க்ளாஸ் ஸ்கின் முதல் நீல ஐ ஷேடோ வரை: 2026-ன் லேட்டஸ்ட் மேக்கப் கையேடு!


Latest Makeup Guide
Latest Makeup Guide
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

2026ன் லேட்டஸ்ட் மேக்கப் டிரெண்டுகள் இயற்கையான, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான தோற்றத்திற்கு (glowing skin) முக்கியத்துவம் அளிக்கின்றது. முக்கியமாக கொரியன் கிளாஸ் ஸ்கின், நேர்த்தியான ப்ளஷ் (Blush) பயன்பாடு, பிரகாசமான சிவப்பு உதடுகள் மற்றும் நீல நிற ஐ ஷேடா போன்றவை ட்ரெண்டில் உள்ளன.

அடர்த்தியான வாட்டர்லைன் ஐலைனர், கன்னத்தில் உயரமாக பூசப்படும் ப்ளஷ், நவீன கிரன்ஜ் கண்கள், செயற்கை மச்சங்கள் மற்றும் பளபளப்பான கண்ணாடி போன்ற சருமத் தோற்றம் ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய டிரெண்டாகும்.

1) மேக்கப் செய்வதற்கான 2-3 விதி:

2-3 விதி என்பது, எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு பதிலாக, இரண்டு மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதைக் குறிக்கும். உதாரணத்திற்கு கண்களுக்கு தீவிரமான மேக்கப் செய்தால், உதடுகளையும் கன்னங்களையும் இயல்பாக வைத்திருப்பது. இது ஒரு சமநிலையை உருவாக்குவதோடு நம் தோற்றம் மிகையாகத் தெரிவதையும் தடுக்கிறது.

2) பளபளப்பான சருமம்:

கனமான பவுண்டேஷன்களுக்கு பதிலாக, சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் மற்றும் இயற்கையான பொலிவைத் தரும் லைட்-வெயிட் மேக்கப் அதிகம் விரும்பப்படுகிறது. அதிகப்படியான மேக்கப் போடுவதற்கு பதிலாக, இயற்கையாகவே சருமம் ஜொலிப்பது போன்ற தோற்றத்தையே பலரும் விரும்புகின்றனர். முகம் எப்போதும் குளித்து முடித்தவுடன் இருக்கும் ஒரு புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு, மேக்கப்பிற்கு முன்னதாக நல்ல மாய்ஸ்சரைசர் மற்றும் ஃபேஸ் ஆயில் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வெயிலையும் ஸ்டைலாக எதிர்கொள்ளலாம்! லேட்டஸ்ட் சம்மர் கலெக்ஷன்ஸ் இதோ!

Latest Makeup Guide

3) மினிமலிஸ்ட் மேக்கப்:

இயற்கையான அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து, குறைந்த அளவு மேக்கப் பொருட்கள் பயன்படுத்தும் முறை இப்பொழுது டிரெண்டாகி வருகிறது. இயற்கையான அழகை வலியுறுத்தி, எளிமையான மற்றும் மென்மையான தோற்றத்தை உருவாக்கும் இந்த மினிமலிஸ்ட் மேக்கப் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து 5-10 நிமிடங்களில் முடிக்கக்கூடிய தினசரி மற்றும் திருமண நிகழ்வுகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த பாணியாகும்.

கனமான பவுண்டேஷங்களுக்கு பதிலாக BB கிரீம், CC கிரீம் அல்லது லைட்வெயிட் பவுண்டேஷன் பயன்படுத்தலாம். உதடுகள், கன்னங்கள் மற்றும் கண்களுக்கு ஒரே மாதிரியான டின்ட் (Tint ) அல்லது லிப் அண்ட் சீக் (lip & cheek) கலர் பயன்படுத்துவது நேரத்தை மிச்சப்படுத்தும். மஸ்காரா, ஐப்ரோ ஜெல் மற்றும் லிப் பாம் கொண்டு தோற்றத்தை நிறைவு செய்யலாம்.

4) நீல நிற ஐ ஷேடோ:

90களின் ஸ்டைலை நினைவுபடுத்தும் வகையில், நீல நிற ஐ ஷேடோ மற்றும் லைனர் கண்கள் பிரபலமாகி வருகிறது. இது கண்களுக்கு தைரியமான, நவீன மற்றும் துடிப்பான தோற்றத்தைத் தருகிறது. கிராஃபிக் லைனர்கள், ஸ்மோக்கி ஐஸ் அல்லது முழு மூடிகளிலும் பயன்படுத்தப்படும் இந்த வண்ணம் அனைத்து கண் நிறங்களுக்கும், குறிப்பாக பழுப்பு மற்றும் நீலக்கண்களுக்கு ஏற்றது. கண்களின் வெளிப்புற மூலைகளில் அடர் நீல நிறத்தையும், உள்புறத்தில் வெளிர் நிறத்தையும் பயன்படுத்தி கலக்கலாம். வாட்டர்லைனில் பழுப்பு நிற கோல் பென்சில் பயன்படுத்துவது நீல ஐ ஷேடோவை மேலும் அழகாக மாற்றும்.

5) ப்ளஷ் அடுக்கு (Blush layering):

கன்னங்களில் மட்டுமல்லாமல், கண்களுக்கு கீழேயும் ப்ளஷ் பூசி ஒருவித புத்துணர்ச்சியான, இளமையான தோற்றத்தை உருவாக்கும் டிரெண்டும் தற்போது நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்:
முகப்பரு முதல் வறண்ட சருமம் வரை... இயற்கையான முறையில் நிரந்தர தீர்வு!

Latest Makeup Guide

6) வெண்ணெய் போன்ற சருமம் மற்றும் பிரகாசமான உதடுகள்(Glossy lips):

மென்மையான வெண்ணை போன்ற அமைப்பில் சருமத்தை வெளிப்படுத்தும் மேக்கப்பும், லிப் கிளாஸ் மற்றும் பிரகாசமான வண்ண உதட்டு சாயங்களும் டிரெண்டில் உள்ளது. லிப்ஸ்டிக் தடவிய பின் ஓரங்களை லேசாக மங்கலாக்கி (Smudged) இயற்கையான தோற்றத்தை கொடுக்கும் முறை இப்பொழுது பிரபலமாக உள்ளது.

இந்த போக்குகள் அதிகப்படியான மேக்கப்பிற்கு பதிலாக எளிமையான மற்றும் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன. இப்படிப்பட்ட ட்ரெண்டுகள் மேக்கப்பை ஒரு கலைப் படைப்பாகவும், தங்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு விஷயமாகவும் பார்க்க ஊக்குவிக்கின்றது.

logo
Kalki Online
kalkionline.com