
முகத்தின் அழகை அதிகரிப்பது நமது உதடுகளும் பற்களும் தான். பற்கள் என்றாலே வெண்மையாக தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் மருத்துவர்களோ சிறிது மஞ்சள் கலந்த வெண்மை நிறமே ஆரோக்கியமான பற்கள் என்கிறார்கள்.
சிலருக்கு இயற்கையாகவே மஞ்சள் கலந்த வெண்மை நிற ஆரோக்கியமான பற்கள் இருக்கும். ஆனால் கருமை படிந்த மற்றும் நிறம் மங்கிப்போன பற்களை கொண்டவர்கள் சிரிப்பதற்கு கூட தயங்குவார்கள். காரணம் சிரித்தால் தங்கள் பற்களின் நிறத்தினால் அழகாகத் தெரிய மாட்டோம் என்ற தாழ்வுணர்ச்சி.
இதோ உங்கள் பற்களும் மற்றவர்கள் போல் வெண்மையாக மிளிற வேண்டுமா? பளிங்கு சிரிப்பிற்கு நீங்களும் உதாரணமாக மாற வேண்டுமா? வீட்டிலேயே பின்விளைவுகளற்ற மூலிகை கொண்டு எளிமையாக பற்களை வெண்மையாக்குவதற்கான 5 வழிமுறைகள் இதோ,
1. உலர்ந்த துளசி இலைகள் மற்றும ஆரஞ்சு தோல்கள் எடுத்து மிக்சியில் மெல்லிய பொடியாக அரைக்கவும். இரண்டையும் கலந்து சிறிது நீர் கலந்து நன்றாக பேஸ்ட் போல தயாரிக்கவும். இந்த பேஸ்டை நேரடியாக உங்கள் பற்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டுவிட்டு, பின்னர் வாயை சாதாரண நீரில் நன்கு கழுவவும். வெண்மையான பற்களுக்கான இந்த வீட்டு வைத்தியம் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் ஒருவர் இந்த வழிமுறையை ஒரு நாள் அல்லது வாரத்தில் சில முறை செய்யலாம்.
வெண்மையான பற்களுக்கான இரண்டாவது வீட்டு வைத்தியம்.
2. பேக்கிங் சோடா அல்லது சமையல் சோடாவை சிறிய அளவு எடுத்து தண்ணீரில் கலந்து கெட்டி பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்ட்டை பற்களில் தடவி 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
இதை அகற்ற வாயில் தண்ணீர் ஊற்றி வாய் முழுவதும் சுழற்றி கொப்பளிக்கவும். ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் வெண்மை பற்களுக்கான இந்த வீட்டு முறையை பின்பற்றலாம்.
3. நமது முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறை இது. கரியின் சில துண்டுகள் எடுத்து அவற்றை நசுக்கி ஒரு பொடியாக மாற்றி பல் துலக்கும் ப்ரஷ்ஷை தண்ணீரில் நனைத்து, அதன் மீது சிறிது கரிப் பொடியைப் போட்டு பற்களின் மீது மென்மையாக தேய்த்து நீரினால் கொப்பளிக்கவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட பின்பற்றலாம். வெண்மையான பற்களுக்கான சிறந்த வீட்டு நிவாரணங்களில் ஒன்றுதான் இது.
4. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றைப் 2 தேக்கரண்டி எடுத்து வாயில் ஊற்றி பற்களின் ஒவ்வொரு மூலையையும் எண்ணெய் அடையும் வகையில் வாயில் சுழற்றிக் கொப்பளிக்கவும். இந்த வழிமுறை பாக்டீரியாவைக் கொன்று உமிழ்நீரை செயலாக்குவதால் ஆரோக்கியமான பற்கள் வெண்மையான பற்களை உருவாக்கும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை காலையில் குறைந்தது 15 நிமிடங்களுக்கு தவறாமல் கொப்பளித்து பலன் பெறலாம்.
5. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கினால், மஞ்சள் கறை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். அவ்வாறு துலக்கும்போது, எலுமிச்சைச் சாற்றோடு, சிறிது உப்பு சேர்த்து கறைபட்ட இடத்தில் தேய்த்து, வாய் கொப்பளிக்க வேண்டும்.
ஆனால் இந்த வழிமுறைகளை அளவுக்கு மீறிச் செய்தால், பற்களில் சென்சிட்டிவ் தன்மை அதிகரித்து, கூச்ச உணர்வு ஏற்படும். மேலும் ஈறுகளையும் பாதிக்கும். எனவே மிதமான அளவிலேயே பயன்படுத்த வேண்டும். இதை செய்த பின்னும் நிறம் மாற வில்லை எனில் பல் மருத்துவ நிபுணரை அணுகலாம்.