
பரங்கி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணையில், ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்து மிகுந்தது. இந்த எண்ணை பச்சையாகவும் அல்லது சிவப்பாகவும் இருக்கும். இதைத் தலைக்குத் தடவுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு. நன்மைகள் நிறைந்தது. மக்னீசியம், மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த இது முடிவளர்ச்சிக்குச் சிறந்தது. நிறைந்தது.
இதன் நன்மைகள்
இதன் விதைகளில் முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் என்ற பொருள் உள்ளது. இது தலை முடியின் வழுக்கை மற்றும் அலோபீசியா நோயையும் தடுக்கிறது. ஆராய்ச்சியின்படி ஆண்களுக்கு இந்த எண்ணையை பயன்படுத்தும்போது 40 சதவீதம் முடி வளர்ச்சி அதிகரிப்பதாக தெரிகிறது.
வெங்காய ஜுஸ்
வெங்காய ஜுஸை வழுக்கையான இடத்தில் தடவிவர முடி வளரும். விளக்கெண்ணை தடவி வர முடி வளர்ச்சி தூண்டப்படும்.
ஆலோவேரா ஜெல்லை வழுக்கை பகுதியில் தடவிவர முடி வளரும்.
தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலையை கொதிக்க வைத்து ஆறிய பின் இதைத் தடவலாம்.
வெந்தயத்தை ஊறவைத்து அதைபேஸ்டாக்கி தடவிக் கழுவ முடி வளரும்.
பிருங்கராஜ் தைலம் முடி வளர்ச்சியைத் தூண்டும்.
க்ரீன் டீ டிகாக்க்ஷனால் வழுக்கையில் நன்கு தடவி அலச முடி வளரும்.
பூண்டு எண்ணையுடன் ரோஸ்மேரி எண்ணை கலந்து வழுக்கையில் தடவ முடி வளரும்
பெப்பர் மிண்ட் மற்றும் ஜோஜோபா ஆயிலை கலந்து முடிக்குத் தடவ முடி நன்கு வளரும்
முட்டையின் மஞ்சள் கருவுடன் ஆலிவ் எண்ணை கலந்து தடவ முடி வளர்ச்சியடையும்.
மேற்கூறிய இயற்கை முறைகளில் வழுக்கை பிரச்னையைக் தீர்க்கலாம்.
இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் ஏணாணையை சூடுபடுத்தி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெங்காய ஜுசை சேர்த்து தலையில் மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து ஷாம்பூ வாஷ் செய்ய முடி வளரும்.
ரோஸ்மேரி ஆயிலுக்கு முடியை ஊக்குவிக்கும் பண்பு உண்டு. ஆறு சொட்டு ரோஸ்மேரி ஆயிலுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஜோஜோபா ஆயில் சேர்த்து தலையில் மசாஜ் செய்து 40 நிமிடம் கழித்து வாஷ் செய்ய வழுக்கை நீங்கி முடி அபாரமாக வளரும். வாரத்தில் இருநாட்கள் இப்படிச் செய்யலாம்
செம்பருத்தி இலை மற்றும் பூக்களுடன் சேர்த்து அரைத்து அதில் சிறிது தேங்காய் எண்ணை சேர்த்து தலையில் மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து ஷாம்பூ வாஷ் செய்ய முடி அடர்த்தியாக வளரும்.