வெட்டிவேர் பற்றி நீங்கள் அறியாத ரகசியங்கள்.. தலை முதல், பாதம் வரை! 

Vetiver Health benefits.
Vetiver Health benefits.

வெட்டிவேர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வற்றாத தாவரமாகும். குறிப்பாக இவை வெப்ப மண்டலங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதன் முதன்மை பயன்பாடுகளாக வாசனை திரவியம், அரிப்பைக் கட்டுப்படுத்துதல், தலைக்கு தேய்க்கும் எண்ணெய் போன்றவை இருந்தாலும், பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. சரி வாருங்கள் இந்த பதிவில் வெட்டிவேரின் மருத்துவ நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

1. வெட்டிவேருக்கு மகத்தான மருத்துவ குணம் உள்ளது. தலைமுடியில் தொடங்கி அடிப்பாதம் வரை பல பிரச்சனைகளைப் போக்கும் தன்மை கொண்ட வெட்டிவேரை, தண்ணீரில் ஊற வைத்து குடித்தால், செரிமான பிரச்சனை வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்ற அனைத்துமே குணமாகும். 

2. வெட்டிவேரின் வளமான மண்வாசனை நமது மனதை ரிலாக்ஸ் செய்யும் என சொல்லப்படுகிறது. வெட்டிப்வேரை நுகர்ந்து பார்ப்பதால், மன அழுத்தம் பதற்றம் மற்றும் பயத்தைப் போக்க உதவுகிறது. Aroma therapy மூலமாக மன அமைதியைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது. 

3. வெட்டிவேரின் மயக்கும் தன்மை, தூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது. அதன் நறுமணம் நரம்பு மண்டலத்தில் ஆழமான விளைவை ஏற்படுத்தி, அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்குமாம். வெட்டிவேரில் ஊறவைத்த எண்ணையை தலைக்குத் தடவுவது மூலமாக, தூக்கமின்மையை நீங்கி ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்த உதவும். 

4. வெட்டிவேரில் ஊறவைத்த எண்ணையை உடலில் தடவினால், அதன் ஆண்டிசெப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்புத் தன்மை, பல்வேறு விதமான தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுக்கும். குறிப்பாக முகத்தில் ஏற்படும் பருக்கள் அழற்சி, வெண் திட்டுக்கள் போன்றவற்றை குறைக்கவும் வெட்டிவேர் பயன்படும். 

5. நீங்கள் தலைக்கு குளிக்கும்போது சீயக்காய் பயன்படுத்தும் நபராக இருந்தால், இனி சீயக்காய்க்கு பதிலாக வெட்டிவேர் பொடியைப் பயன்படுத்தி குளியுங்கள். இதன் மூலமாக தலைக்கும் ஆரோக்கியம் கிடைக்கும் அத்துடன் முகம் சார்ந்த பிரச்சினைகள் நீங்கி அழகுடன் காணப்படுவீர்கள். 

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான சருமம், தலைமுடி, நகங்களைப்பெற ஆறு வகை உணவுகள்!
Vetiver Health benefits.

6. சுத்தமான தேங்காய் எண்ணெயில் வெட்டிவேரை ஊறவைத்து தலைமுடிக்குப் பயன்படுத்தினால், தலைமுடியின் வேர்க்கால்கள் பலம் பெற்று முடி உதிர்வு குறையும். மேலும் இதனால் கண்ணுக்கும் குளிர்ச்சி ஏற்படும். 

7. கோடைகாலத்தில் நீர்க்கடுப்பு, வயிற்றுக்கடுப்பு, உடல் எரிச்சல் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், சிறிதளவு வெட்டிவேர் பொடி மற்றும் பெருஞ்சீரகப் பொடியை சம அளவில் எடுத்து, 250 மில்லி வெந்நீரில் கலந்து பருகினால் அவற்றிற்குத் தீர்வு கிடைக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com