
பொதுவாக குழந்தைகளுக்கு அணிவிக்கும் உடைகள் மென்மையாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும். அதிலும் கைக்குழந்தைகளின் ஆடைகள் சுதந்திரமாக நடமாட, ஓடியாடி விளையாடும் வகையில் இருக்க வேண்டும். உடலை இறுக்கிப் பிடிக்கும் வண்ணம் இருக்கக் கூடாது. அவற்றை பராமரிக்கவும் எளிதாக இருக்கவேண்டும்.
கைக்குழந்தைகளுக்கு ஆடைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
பருத்தி;
குழந்தைகளின் உடலுக்கு ஏற்ற வகையில் ஆடைகள் மென்மையானதாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பருத்தியில் தயாரான ஆடைகள் உயர்வையை விரிஞ்சும் வண்ணம் உடலுக்கு மென்மைத்தன்மையையும் தரும். ஒவ்வாமையை ஏற்படுத்தாது. அன்றாட உடைகளுக்கு பருத்தியால் ஆன ஆடைகளை கைக் குழந்தைகளுக்கு அணிவிக்கவேண்டும்.
குழந்தைகள் குளிர்ச்சியாகவும் வசதியாகவும் உணர்வார்கள். அதிலும் ஆர்கானிக் பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகள் இன்னும் சிறந்தவை. அவை உடலுக்கு எந்த விதமான அலர்ஜியையும் ஏற்படுத்தாது. அவர்களது மென்மையான சருமத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
லினன் மெட்டீரியல்;
லினன் மெட்டீரியலால் செய்யப்பட்ட ஆடைகளும் குழந்தைகளுக்கு சிறந்தவை. அவை இலகு ரகமாகவும் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய வகையிலும் இருக்கும். துவைக்கவும் பராமரிக்கவும் எளிதாக இருக்கும். இவை குறிப்பாக துருதுருவென்று விளையாடும் சுறுசுறுப்பான குழந்தைகளுக்கு ஏற்றது.
மூங்கில்;
மூங்கிலால் செய்யப்பட்ட ஆடைகள் உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்ட குழந்தைகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
நியூ பார்ன் பேபீஸ்; (0 to ஆறு மாதங்கள்);
இவர்களுக்கு மென்மையான துணியாலான ஸ்னாப் பொத்தான்கள் வைக்கப்பட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கைக் குழந்தைகள்; (ஆறு -12 மாதங்கள்);
மென்மையான தையல்களை கொண்ட, ஓடியாடி விளையாடும் வகையில் சுதந்திரமான இயக்கத்தை அனுமதிக்கும் வகையில் உள்ள ஆடைகளை தேர்வு செய்யவேண்டும்.
கைக்குழந்தைகளுக்கான ஆடைகளின் வகைகள்;
ரோம்பர்ஸ் (Rompers)
குழந்தையின் உடலின் மேல் மற்றும் கீழ் பாகங்கள் இரண்டையும் இணைக்கும் வண்ணம் இருக்கும். குட்டையான கைகள் மற்றும் குட்டையான பேண்ட்டுகளை கொண்டிருக்கும். சட்டை மற்றும் ஷார்ட்சின் அளவை ஒத்திருக்கும். வெப்பமான காலகட்டங்களில் இவற்றை அணிவிக்கலாம். ஒற்றை ஆடையாக இருப்பதால் இவற்றை எளிதாக உடுத்தவும் கழட்டவும் முடியும்.
ஜம்ப் சூட்டுகள் (Jump suits);
ரோம்பர்களைப் போலவே ஜம்ப் சூட்களும் எல்லா விதத்திலும் வசதியாக இருக்கின்றன. குழந்தைகளுக்கு எளிதாக அணிவிக்க முடியும். இந்த வகையான உடைகள் குழந்தைகளின் கைகள் மற்றும் கால்களை மறைக்கும் வண்ணம் இருக்கும். கழுத்தில் இருந்து கால் வரை மூடும் வகையில் குளிர்கால சூழ்நிலைக்கு ஏற்றவை. குழந்தையை வெதுவெதுப்பாகவும் சௌகரியமாகவும் வைத்திருக்கும்.
பாடி சூட்டுகள் (Body suits);
இடுப்பு பகுதியில் பட்டன்கள் போடும் வகையில் அல்லது ஓட்டும் வகையில் இருப்பதால் டயப்பர்களை கழற்றி மாற்ற எளிதாக இருக்கும்.
ஸ்லீப் சூட்டுகள் (Sleep suits);
இவை குழந்தைகளின் கால்களை மறைக்கும் வண்ணம் இருப்பதால் தூங்கும்போது அவர்களை கொசு கடிக்காத வண்ணம் இருக்கும்.
கவுன்கள்; இவை நீண்ட தளர்வான ஆடைகள். குழந்தைகளுக்கு எளிதாக அணிவித்து மாற்றும் முறையில் இருக்கும்.
ஸ்லீப் பேக்கள் (Sleep bags);
குழந்தைகள் தூங்கும்போது பாதுகாப்பாகவும் வசதியாகவும் வைத்திருக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட பைகள் இவை. ஜிப் மற்றும் பொத்தான் வைத்து மூடப்படும் வகையில் இருக்கும். இரவு முழுவதும் குழந்தை வசதியாக தூங்குவதற்காக பருத்தி அல்லது மஸ்லின் போன்ற மென்மையான துணிகளில் தயாரிக்கப்படுகிறது. இதனால் குழந்தை தனது கை கால்களை வசதியாக நகர்த்துவதற்கு போதுமான இடம் இருக்கும்.
கழுத்துப் பகுதியில் குழந்தையின் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ற வகையில் துளைப்பகுதி இருக்க வேண்டும். சில ஸ்லீப் பேக்குகளில் குழந்தைகளுக்கு காற்றோட்டம் வரும் வகையில் கைகளுக்கு கீழே மற்றும் பின்புறத்தில் வலைப் பலகைகளை கொண்டுள்ளன. இவற்றை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். பேக் செய்யவும் எளிதானவை.