர்வோடு  இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com