
உதட்டை நீரேற்றத்துடன் வைக்க தேன், சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவைகளே போதுமானது. இவற்றைப் பயன்படுத்தி உதட்டை எக்ஸ்ஃபோலியேட் செய்யலாம். இவை இறந்த செல்களை நீக்கி உதட்டை நல்ல நீரேற்றத்துடன் வைக்கும்.
1) சர்க்கரை மாற்றும் தேன் லிப் ஸ்க்ரப்:
ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளை அல்லது ப்ரௌன் சீனி
ஒரு டேபிள் ஸ்பூன் தேன்
சர்க்கரையையும் தேனையும் கலந்து அடர்த்தியான பேஸ்ட் செய்யுங்கள். இதைக் கொண்டு உதட்டில் தடவி சர்குலர் மோஷனில் மசாஜ் சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும்.
பயன்
சீனி எக்ஸ்ஃபோலியேட் செய்யும். தேன் நீரேற்றத்துடன் வைக்கும்
2) தேங்காய் எண்ணெய் மற்றும் ப்ரௌன் சுகர் லிப் ஸ்க்ரப்:
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
ஒரு டேபிள் ஸ்பூன் ப்ரௌன் சுகர்
தேங்காய் எண்ணெய் மற்றும் ப்ரௌன் சுகரைக் கலந்து பேஸ்டாக்கி உதட்டில் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் தடவவும். பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவவும். கழுவிய பிறகு அதிக நீரேற்றத்துடன் இருக் லிப் பாம் தடவவும்.
பயன்
தேங்காய் எண்ணெய் உதட்டை ஈரப்பதத்துடன் வைக்கும். ப்ரௌன் சுகர் எக்ஸ்ஃபோலியேட் செய்யும்.
3) எலுமிச்சை மற்றும் சர்க்கரை லிப் ஸ்க்ரப்:
தேவையானவை
ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை ஜுஸ்
ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில்
சர்க்கரை, எலுமிச்சை ஜுஸ் மற்றும் ஆலிவ் ஆயில் மூன்றையும் கலந்து உதட்டில் தடவி மசாஜ் சேர்த்து பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவவும்.
பயன்
எலுமிச்சை உதட்டை பளபளப்பாக்கும். சர்க்கரை எக்ஸ்ஃபோலியேட் செய்யும். ஆலிவ் ஆயில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
4) காபி மற்றும் தேங்காய் எண்ணெய் லிப் ஸ்க்ரப்:
ஒரு டேபிள் ஸ்பூன் காபி பொடி
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
ஒரு டீஸ்பூன் தேன்
காபி பௌடர், தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் இவற்றை நன்கு கலந்து உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். வெது வெதுப்பான நீரில் கழுவவும்.
பயன்
காபி பௌடர் ரத்த ஓட்டத்தை சீராக்கும். தேங்காய் எண்ணெய் ஈரப்பதத்தை தரும்.
5) பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரை லிப் ஸ்க்ரப்:
ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை
ஒரு டேபிள் ஸ்பூன் ஆல்மண்ட் ஆயில்
ஒரு டீஸ்பூன் தேன்
ஆல்மண்ட் ஆயில், சர்க்கரை மற்றும் தேன் சேர்த்து இக்கலவையை உதட்டில் தடவி மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
பயன்
ஆல்மண்ட் ஆயில் புத்துணர்ச்சியுடன் உதட்டை மிளிரச்செய்யும. தேன் ஈரப்பத்தைத் தரும்.
மேற் கூறிய லிப் ஸ்க்ரப்களை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை மட்டுமே உபயோகிக்கவும். ஸ்க்ரப் செய்து பிறகு லிப் பாம் உபயோகிக்கவும். இம்முறைகளைக் கையாண்டால் உங்கள் உதடு பொலிவாகும்.