
ஆண்களின் அழகே அவர்களின் தாடிதான்; தாடி ஒரு ஆணுக்கு நல்ல முதிர்ச்சியான, ஸ்டைலான, தோற்றத்தை தரும். ஆனால் சில ஆண்களுக்கு தாடிவளர்ச்சி குறைவாகவோ, அல்லது திட்டு திட்டாக ஆங்காங்கு சின்னதாக வளர்ந்திருக்கும்.
இப்படியான ஆண்கள் சற்று கவர்ச்சி குறைவாக காணப்படுவதோடு, இதனால் அவர்கள் சுயமரியாதையும் பாதிப்புக்குள்ளாகும் .
ஆண்கள் தங்களின் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் சில இயற்கையான பொருட்களைக் கொண்டு பராமரிக்கும் போது தாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
தாடியின் வளர்ச்சியை தூண்ட உதவும் சில இயற்கையான வழிகள் என்ன என்று பார்ப்போம்.
1.வெங்காய ஜுஸ்:
வெங்காய ஜூஸ் தாடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் சிறந்தது. இதற்கு இதில் உள்ள அல்லிசின்தான் காரணம். இந்த அல்லிசின் செல்தான் அடர்த்தியாகவும், வேகமாகவும் முடி வளர உதவுகிறது.
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து, அதை தாடி வளரும் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் மைல்டு சோப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
2. தேங்காய் எண்ணெய்:
தாடியின் வளர்ச்சியை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள். தேங்காய் எண்ணெயுடன் ரோஸ்மேரி எண்ணெய் கலந்தும் மசாஜ் செய்யலாம். வெது வெதுப்பாய் தேங்காய் எண்ணெயை சூடாக்கி பஞ்சுருண்டையில் நனைத்து தடவி குறைந்தது 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவலாம். இப்படி வாரம் 3 முறை பயன் படுத்தினால் சிறந்த பலனைப் பெறலாம்.
3. யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்:
யூகலிப்டஸ் எண்ணெயும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். ஆனால், இதில் உள்ள பொருட்களால், சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.
அதனால் யூகலிப்டஸ் எண்ணெயுடன் நல்லெண்ணெய் கலந்து தாடி வளரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் மைல்டு சோப்பால் கழுவ வேண்டும்.
4. பூண்டு ஜூஸ்:
தாடியின் வளர்ச்சியை வளர்ப்பதில் பூண்டு பெரிதும் உதவுகிறது. இதற்கு பூண்டில் உள்ள அல்லிசின்தான் காரணம். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர்க்கால்களை வலுவடையச் செய்து, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பூண்டுப் பற்களை அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் 1:2 என்ற விதத்தில் கலந்து தாடி வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
பின் 10 நிமிடம் ஊற வைத்து மைல்டு சோப்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
5. எலுமிச்சை + பட்டை தூள்:
ஒரு பவுலில் பட்டைத் தூள் சிறிது எடுத்து எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து தாடி வளரும் இடத்தில் தடவி குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் தாடியில் நல்ல வளர்ச்சியை காணலாம்.
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம், கால்சியம், வைட்டமின் சி போன்றவை உள்ளதால், தாடியில் பொடுகு வருவதை தடுக்கும் பட்டை மயிர்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து பயன்படுத்தும் போது தாடி வேகமாக வளரும்.
இந்த இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.