அழகு பராமரிப்பில் வாழைப்பழம்!

அழகு பராமரிப்பு
அழகு பராமரிப்பு

வாழைப்பழங்கள் உலகம் முழுவதும் எளிதில் கிடைக்கின்றன. இதை சாப்பிடுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியம், தோல், முடி மற்றும் பலவற்றிற்கு இது பல நன்மைகளை தருகிறது. வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

வாழைப் பழக்கூழ் மிகச் சிறந்த தோல் மாய்ச்சரேசர்(moisturizer) . இதனை தினமும் முகம், கை கால்களில் பயன்படுத்தி வந்தால் மென்மையான, மிருதுவான சருமத்தை பெறலாம். இது சருமத்தில் வயதான தோற்றத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வாழைப் பழக்கூழ்
வாழைப் பழக்கூழ்

வாழைபழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்த வாழைப்பழங்கள் சரும அழகை மேம்படுத்த ஒரு சிறந்த அழகுப் பொருள்.

வாழைப்பழத்தில் உள்ள ஈரப்பதம் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் ஓர் சிறந்த அழகு ரகசியம். வாழைப்பழம் வறண்ட சருமத்தை கூட ஈரப்பதமாகவும், மிருதுவாகவும் செய்கிறது. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தில் மொத்த ஈரப்பதத்தை மீட்டெடுக்கிறது.

வாழைப்பழம் ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது மற்றும் சருமத்தின் மேற்பரப்பில் அதிகப்படியான எண்ணெய்யை குறைக்க உதவுகிறது

வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன மற்றும் இயற்கையான போடோக்ஸாக செயல்படுகிறது, சருமத்தில் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகாமல் தடுக்கிறது.

வாழைப்பழம் அழகு குறிப்பு
வாழைப்பழம் அழகு குறிப்பு

உங்கள் முகத்தில் ஒரு வாழைப்பழத் தோலைத் தேய்ப்பது அழுக்குகளை அகற்றவும், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும்.

முடி பராமரிப்பிலும் வாழைப்பழம் பெரும் பயன்களை தருகிறது. உச்சந்தலையில் எரிச்சல், வறட்சி மற்றும் பொடுகு ஆகியவை பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்க்கிருமிகளால் ஏற்படலாம்.

உச்சந்தலையில் வாழைப்பழ பேக்கை பயன்படுத்தினால் அது வறட்சியைக் குறைக்கவும், உங்கள் உச்சந்தலையை ஈரப்பதமாக்கவும் உதவும். மேலும் தலையில் உள்ள பொடுகை உண்டாக்கும் நுண்ணுயிரிகளையும் நீக்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com