
பச்சை மற்றும் கருப்பு திராட்சை
இதில் நிறைய ஆன்டிஆக்சிடண்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன. ரெஸ்வெராட்ரோல் எனும் அற்புத மூலிகை இதில் உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்குவதோடு, புற ஊதா கதிர்களின் தாக்கத்தையும் தீர்க்கக் கூடியது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவி செய்யும்.
வயதான தோற்றத்தைக் போக்க
சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவை வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதோடு, ஏஜிங் ஸ்பாட் உள்ளிட்ட பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இந்தப் பச்சை திராட்சையை உட்கொள்ளலாம். இது சருமத்தின் இளமையைத் தக்க வைக்கும்.
புற ஊதா கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்க
புற ஊதா கதிர் தாக்கத்தால் சன் டேன் மட்டுமன்றி பொலிவும் குறையும். சுருக்கம் மற்றும் சருமத்தில் சிலருக்கு காயங்கள் ஏற்படும். அதிலும் வெயிலில் இது அதிகமாகவே இருக்கும். அவற்றைக் குறைக்க திராட்சையை பயன்படுத்தலாம். அப்போ சன்ஸ்க்ரீனுக்குப் பதிலாக பயன்படுத்தலாமா என்று நீங்கள் கேட்கலாம். இது சன் ஸ்க்ரீனுக்கு மாற்று கிடையாது. ஆனால் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தைக் குறைக்க உதவி செய்யும்.
நீரேற்றத்துடன் வைக்கும்
சரும வறட்சி உண்டாவதற்கு தண்ணீர் சத்து குறைவே காரணம். உங்கள் சருமத்தை நீரேற்றத்துடன் வைக்க திராட்சை உதவும். மேலும் சருமத்தை மென்மையாகவும் புசுபுசு கன்னங்களையும் உங்களுக்குக் கொடுக்கும்.
அழற்சி குறைப்பு
உடலில் மட்டுமல்ல சருமத்தில் உண்டாகும் அழற்சியை குறைத்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும். சருமத்தில் உண்டாகும் முகப்பருக்கள் , சருமம் சிவத்தல் மற்றும் தடித்தல் பிரச்னையை சரி செய்யும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு.
சரும நிறம் அதிகரிக்கும்
முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், ஹைபர் பிக்மெண்டேஷன், மங்கு உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்ய இயற்கையான பண்புகள் திராட்சையில் உண்டு. சருமம் பளிச்சென்று ஆகும்.
கொலாஜன் அதிகரிக்கும்
திராட்சையில் சருமத்தை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருப்பதற்கு உதவுகிற கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும். இதனால் சருமம் இளமையாக இருக்கும்.
பருக்கள் மறைய
சருமத்தில் சீபம் சுரப்பு அதிகமானால் பருக்கள் உண்டாகிறது. திராட்சையின் பண்பு சருமத்திற்கு துறைகளுக்கும் ஆழம் வரை சென்று சுத்தம் செய்கிறது.
திராட்சையை எப்படி பயன்டுத்துவது?
திராட்சை ஸ்க்ரப்
பழத்தை நன்கு கழுவி தோல் மற்றும் கொட்டையுடன் பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதில் சிறிது தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.
திராட்சை டோனர்
ஒரு கைப்பிடி கருப்பு அல்லது பச்சை திராட்சையை நன்கு அரைத்து வடிகட்டி சாற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இதை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
திராட்சை பேஸ்பேக்
ஒரு கைப்பிடி திராட்சையை எடுத்து அரைத்து அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
திராட்சை விதை சீரம்
கடைகளில் க்ரேப் சீட் ஆயில் கிடைக்கும் அதில் இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் முகத்தில் தடவி மசாஜ் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
எச்சரிக்கை
திராட்சையில் எக்ஸ்ஃபோலியேட் பண்புகள் இருக்கின்றன. அதனால் சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.