
தொப்பை போன்று இடுப்பு கொழுப்பும் பலருக்கும் குறையாமல் இருப்பது பெரிய கவலை. இடுப்பு கொழுப்பினால் பிட்டப் பகுதியும் பருமனாக இருக்கும். மரபணு அமைப்பு, அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு என பல காரணங்கள் இருக்கலாம். இடுப்பு கலோரிகளை எரிப்பதிலும் ஒட்டுமொத்த எடையை குறைப்பதிலும் கவனம் செலுத்தினால் சரியாகும்.
உங்கள் தினசரி அன்றாட நடவடிக்கையில் ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், விறுவிறுப்பான நடைபயிற்சி போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் பலன் அளிக்கும். மிதமான தீவிர கார்டியோ பயிற்சியில் வாரத்தில் மொத்தமாக 150 நிமிடங்கள் செய்வது பலன் அளிக்கும்.
தொடை சதை குறைய புரதம் நார்சத்தில் உள்ள உணவுகள் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை, கலோரி உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கவேண்டும்.
உணவில் கீரை
பச்சை நிறங்கள் கொண்ட காய்கறிகள், கீரைகள் தினமும் சாப்பிடுதல். நீண்ட நேரம் பசி எடுக்காமலும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படாமலும், பார்த்துக்கொள்ளும். குறிப்பாக இவற்றில் மிக குறைந்த கலோரியும், அதிகப்படியான நார்ச்சத்துக்களும், இருப்பதால் விரைவில் பசி எடுக்காது மற்ற எல்லா உணவுகளையும் விட இதில் கலோரி மிக குறைவு.
புரதங்கள் நிறைந்த ஸ்னாக்ஸ்
எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. என்பதை மட்டும் கவனமாக இருப்பது அவசியம். ஸ்னாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளும் உணவுகளில் கட்டாயம் புரதங்கள் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக அரிசி உணவுகள் எடுக்கும்போது ஏற்படும் .ரத்த சக்கரை அளவு அதிகரிக்கும். அதனால் மக்கானா ,நட்ஸ் போன்ற நார்ச்சத்தும், புரதங்களும் கொண்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிடலாம்.
தண்ணீர் குடிப்பது
சாப்பிடும் முன்பாக தண்ணீர் குடிப்பது நாம் அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளும். அதிகமாக பசி எடுக்கும்போது நமக்கு பிடித்த ஏதாவது கிடைத்தால் நிறைய சாப்பிடுவோம் .அது போன்ற சமயம்எங்களை உணவு எடுத்துக்கொள்ளும், முன்பு வெதுவெதுப்பான நீரை குடியுங்கள். அது நிறைய சாப்பிடுவதை தடுப்பதோடு கொழுப்பை எரிக்கவும் உதவி செய்யும்.
தாவர புரதங்கள்
உடல் பருமனாக உள்ளவர்களுக்கு எடையை குறைப்பதற்கான டயட்டில் புரத உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள சொல்வார்கள் பெரும்பாலும் அசைவ உணவில்தான் அதிகமான புரதங்கள் இருக்கின்றன. ஆனால் ஆய்வு ஒன்று சிறப்பு இறைச்சி மற்றும் பிற மாமிச வகைகள் எடுத்துக்கொண்டவர்களை காட்டிலும் தாவர அடிப்படையிலான பிறகு உணவு எடுத்துக்கொண்டால் வேகமாக எடை குறைவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளில் வாரத்துக்கு மூன்று நாள் முழுமையான சைவ உணவை சாப்பிட்டால் எடை குறைய வாய்ப்புண்டு.
கொழுப்பு கரைய சாப்பிட வேண்டியது
இளம் கொழுந்து வெற்றிலை உடன் நான்கு மிளகு, திராட்சை சேர்த்து வாயில் போட்டு மென்று வெறும் வயிற்றில் 8 வாரங்கள் சாப்பிட உடலில் உள்ள கழிவுகள் நீங்குவதுடன் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.
சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட ஊளைச்சதை குறைந்து, அடிவயிறு, இடுப்பை சுற்றியுள்ள கெட்ட கொழுப்புகள் குறைய உதவும்.
மரவள்ளிக்கிழங்கில் நிறைய நார்ச்சத்துகள் உள்ளதால் குடலிலுள்ள கழிவுகளை நீக்கி வயிற்று பகுதியிலுள்ள கொழுப்பை குறைக்க தூண்டும்.
தினமும் இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்து உப்பு போட்டு. குடித்தாலும் இஞ்சிசாறுடன் தேன் கலந்து சூடாக்கி,
காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு, வெந்நீர் குடிக்க இடுப்பு சதை விரைவில் குறையும்.