குளிர் காலங்களில் சருமத்திற்கு பயன்படுத்த வேண்டிய 5 கிரீம்கள்!

குளிர்காலங்களில் சருமம் ஈரப்பதம் இல்லாமல் உலர்வது இயல்புதான். பொதுவாக, இந்த காலங்களில் முகத்தைத்தான் அதிக கவனத்துடன் பராமரிப்பார்கள். அதே அளவு நம்முடைய கைகளுடைய சருமத்தைப் பராமரிப்பதும் அவசியம். இதற்கான இயற்கை வழிமுறைகளை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
5 creams to use for the skin in winter
5 creams to use for the skin in winterImg Credit: Freepik

1. அவகாடோ கிரீம்:

Avocado cream
Avocado creamImg Credit: Freepik

அவகாடோவில் C, E, K, and B6 வைட்டமின்கள், எண்ணெய் சத்து, தாதுக்கள் மற்றும் கொழுப்பு ஆகியவை உள்ளன. இது சருமத்துக்கு ஈரப்பதம் அளித்து மென்மையாக இருக்க உதவும்.

அவகாடோவை நன்றாக பவுடர் செய்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கரு, லெமன் சாறு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை நன்றாக கலந்த பின்னர் கைகளில் நன்றாக தேய்த்து 20 நிமிடங்கள் ஊரவைத்தப் பிறகு மிதமான சுடு நீரில் கழுவ வேண்டும்.

இது சாருமத்தை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

2. ரோஸ் & லேவண்டர் கிரீம்:

Rose & Lavender Cream
Rose & Lavender CreamImg Credit: HerZindagi

இந்த இரண்டுமே வாசனைத் திரவியங்களாகவும் பயன்படுத்த உதவும் பொருட்கள். தேங்காய் எண்ணெய், தேன்மெழுகு மற்றும் ஷியா வெண்ணெய் சேர்த்து சுடவைத்துக் கொள்ளவும்.

பின் அதனுடன் ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் E, ரோஸ் வாட்டர், க்ளிசரின், லேவண்டர் ஆயில் ஆகியவை சேர்த்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்தால் கிரீம் தயார். இதனை தினமும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .

3. தேன் & எலுமிச்சை கிரீம்:

Honey and Lemon Cream
Honey and Lemon CreamImg Credit: Freepik

தேன் மற்றும் எலுமிச்சை சேர்ந்த கிரீம் அனைத்தையும் விட அதிக பயன் தருபவை. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வதோடு வெண்மையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

தேன்மெழுகு, vaseline, எள் எண்ணெய், தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக சுடவைத்துக் கொள்ளவும்.

பின் அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்தப் பிறகு ஃபிரிட்ஜில் வைத்து எடுத்தால் கிரீம் தயார். இதனை தினமும் உபயோகித்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.

இதையும் படியுங்கள்:
முகத்தை பொலிவாக்கும் சியா விதை ஃபேஸ் மாஸ்க்... எப்படி தெரியுமா?
5 creams to use for the skin in winter

4. கோகோ பட்டர் கிரீம்:

Cocoa butter cream
Cocoa butter creamImg Credit: Freepik

இந்த கிரீம் சருமம் நல்ல ஊட்டச்சத்துடன் இருக்க உதவும்.

இது உங்கள் சரும நிறத்தை பராமரிக்கும் மற்றும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும். குறைந்த சூட்டில் கோகோ பட்டர் மற்றும் தேன்மெழுகு இரண்டையும் உருக்க வேண்டும். அதனுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து எடுத்தப்பிறகு அதனை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்து வந்தால் சருமம் நல்ல ஊட்டச்சத்துடன் இருக்கும்.

5. ஆலிவ் ஆயில் கிரீம்:

olive oil creamImg Credit: Freepik
olive oil creamImg Credit: Freepik

உங்கள் கைகளின் சருமம் மிகவும் உலர்ந்துள்ளது என்றால், நீங்கள் பயன்படுத்த வேண்டியது ஆலிவ் ஆயில் கிரீம் தான். இது சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவும். மேலும் நகங்களை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும் உதவும்.

தேங்காய் எண்ணெய், தேன்மெழுகு ஆகிய இரண்டையும் நன்றாக உருக்கிய பின்னர் அதனுடன் லேவண்டர் ஆயில், விட்டமின் E, ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்துவிடவும். பின்னர் அதனை ஒரு ஜாடியில் மாற்றிப் பயன்படுத்தலாம். இவாறு பயன் படுத்தி வந்தால் சருமம் உலர்வதை தடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com