
ஒரு தேக்கரண்டி கசகசாவை அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசிக்கொண்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது சருமத்தை இளமையாக வைக்கும்.
ஆரஞ்சுப் பழத்தைச் சரிபாதியாக வெட்டி அதை முகத்தில் தேய்த்து வர வேண்டும். தினமும் இப்படிச்செய்ய முகம் பொலிவாக மாறும். நாளடைவில் சிவப்பாக மாறும். மேலும் ஆரஞ்சு தோலை உலரவைத்துப் பொடியாக்கி உடலில் தேய்த்து வர உடல் சிவப்பாக மாறும்.
வெள்ளரிக்காயை இடித்து சாறைப் பிழிந்து அத்துடன் சிறிது பாலைக் கலந்து சுத்தமான பஞ்சில் அதில் நனைத்து முகத்தில் கீழிலிருந்து மேலாகத் தடவி வந்தால் கறுப்பான முகம் இருந்தாலும் ஒளிரும்.
மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பெண்கள் முகம் பிரகாசமாக இருக்கும்.
கோழி முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் பிரித்தெடுத்து ஓரு கிண்ணத்தில் எடுத்து அதில் சிறிது எலுமிச்சைசாறைப் பிழிந்து பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்க்க வேண்டும் மூன்றையும் நன்றாகக் கலந்து அந்தக் கலவையை முகத்தில் தடவிக் சுமார் 20 நிமிடம் ஊறவைத்துப் பிறகு நீர் சோப்பு போட்டுக் கழுவவும். தொடர்ந்து இதைச் செய்துவர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து முகம் பளபளப்பாகும்.
முட்டையின் மஞ்சள் கருவில் பாதாம் எண்ணையைக் கலந்து முகத்திலும் கை கால்களிலும் தடவி ஊறிய பிறகு குளிக்க தோல் சிவப்பாகவும்.
வறட்சியான தோலை உடைய பெண்களுக்கும் தோலில் சாம்பல் நிறம் பரவும். இது வியாதி அல்ல. இதைப் போக்க முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் தேன் கலந்து தோலில் தடவிக் கொள்ள வேண்டும். பின் குளியல் பொடி தேய்த்துக் குளிக்க தோல் பளபளவென்று ஆகும். எண்ணெய், நெய், மோர், இவற்றை அதிகம் சேர்ப்பது சருமம் வறட்சியைப் போக்கும்.
பெண்கள் தேங்காய் எண்ணையில் மஞ்சள் தூளைச் சேர்த்து குழைத்து உடலில் தடவி பின் மிதமான சூடான நீரில் குளிக்க சருமம் பொன்னிறமாகவும் மென்மையாகவும் மாறும்.
ஆப்பிளை அரைத்து முகத்தில் தடவி கால்மணி நேரம் கழித்து சோப்பு போட்டுக் கழுவ முகம் சிவப்பாகும்.
முதிர்ந்த வேப்பம் பட்டையை உரித்து நீரில் போட்டு எடுத்து பசு மஞ்சளுடன் அரைத்துப் பூச சரும நோய்கள் தீருவதுடன் கருப்பான தோல் சிவக்கும். பெண்ணின் சருமப் பாதுகாப்பு காக்கும் பளபளப்புக்கும் ஏற்ற கலவை இது.