
மேக்கப் போடுவதை விடவும் அதை முகத்தில் இருந்து நீக்குவது மிகவும் சிரமமானது. ஏனெனில் சாதாரணமாக பயன்படுத்தும் அனைத்து அழகு சாதன பொருட்களிலும் ரசாயனங்கள் கலந்துள்ளன. மேலும் அதனை அகற்றவும் சிலர் கடைகளில் விற்கப்படும் மேக்கப் ரிமூவர்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் சருமத்திற்கு பிரச்சனைகள் ஏற்படும். எனவே மேக்கப்பை அகற்ற மலிவான, இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது. எந்த தீங்கும் விளைவிக்காது. இன்று முகத்திற்கு(சருமத்திற்கு) எந்தவித பாதிப்பும் இல்லாமல் மேக்கப்பை நீக்க உங்களுக்கு உதவி செய்யும் 8 பொருட்களை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
சுத்தம் செய்யும் தைலம்: மேக்கப்பை சுத்தப்படுத்தும் தைலத்தை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். சருமத்தை சுத்தப்படுத்தும் தைலம் உங்கள் முகம், உதடு மற்றும் கண் ஒப்பனையை மெதுவாக உருக்கி, உங்கள் சருமம் அதிகமாக வறண்டு போவதைத் தடுக்கிறது.
மைக்கேலர் நீர் (micellar water): மைக்கேலர் வாட்டர் என்பது ஒப்பனையை அகற்றுவதற்கான விரைவான மற்றும் மென்மையான வழியாகும். இது கிளிசரின் போன்ற ஈரப்பதமூட்டும் பொருட்களைக் கொண்டுள்ளது, இது உங்கள் சருமத்தை மந்தமாக்காமல் சுத்தம் செய்கிறது.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் என்பது ஐலைனர், லிப்ஸ்டிக் போன்ற வாட்டர் புரூப்பால்(waterproof makeup) தயாரிக்கப்பட்ட மேக்கப்பை நீக்குவதற்கான இயற்கையான வழியாகும். தேங்காய் எண்ணெயை பஞ்சில் தடவி முகத்தில் மெதுவாக தேய்த்து, பின்னர் துணியால் துடைக்கலாம்.
சுத்தப்படுத்தும் எண்ணெய்: சுத்தப்படுத்தும் எண்ணெய்கள் உங்கள் முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து அழுக்கு, அசுத்தங்கள் மற்றும் வாட்டர் புரூப் மேக்கப்பை நீக்கி உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கின்றன.
மேக்கப் ரிமூவர் விப்ஸ் (makeup remover wipes): மேக்கப் ரிமூவர் விப்ஸ் வசதியானவை மற்றும் பயணத்தின் போது எடுத்துச் செல்லவும் ஏற்றவை. பயணத்தின்போது லேசான மேக்கப் மற்றும் உதட்டுச்சாயத்தை அகற்ற நீங்கள் அவற்றைப் பயன்படுத்தலாம்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய பட்டைகள் (reusable pads): இந்த சுத்திகரிப்பு பட்டைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை மற்றும் சருமத்தில் கடுமையாக இல்லாமல் மேக்கப்பை அகற்ற எண்ணெய்கள் அல்லது சுத்திகரிப்பு தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்த சிறந்தது.
கிளன்சிங் மில்க் (cleansing milk): கிளன்சிங் மில்க் கொண்டு மேக்கப்பை நீக்கும் போது இது உங்கள் முகத்திற்கு ஈரப்பதமூட்டுகிறது. இது மேக்கப்பை மெதுவாக அகற்றவும், உங்கள் சருமத்தை மிருதுவாக வைத்திருக்கவும், இயற்கையான பளபளப்பைக் கொடுக்கவும் உதவுகிறது.
மேக்கப் ரிமூவர் ஸ்ப்ரே (makeup remover spray): இது மேக்கப்பை உடனடியாக நீக்கும் தன்மை கொண்டது மற்றும் எளிமையான வழிமுறையாகும். உங்கள் முகத்தில் உள்ள அனைத்து அசுத்தங்களையும் நீக்க இந்த ஸ்ப்ரேயை முகத்தில் அடித்த பின்னர் reusable pads பயன்படுத்தி முகத்தை துடைக்க வேண்டும்.
ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய் என்பது வாட்டர் புரூப் மேக்கப் அடுக்குகளை உடைத்து, உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி, மென்மையான மற்றும் மிருதுவான தோற்றத்தை அளிக்கும் ஒரு இயற்கை தயாரிப்பு ஆகும். ஆலிவ் எண்ணெயை பஞ்சில் தடவி முகத்தில் மெதுவாக தேய்த்து, பின்னர் துணியால் துடைக்கலாம்.