
1. கூந்தல் மிக அதிகமாக உதிரும் போது வெந்தயக் கீரையை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டு சிறிது நேரம் கழித்து கூந்தலை அலசலாம்.
2. வீக்கத்திற்கும், தீக்காயத் திற்கும் வெந்தயக் கீரையை அரைத்து பற்று போடலாம்.
3. நெயில் பாலீஷ் ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் காயாமல் இருக்கும்.
4. தலையணை உயரம் குறைந்து இருந்தால் முகத்திற்கு அழகூட்டும்.
5. குளியல் பவுடர் தயாரிக்கும்போது சிறிது குப்பை மேனி இலைகளையும் காயவைத்து இடித்து சேர்த்து கொண்டால் எந்தவித சரும வியாதிகளும் நெருங்காது.
6. தக்காளி பழத்தின் தோலை உரித்துவிட்டு அத்துடன் தேனைச் சேர்த்து பசையாய் குழப்பி முகத்தில் பூசிக் கொண்டு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
7. ஆரஞ்சு பழத்தோல் மற்றும் எலுமிச்சம் பழத்தோலையும் உலர்த்தி தூளாக்கி பற்களை துவங்கினால் பற்களில் உள்ள கறைகளை அகற்றி பற்களை பளிச்சிட வைக்கும்.
8. பாகற்காயில் குட்டை பாகல் வகையில் இரும்பு சத்தும், வைட்டமின் ஏ, சி யும் மற்ற வகைகளை காட்டிலும் அதிகமாக இருக்கும்.
9. எப்போதுமே நேராக நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள். ராஜ தோரணையில் அமர்வது எதிரே இருப்பவர்கள் புருவங்களை உயர்த்துவதுடன் உங்களின் ‘தனி அழகு’ அவர்களை வியப்படைய செய்யும்.
10. வெள்ளரிக்காய் துண்டுகளை எடுத்துக்கொண்டு அதன் சாற்றினை முகம் முழுவதும் மற்றும் கண்களின் அடிப்பகுதிகளில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு கொண்டு கழுவினால் கரும் புள்ளிகள், தேமல் மறையும்.
11. இளம் நரைக்கு பித்தம்தான் காரணம். கவலை, மனச்சோர்வும் தலையை பலவீனப்படுத்தி, நரையை ஏற்படுத்தும், அதிகம் காப்பி, தேநீர் பருகினால் பித்தம் ஏற்படும். இளம் நரையை தடுக்க பச்சை காய்கறிகள், பழவகைகள், நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.
12. நெல்லிக்காய் பொடி கலந்த பச்சைப்பயறு பொடியை தேய்த்து குளித்தால் தோல் பொலிவு பெற்று சுருக்கம் நீங்கி பளபளப்பு பெறும்.
13. குறித்த நேரத்தில் தூங்க போவதும், குறிப்பிட்ட அளவு தூக்கமும் நம் உடலில் நிகழும் பல ரசாயன மாற்றங்களைச் சீர்படுத்துகின்றன. ஆறு மணி நேரத்திற்கும் குறைவான இரவு தூக்கம் ஆயுளைக் குறைக்கிறது.
14. உடல் எடை குறைய நார்ச்சத்து நிறைந்த பொருட்களை உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் போது நம் இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிப்பதில்லை
15. உடல் எடை குறைய முக்கியமான மூன்று வித சாறுகள், கேரட், வெள்ளரிக்காய், மற்றும் பசலை கீரை இவற்றை சாறு எடுத்து அருந்தலாம்.
16. கடல் சங்கை எடுத்து கல்லில் சிறிது தண்ணீர்விட்டு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவ முகப்பரு இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
17. உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும்.
18. வாரம் இரண்டு முறை தேங்காயை அரைத்தெடுத்த பாலை தலையில் தேய்த்து குளித்தால் முடி கருகருவென இருக்கும். செம்பட்டை நிறம் மாறும்.
19. உணவில் அதிக அளவு கருவேப்பிலை சேர்த்து கொண்டால் வேகமாக நரைப்பது கட்டுப்படும்.
20. ஒரு கப் நல்லெண்ணெயில் வேப்பம் பூவை போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு வாரம் ஒருமுறை தேய்த்து குளித்து வந்தால் பொடுகு போய்விடும்.