முடி இழப்பு குறித்து முழுமையாக அறிய ஒரு இணையதளமா? என்னப்பா சொல்லவறீங்க?

Hair loss Image...
Hair loss Image...Image credit - pixabay.cob

ணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. தங்களது தலைமுடியினை வளர்த்துக் கொள்வதிலும், அதனை அழகுபடுத்திக் கொள்வதிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர். தங்களது முடி கறுப்பு நிறத்திலிருந்து சிறிது வெள்ளை நிறத்துக்கு மாறத் தொடங்கி விட்டாலே, முடிக்கு சாயத்தைப் பூசித் தங்களது குறையினை மறைத்துக் கொள்ளவேப் பலரும் விரும்புகின்றனர்.

ஆனால், தலையில் வளர்ந்து கொண்டிருக்கும் முடி சிறிது உதிரத் தொடங்கி விட்டாலே, அதை நினைத்துப் பெரும் கவலையடையத் தொடங்கி விடுகின்றனர். தலைமுடி இழப்புக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், கவலை கொள்ளும் மனமும், அதனால் ஏற்படும் மன அழுத்தங்களுமே தலைமுடி இழப்புக்கு முதன்மைக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

தலைமுடிதானே என்று எல்லோராலும் சாதாரணமாகக் கடந்து விட முடியாது. தலைமுடியும் பல இடங்களில் முதன்மைப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் போது, தலை முடியை மொட்டை யடித்துக் காணிக்கையாக வழங்குவதாக வேண்டிக் கொள்கிறோம். தாய், தந்தை இறப்பிற்குப் பின்பு செய்யப்படும் சில சடங்குகளில் தலைமுடியை மொட்டையடிக்கும் நடைமுறையும் உள்ளது. சில போட்டிகளில்தான் தோல்வியடைந்தால், மொட்டை யடித்துக் கொள்வதாகச் சவால் விடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் முடி மீண்டும் வளர்ந்து விடும் என்பதே... என்று சொல்லப்பட்டாலும், தலைமுடியும், தலைமுடி ஒப்பனையும் முக அழகைக் கூட்டிக் காட்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

இளம் வயதிலேயே நாம் வளர்க்கும் தலைமுடியினை இழந்து விடுவோமோ என்கிற அச்சம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் அச்சத்தைப் போக்கும் விதமாக, ஒருவருக்குத் தலைமுடி இழப்பு எப்படி இருக்கும்? என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஒர் இணையதளம் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
சாப விமோசனமும், வையகம் போற்றும் வைகாசி விசாகமும்!
Hair loss Image...

இந்த இணையதளத்தில் நம் தலை முடி இழப்புக்கான கணக்குக்குச் சிறு தகவல்களை மட்டும் உள்ளீடு செய்தால் போதும். அதாவது முதலில் வயது உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பின்பு, கீழுள்ள முடியின் அமைப்புக்கேற்ற சில படங்களில் நமக்கேற்ற படத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்பு நம் மன அழுத்தம் குறித்த தகவலை சரியாகத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் கீழுள்ள குடும்பத்தினர் முடி இழப்பு குறித்த தகவலைத் தேர்வு செய்து கொண்டு கீழுள்ள கணக்கிடும் பொத்தானைச் சொடுக்குங்கள். உங்கள் முடி இழப்புக்கான முடிவுகள்   உடனடியாகத் தெரிந்து விடும்... முழுமையான முடி இழப்பு எந்த வயதில் ஏற்படும் என்பதும் தெரிந்து விடும்.

தெரிந்து கொள்ள: http://kwebbel.net/hairloss

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com