வீட்டிலேயே செய்யலாம் 'அதிமதுர மேஜிக்' - முகம் பட்டுப்போல் மென்மையாக மாற இயற்கை தீர்வுகள்!

athimadhuram-face-pack
athimadhuram-face-pack
Updated on

யற்கையான முறையில் முகம் பொலிவு பெற அதிமதுரம் பௌடர் சிறந்தது.‌ இதில் க்ளாப்ரிடின் என்ற பொருள் முகத்தை பளபளப்பாக்கும், அழற்சியைக் குறைத்தும், பிக்மெண்டேஷனையும் போக்கும் பண்புடையது.‌ இது சருமத்தின் நண்பனாகச் செயல்படுகிறது.‌ அதிக எண்ணைப் பசையை நீக்கும். முகக் கருமையை நீக்கும் சிறந்த டோனராக செயல்படுகிறது.‌ இதன் பாக்டீரியா விரோத பண்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு  முகப்பருக்கள் அதனால் ஏற்படும் வடுக்களை போக்கும் ‌ சருமத்தை நீர்ப்பதத்துடன் வைக்கும்.

இதன் ஆன்டி ஆகாசிடண்டுகள் ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் குறைப்பதால் முகம் சுருக்கம் மற்றும் கோடுகள் உருவாவதைத் தடுக்கும். இது சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டாக செயல்படுகிறது‌.

அதிமதுர முக மாஸ்க் வகைகள்

அதிமதுரம்  ரோஸ் வாட்டர் பேக்

ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பௌடருடன் இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவவும்  15நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவாகும்

அதிமதுரம், தேன் முகம் பேக்

ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் அதிமதுரப்பௌடர் கலந்து முகத்தில் தடவி 15நிமிடம் கழித்துக்கழுவ  வறண்ட முகம் பளபளப்பாகவும்

அதிமதுரம் பௌடர் மஞ்சள் பொடி பேக்

ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பௌடருடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து, சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவிக் கழுவ முகம் பருக்கள் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
40% பேர் அதிக எடை! இந்த லிஸ்ட்டில் நீங்கள் இருக்கிறீர்களா? தப்பிப்பது எப்படி?
athimadhuram-face-pack

அதிமதுரம் தயிர் பேக்

ஒரு டீஸ்பூன் அதிமதுர பௌடருடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவிக்கழுவ முகம் பட்டுபோல் ஆகும்

அதிமதுரம் ,ஆலோவேரா பேக்

ஒரு டீஸ்பூன் அதிமதுரம் பௌடருடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலோ வேரா ஜெல் கலந்து முகத்தில் தடவி 15நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ அரிப்பு நீங்கி முகம் மென்மையாகும்‌

மேற்கூறிய பேக்குகளை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன் படுத்தலாம்‌ சிலருக்கு அரிப்பு ஏற்பட்டால் பயன் படுத்த வேண்டாம்.‌ இதை பயன்படுத்தும் உன் காதின் பின்பக்கம் தடவி டெஸ்ட் செய்யுங்கள் ஏதும் ஆகவில்லை என்றால் பயன் படுத்துங்கள்.

வைட்டமின் ஈ காப்ஸ்யூல் 

அழகு சாதனங்களில் இது முக்கிய இடத்தைப் பெறுகிறது‌. சருமத்தில் நீரேற்றத்தை அதிகரித்து, வயதான தோற்றத்தையும் இது தடுக்கிறது. இதில் வைட்டமின் ஈ ஆயில் நிறைந்துள்ளது  டோகோஃபெரால் என்ற பொருள் இந்த  ஆயிலில் இருப்பதால் முகத்திற்குச் சிறந்த பாதுகாப்பு தருகிறது.

ஈ ஆயிலின் முக்கியத்துவம்

இது ஃப்ரீ ராடிகல்களின் அழுத்தைக் குறைத்து சருமத்தை அல்ட்ரா வயலட்கதர் பாதிப்பிலிருந்து காக்கிறது.

நல்ல நீரேற்றத்தைத் தந்து வறட்சியான சருமத்தை  தடுக்கிறது.

இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு சிவத்தல்,அரிப்பு,மற்றும் அழற்சியைக்  குறைக்கிறது.

முகத்தில் ஏற்படும் புண் காயங்களை ஆற்றுகிறது. இதன் நீரேற்றம் முகத்தை நெகிழ்வான வைக்கிறது‌.

இதையும் படியுங்கள்:
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை விரட்டும் இயற்கை 'சீட்' (Seed) ஃபேஸ் பேக்குகள்!
athimadhuram-face-pack

முகச்சுருக்கம், ஹைப்பர் பிக்மெண்டேஷனை போக்குகிறது‌. வயதான தோற்றத்தைத் தடுத்து இளமையாக வைக்கிறது‌ இதை வறண்டபகுதி, உதடுகளில் அப்படியே தடவலாம்.

பருக்களால் ஏற்படும் வடுக்கள் மற்றும் கருமையான இடங்களில் தடவ குணம் தெரியும்.இத்துடன்  ஜோஜோபா மற்றும் ஆல்மண்ட் ஆயில் கலந்து முகத்தில் தடவலாம். இது சருமத்தில் உள்ள  செல்களுக்கு ஊட்டத்தைக் கொடுத்து சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை  தருகின்றது. சருமத்தின் கொலாஜனைத்தூண்டி நெகிழ்வான வைத்திருக்கும் பண்பு படைத்தது.

logo
Kalki Online
kalkionline.com