
உலகில் உள்ள அனைவருக்கும், அதாவது ஆண் பெண் பேதமின்றி, அந்தக் காலம் இந்தக் காலம் என்ற பாகுபாடின்றி, தான் பிறர் கண்களுக்கு அழகாகத் தோற்றமளிக்க வேண்டுமென்ற எண்ணம் பொதுவாக இருப்பதுண்டு. அதற்காக சருமத்தை அப்பழுக்கில்லாமல் ஆரோக்கியமாய் (Skin Care) வைத்திருக்க 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களும் முயற்சித்துக் கொண்டுதான் இருந்துள்ளனர். அவர்கள் பின் பற்றிய சருமப் பாதுகாப்பு முறைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்த முன்னோர்கள், மஞ்சள், சந்தனம், ரோஸ் வாட்டர் போன்ற இயற்கைப் பொருட்களாலான பேஸ்ட்டையே சரும ஆரோக்கியம் காக்க பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியாவில் பள பள சருமத்திற்கு மஞ்சள் பேஸ்ட்டையும், எகிப்தில் ஆலூவேரா, பால் மற்றும் சாம்பிராணி போன்றவற்றை வயதான தோற்றம் வருவதை தடுக்கவும், சருமம் நீரேற்றம் பெறவும் பயன்படுத்தினர்.
களிமண் வைத்து சருமத்தை சுத்தப்படுத்தவும், பியூமிஸ் கல்லின் உதவியால் இறந்த செல்களை நீக்கவும், ஆஸ்ட்ரிச் பறவையின் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், ஆலிவ் ஆயில், மூலிகைச் சாறு மற்றும் கடலை மாவு போன்றவற்றை சேர்த்து பேஸ்ட்டாக்கி சருமத்தில் பூசி, சூரியக் கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்தை காக்கவும் செய்தனர்.
பழங்கால இந்தியர்கள், ஆயிர்வேத வழக்கப்படி, பாக்ட்டீரியாக்களை அழிக்கவும், சருமம் பள பளப்பு பெறவும் மஞ்சள் பேஸ்ட்டை முகம், கழுத்து மற்றும் கை கால்களில் பூசி குளித்து வந்தனர்.
கிளியோபாட்ரா மற்றும் எகிப்தின் உயர் குலத்துப் பெண்கள் தங்கள் சருமம் மென்மையுற பாலில் குளித்து வந்ததாக கூறப்படுகிறது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் மிக மிருதுவாக சருமத்திலுள்ள இறந்த செல்களை உரித்தெடுக்கும் என்ற நம்பிக்கை இதன் காரணமாகும்.
உடலின் சுகாதாரத்தைப் பேணவும், உடலை சுத்தப்படுத்தவும், சூடான, வெது வெதுப்பான, குளிர்ந்த மற்றும் அதிகளவு சல்ஃபர் கலந்ததென பல வகையான தண்ணீரைப் பயன்படுத்தி குளித்து வந்தனர்.
சுமேரிய மக்கள் கை கழுவ, சோப்வார்ட் (Soapwort) என்ற தாவரத்தின் சாம்பலிலிருந்து காரத் தன்மையுடைய ஒரு கரைசலை தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
2019 ம் ஆண்டு நடத்திய ஆராய்ச்சிகளின்படி, முல்தானி மெட்டி என்றதொரு சிறப்பு வாய்ந்த களிமண்ணைக் காயவைத்து பவுடர் ஆக்கி, 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடருடன் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் மூன்று சொட்டு வேப்ப எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் ஆக்கி அந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விட முகத்தின் சருமம் சிறந்த பொலிவு பெறும் என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதை வாரம் ஒரு முறை என்ற கணக்கில் ஆறு மாதங்கள் செய்து வர முழுமையான பலன் கிடைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
முல்தானி மெட்டியில் 50 வகையான தனித்துவம் நிறைந்த இராசயானப் பொருட்கள் உள்ளதாகவும் அவை சருமத்தை இருக்க மாக்கவும், அதிலுள்ள நச்சுக்களை நீக்கவும், கொலாஜன் உற்பத்தியைப் பெருக்கவும், சருமத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய்ப் பசையை உறிஞ்சி எடுத்துவிட்டு, தேவையான கொழுப்புகளை சருமத்திலேயே தக்க வைத்துக் கொள்ளவும் உதவும் எனவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த முறையிலான ஃபேஸ் மாஸ்க் பல தலை முறைகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டு, அனைத்து முடிவுகளும் முறையாக ஆவணப் படுத்தப்பட்டும் உள்ளன.
எதிர்கால சந்ததியினரும் இந்த முல்தானி மிட்டி ஃபேஸ் மாஸ்க் செய்து உபயோகித்து பயனடைவர் என்பதில் சந்தேகம் இல்லை.