கொரியப் பெண்களின் அழகின் ரகசியம் சொல்லும் 6 டிப்ஸ்!

korean gilrs
korean gilrsImage credit - pixabay
Published on

கொரியப் பெண்கள் பளபளப்பான சருமத்திற்கும் அழகிற்கும் பெயர் போனவர்கள். அவர்களின் அழகு ரகசியம் சொல்லும் 6 டிப்ஸ்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

டிப்ஸ் 1 மசாஜ்:

கொரியப் பெண்கள் மசாஜ் என்னும் மந்திரம் செய்யத் தெரிந்தவர்கள். சிறந்த சரும ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்துவதற்காக, கொரியப் பெண்கள் தங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட முக மசாஜ் நுட்பங்களைப் பின்பற்றுகிறார்கள். தங்கள் கை விரல்களின் நுனியில் மாய்ஸ்ரைசரை தடவிக் கொண்டு மசாஜ் செய்து கொள்கிறார்கள்.

கன்னங்களின் மையத்திலிருந்து வெளிப்புறமாக நெற்றிப் பொட்டு வரை வட்ட வடிவத்தில் மென்மையான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யவேண்டும். பின்பு நெற்றி, தாடை, கண் பகுதியைச் சுற்றிலும் உள்ள இடங்கள், மூக்கு, கழுத்து என மசாஜை தொடர வேண்டும்.

இந்த முக மசாஜ்கள் இரத்த ஓட்டம் மற்றும்  நிணநீர் வடிகால்களை மேம்படுத்துதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் தோலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்தும்.

டிப்ஸ் 2 இரு முறை சுத்தம்:

கொரியப் பெண்கள் தங்கள் மேக்கப்பைக் கலைக்க இரண்டு முறை முகத்தை சுத்தம் செய்கிறார்கள். முதலில் ஏதாவது ஒரு ஆயிலை எடுத்து முகத்தில் தடவி சுத்தம் செய்கிறார்கள். இரண்டாவது  கிளன்சர்களை தடவி, பின் ஈரமான துணியால் முகத்தில் இருக்கும் வியர்வை மற்றும் அழுக்கை எடுக்கிறார்கள். இரண்டு முறை இப்படி செய்வதால் முக அழுக்கு, இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளக்கும்.

டிப்ஸ் 3 ஃபேஸ் ஷீட் மாஸ்க்:

கொரிய ஃபேஸ் ஷீட் முகமூடிகள் மெல்லிய துணியால் ஆனவை. இவை ஹைலூரோனிக் அமிலம், வைட்டமின்கள், தாவரவியல் சாறுகள் மற்றும் ஊட்டமளிக்கும் சீரம்களில் தோய்க்கப்பட்டு, சருமத்தை ஹைட்ரேட் செய்யவும், பிரகாசமாகவும், புத்துணர்ச்சியூட்டவும் வடிவமைக்கப்படுபவை. அவை முகத்துடன் நெருக்கமாக ஒட்டிக்கொள்கின்றன. பதினைந்து நிமிடம் கழித்து எடுத்துவிடுகிறார்கள்.

டிப்ஸ் 4. உதடுகள் மற்றும் கண் அழகு:

கொரியப் பெண்கள் உதடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள். உதடுகளுக்கு நன்றாக பிரைட் கலரில் இருக்கும் லிப்ஸ்டிக் உபயோகிக்கிறார்கள். 

கண்களுக்கு அடியில் கருவளையம் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். மேக்கப் போடும்போது மிக கவனமாக கண்களுக்கு அடியில் மேக்கப் செய்து கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நல்லோர்களது நட்பு நன்மைக்கே!
korean gilrs

டிப்ஸ் 5 - ஸ்கின் டயட்:

தங்களுடைய தோல் அழகிற்காக கொரியப் பெண்கள் கிம்ச்சியை தவறாமல் உட்கொள்கிறார்கள். முட்டைக்கோசை வெள்ளைபூண்டு மிளகு இஞ்சி மற்றும் மசாலாவுடன் வேகவைத்து சாப்பிடுகிறார்கள். இதில் முழுக்க முழுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும் ப்ரோபயாட்டிகளும் நிறைந்து இருக்கின்றன. வறுக்கப்பட்ட பார்லியால் ஆன டீ குடிக்கிறார்கள். இதிலும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் திராட்சை பெரிக்கள், மாம்பழங்கள் கடல் உணவுகள் மற்றும் பூசணிக்காய் தர்பூசணி போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

டிப்ஸ் 6 -ஜம்சு டெக்னிக்:

அவர்கள் மேக்கப் போடுவதற்கு ஜம்சு என்கிற டெக்னிக்கை பயன்படுத்துகிறார்கள். முதலில் ப்ரைமர், பவுண்டேஷன் கிரீம், கன்சீலரை அப்ளை செய்கிறார்கள். பின்பு பேபி பவுடரை முகம் முழுக்க தூவி விடுகிறார்கள். பின்பு ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த தண்ணீரை நிரப்பி முகத்தை அதில் 15 நொடிகளுக்கு மூழ்குமாறு வைக்கிறார்கள். பின்பு முகத்தை உலர செய்து மீண்டும் மேக்கப் ஐ தொடர்கிறார்கள். இதனால் முகத்தில் மேக்கப் சீராகப் பரவி, நாள் முழுதும் கலையாது அதனால் அவர்களுடைய முகம் பளபளப்பாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com