
நமது சமையலில் இடம்பெறும் கொத்தமல்லி இலை அழகுக்கும் பயன்படும். இதில் மிக அதிக வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதன் வாசனை நம் மனதை ரிலாக்ஸாகவும் செய்ய உதவி புரிகிறது. இதனை அழகிற்காக எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
கொத்தமல்லி + கற்றாழை ஜெல்
அரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமை தோற்றம் கிடைக்கும்.
கொத்தமல்லி இலை சாறுடன் சிறிதளவு எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்களுக்கு கறித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள முகப்பருக்கள், இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பொலிவடையும்.
பேஸ் பேக்
கொத்தமல்லி இலையை அரைத்து அதில் பால், தேன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பேஸ் பேக் போல தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் ஒளி பெறும். முகம் பளிச்சென்று இருக்கும்.
தயிர் + புழுங்கல் அரிசி பேஸ் பேக்
கொத்தமல்லி இலை + புழுங்கல் அரிசி சாதம் சிறிது தயிர் சிறிது முதலியவற்றி நன்றாக நைசாக அரைத்து முகத்தில் பேஸ் பேக்மாதிரி போட்டு பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில்முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
ஓட்ஸ்
கொத்தமல்லி இலை சந்தனம் ஹோல்ஸ் ஆகியவற்றை கொண்டு நைசாக அரைத்து முகத்தில் பேஸ் பேக்காக போட்டு பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்திற்கு மிக சிறந்த பொலிவு பெறும்.
பால் + வெள்ளரி சாறு
2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 ஸ்பூன் பால் 2 ஸ்பூன் வெள்ளரி சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் வாரம் 2 முறை செய்தால் ஓரிரு வாரங்களில் சருமத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்.
அரிசி மாவு + தயிர்
கொத்தமல்லி இலை சாறு, தயிர், கற்றாழை ஜெல், அரிசி மாவுடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மென்மையாகவும் பட்டு போல பளபளப்பாகும்.
தக்காளி சாறு+ரோஸ் வாட்டர்
கொத்தமல்லி இலை சாறு 2 டீஸ்பூன், தக்காளி சாறு 2 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 2 டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள சிவப்பு தடிப்புகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
கொத்தமல்லி முகத்தில் உள்ள தசைகளுக்கு ஊட்டமளித்து முகத்தின் தோற்றத்தை மேம்படுத்தும். முகத்தை பிரஷ் ஆக காட்டும். முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முகம் கிளியர் ஆன சருமத்தைபெற முடியும்.
உதடுகள் நல்ல நிறம்பெற கொத்தமல்லி இலையின் சாறை தடவினால் கருமை நீங்கி உதடு பளபளப்பு பெறும். கொத்தமல்லிசாறு முகப்பருக்களை மட்டுமல்லாமல், அதன் தழும்புகளை போக்குகிறது முகச் சுருக்கங்களையும் நீக்க உதவுகிறது.
வாரத்தில் இரண்டுமுறை கொத்தமல்லிஇலையைஅரைத்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுப்படுத்தப்படும். தலைமுடி அடர்த்தியாகவும் மிகவும் பொலிவாகவும் இருக்கும்.