ஃபாஸ்ட் ஃபேஷன் மோகம்: உங்கள் பையையும் ஆளுமையையும் காலியாக்குகிறதா?

Fast fashion craze
Fast fashion craze
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

ன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில், வாரந்தோறும் மாறும் 'ஃபாஸ்ட் ஃபேஷன்' மோகத்தில் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம். மலிவான விலையில் கிடைக்கும் ஆடைகளை வாங்கி, சில முறைகள் மட்டும் அணிந்துவிட்டு எறிந்துவிடுவது ஒரு வழக்கமாகிவிட்டது. ஆனால், இந்தப் பழக்கம் பணத்தை மட்டுமல்ல, நம் ஆளுமையின் மதிப்பையும் குறைக்கிறது. ‘30-வேர் ரூல்’ (30-Wear Rule) எனும் புதிய அணுகுமுறை இதற்கு ஒரு தீர்வாக இருக்கும்.

30-வேர் ரூல்' என்றால் என்ன?

சுற்றுச்சூழல் ஆர்வலர் லிவியா ஃபிர்த் என்பவரால் தொடங்கப்பட்ட இந்தக் கருத்து மிகவும் எளிமையானது. ஒரு ஆடையை வாங்கும்போது, ‘இந்த ஆடையை நான் குறைந்தது 30 முறையாவது அணிவேனா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். ஆம் என்றால் மட்டுமே அதை வாங்க வேண்டும். இது வெறும் சிக்கன நடவடிக்கை மட்டுமல்ல, ஒரு உயர்ந்த வாழ்க்கை முறைக்கான தொடக்கம்.

'ஸ்லோ ஃபேஷன்':

வேகமாக மாறி மறையும் டிரெண்டுகளைப் பின் தொடராமல், காலத்தால் அழியாத ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதே 'ஸ்லோ ஃபேஷன்'. இது தரம் மற்றும் நேர்த்தியில் கவனம் செலுத்துகிறது.

வார்ட்ரோபில் நூறு ஆடைகள் இருப்பதற்குப் பதில், மிகச்சிறந்த தரம் வாய்ந்த பத்து, இருபது ஆடைகள் இருப்பது நல்லது. தரமான காட்டன், லினன் அல்லது கைத்தறி ஆடைகள் பல ஆண்டுகள் உழைப்பதோடு, ஒவ்வொரு முறை அணியும்போதும் ஒரு 'ரிச்' லுக் தரும்.

தினமும் எதை உடுத்துவது? என்ற குழப்பம் இருக்காது. அளவான, நல்ல, ஒரு சில உயர் ரக ஆடைகளை வைத்திருப்பவர்கள் மிக எளிதாகவும் நேர்த்தியாகவும் தயாராக முடியும். இந்தத் தெளிவு அவர்களின் பணி இடத்திலும் பிரதிபலிக்கும்.

இதையும் படியுங்கள்:
நோ மேக்கப் லுக்: இயற்கையான பொலிவைப் பெற சில எளிய வழிகள்!
Fast fashion craze

தரமான ஆடைகளும், சமூக மரியாதையும்:

ஆண்களுக்கு: ஒரு அடர் நீல நிற பிளேசர் அல்லது நேர்த்தியான சந்தன நிறக் குர்தா போன்ற ஆடைகள் எப்போதும் டிரெண்டில் இருப்பவை. இவற்றை அலுவலகம், சுபநிகழ்ச்சிகள் எனப் பல இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.

பெண்களுக்கு: சந்தன நிறம், பீஜ் அல்லது க்ரீம் நிறம் எப்போதுமே ஒரு கண்ணியமான தோற்றத்தைத்தரும். ஒரு தரமான காட்டன் குர்தாவை அலுவலகத்திற்கு ஒரு நேர்த்தியான பேண்ட் உடனும், சுப நிகழ்ச்சிகளுக்கு ஒரு பட்டுத் துப்பட்டா உடனும் மாற்றி மாற்றி அணியலாம். இது 30 முறை அல்ல, அதற்கும் மேலாகவே நீடித்து உழைக்கும்.

2. நேவி ப்ளூ/கறுப்பு நிறச்சேலைகள்:

பெண்களின் வார்ட்ரோபில் ஒரு அடர் நீல நிற அல்லது கறுப்பு நிற லினன் அல்லது சில்க் காட்டன் சேலை இருப்பது ஒரு வரப்பிரசாதம். அலுவலகத்தி ற்கு ஒரு எளிமையான பிளவுஸ் மற்றும் சிறிய கம்மலுடன் அணிந்தால் அது நேர்த்தியாக இருக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கு அதே சேலையை எம்பிராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த பிளவுஸ் மற்றும் ஆபரணங்களுடன் அணிந்தால், ரிச் லுக் கொடுக்கும்.

3. 'வெள்ளை' நிறச் சட்டைகள்/லாங் டாப்ஸ்:

ஒரு வெள்ளை நிற லாங் ஷர்ட் அல்லது குர்தா' ஸ்லோ ஃபேஷன்' உலகிற்கு மிக முக்கியமானது. இதை ஜீன்ஸ், லெகிங்ஸ் அல்லது ஒரு ஸ்கர்ட் என எதனோடும் இணைத்து அணியலாம். வெள்ளை நிறம் எப்போதுமே ஒரு தூய்மையான மற்றும் நேர்மறையான பிம்பத்தை மற்றவர்களிடம் உருவாக்கும்.

4. தரமான ஸ்கார்ஃப்/ஸ்டோல் (Stoles):

ஒரே ஆடையை வெவ்வேறு விதமாகக் காட்ட உதவுவது இந்த ஸ்டோல்கள்தான். ஒரு எளிய ஆடையின் மீது ஒரு அழகான கைத்தறி ஸ்கார்ஃப் அணிவது, அந்த ஆடைக்கே ஒரு புதிய வடிவத்தைத் தரும். அடிக்கடி புது ஆடைகள் வாங்குவதைத் தவிர்த்து, இருக்கும் ஆடையையே நேர்த்தியாகக்காட்ட உதவும்.

இதையும் படியுங்கள்:
வெயிலில் அலைந்தாலும் முகம் பொலிவுடன் இருக்க... இதோ சில டிப்ஸ்!
Fast fashion craze

5. எத்னிக் ஜாக்கெட்:

சாதாரணமாக அணியும் ஒரு குர்தா அல்லது டாப்ஸ் மீது ஒரு அடர் நிறத்திலான எத்னிக் ஜாக்கெட்டை அணிந்தால், ஒரு 'ஃபார்மல்' தோற்றத்தையோ அல்லது விழாக்காலத் தோற்றத்தையோ கொடுத்துவிடும்.

ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, 'மிக்ஸ் அண்ட் மேட்ச்' செய்யக்கூடிய அடிப்படை வண்ணங்களையும் தரமான இயற்கை இழைத் துணிகளையும் தேர்ந்தெடுத்தால், மிகக்குறைந்த ஆடைகளை வைத்தே ஓராண்டு முழுமைக்கும் விதவிதமாக அணியலாம்.

logo
Kalki Online
kalkionline.com