தலை முடியை வலிமையாக்கும் Banana Hair Mask!

Banana Hair Mask.
Banana Hair Mask.

முடி பராமரிப்பு என்று வரும்போது சில சமயங்களில் அதற்கான சிறந்த தீர்வுகளை சமையலறையிலேயே காண முடியும். ஆம், நான் சொல்வது உண்மைதான். நம் சமய அறையில் இருக்கும் வாழைப்பழத்தை ஹேர் மாஸ்காகப் பயன்படுத்தி தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க் தலைமுடிக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இயற்கை எண்ணெகள் நிரம்பிய வாழைப்பழங்கள், தலைமுடி ஆரோக்கியத்தில் பெரிதும் பங்கு வைக்கின்றன. இந்தப் பதிவில் தலை முடியை மென்மையாக்கும் வாழைப்பழ ஹேர் மாஸ்க் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்: 

  • 1 வாழைப்பழம்

  • 1 ஸ்பூன் தேன்

  • 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

  • 1 ஸ்பூன் ஆலோவேரா ஜெல்

செய்முறை: 

முதலில் வாழைப்பழத்தை தோலுரித்து கட்டிகள் இல்லாமல் மென்மையாக பேஸ்ட் போல பிசைந்து கொள்ளுங்கள். 

பின்னர் அந்த வாழைப்பழ பேஸ்டில் தேங்காய் எண்ணெய், தேன் சேர்த்து கொஞ்ச நேரம் அனைத்தும் ஒன்றாக இணையும்படி கலக்கவும். இறுதியில் நீங்கள் விருப்பப்பட்டால் அதில் ஆலுவேரா ஜெல் சேர்த்து கலக்கினால், சூப்பரான வாழைப்பழ ஹேர் மாஸ்க் தயார். 

வாழைப்பழம் ஹேர் மாஸ்க் நன்மைகள்: 

  • வாழைப்பழத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் மற்றும் விட்டமின்கள் உலர்ந்த சேதமடைந்த முடியை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். 

  • வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சிக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது. 

  • வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மயிர்க் கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வு மற்றும் முடி உடைவதைக் குறைக்கிறது. 

  • இந்த ஹேர் மாஸ்க் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பை வழங்கி எப்போதும் மென்மையாக இருக்கச் செய்கிறது. 

  • வாழைப்பழத்தின் pH சமநிலைப்படுத்தும் பண்புகள், முடி மற்றும் உச்சந்தலையின் இயற்கையான pH அளவை மீட்டெடுக்க உதவுகிறது. இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
வெட்டிவேர் பற்றி நீங்கள் அறியாத ரகசியங்கள்.. தலை முதல், பாதம் வரை! 
Banana Hair Mask.

இந்த மாஸ்கை வாரம் ஒரு முறை தலையில் தடவி 30 நிமிடம் ஊற விட்டு, வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால், தலைமுடி ஆரோக்கியம் மேம்படும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com