உங்கள் பற்களில் படியும் வெண் படலம் கறைகளை இயற்கையாக அகற்றிட... கறைகள் நீங்கி பற்கள் பளிச்சென்று விளங்கிட...
பல்லில் சீமை சுண்ணாம்பு போன்ற பொருள் படர்ந்திருக்கும். இது பற்கள் ஈறுகளில் இடையே உணவுப் பொருள்கள் சிக்கிக் கொள்வதன் தொடர்ச்சியாக உருவாகிறது. அது கனிம உப்புக்கள் மற்றும் கழிவு பொருள்களால் உருவாகிறது. அதன் விளைவாக இயற்கையில் வெண்மையான உங்கள் பற்களின் மேற்பரப்பு மஞ்சள் புள்ளிகளுடன் தோன்ற ஆரம்பிக்கும். இதை முற்றிலும் குணமாக்க, சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி மேலும் வராமல் தடுக்கலாம். அது என்ன என்று பார்ப்போம்....
டூத் பிரஷ்
குறைந்தபட்சம் மூன்று முறை தினமும் உங்கள் பற்களை துலக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத்பிரஷை மாற்றவும்.
மெளத்வாஷ்
உங்கள் வாய் வழி சுகாதார மேம்பாட்டுக்கு பல் இடுக்கிலுள்ள உணவுப் பொருட்களை நீக்கி சுத்தம் செய்ய, மெளத்வாஷ்களை பயன்படுத்தினால் பாக்டீரியா, டார்ட்டர் இரண்டிலிருந்தும் காக்கும்.
ஆப்பிள்
ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிட்டால் இது உங்கள் பற்களை இயற்கையாகவே சுத்தமாக்கும்.
ஆரஞ்சு பழம்
வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்களுக்கு பற்களின் மேற் பரப்பில் வளரும் நுண்ணுயிரிகளைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. பற்கள் மீது ஆரஞ்சு பழத்தின் தோலை தடவலாம்.
ஸ்ட்ரா பெர்ரி, தக்காளி
இந்த இரண்டிலும் வைட் டமின் சி உள்ளதால் இதனை பற்கள் மீது தேய்ப்பதால் பற்கள் வெண்மையாகும்.
* 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து ஈரமான டூத்பிரஷில் தொட்டு பற்களை மாதம் 2 முறை தேய்த்து வந்தால் கறை நீங்கும்.
* கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், தினமும் இருமுறை செய்து வர, பற்கள் கறை நீங்கி வெண்மையாகும்.
* தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு 10 நிமிடம் கொப்பளித்து துப்பி விட்டு பல்லை தேய்த்து விட்டு நீரால் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் நீங்கி பற்கள் கறை நீங்கி பளிச்சிடும்.
* 2 டீஸ்பூன் வெள்ளை வினிகரில் 1 டீஸ்பூன் உப்பு 1/2 கப் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து தினமும் இருமுறை வாயைக் கொப்பளித்தால் மஞ்சள் நிற கறைகள் நீங்கி பற்கள் பளிச்சிடும்.
* படிகாரம், உப்பு இரண்டும் இயற்கையான முறையில் பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்கும் அற்புதப் பொருள்களாகும்.