

பனாரஸ் புடவை தயாரிக்க வாரங்கள், சில நேரங்களில் மாதங்கள் கூட ஆகும்; இதன் விலை சில்க்கிற்கு அல்ல, நெய்தல் நுட்பம் மற்றும் உழைப்பிற்கு நிர்ணயிக்கப் படுகிறது. கோரா, கதான், ஜார்ஜெட், தன்சாய், டிஷ்யூ போன்ற வகைகள் எடை, ஜரிகை அளவு, டிசைன் அடர்த்தி ஆகியவற்றில் வேறுபடுகின்றன. காஞ்சீபுரம் புடவையிலிருந்து ப்ரோகேட் நெய்தல் மற்றும் அலங்கார ஜரிகை டிசைன்களால் பனாரஸ் புடவை வேறுபடுகிறது.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் பனாரஸ் பட்டு நெய்யப்படுகிறது. சில்க் மற்றும் மெடாலிக் ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருக்கும். இதன் ஜரிகை, நெய்யப்படும் விதம் டிசைன்கள் பொறுத்து இதன் விலை வேறுபடும்.
ஒரு சாதாரண பனாரசி புடவை செய்ய சில வாரங்களை ஆகும். ஆனால் டிசைன்கள் நிறைந்த பனாரஸ் புடவைகளை தயாரிக்கப் பல மாதங்கள் ஆகும். இதன் சில்க்கிற்காக மட்டும் விலை நிர்ணயிக்கப்படுவதில்லை. இதற்கான டெக்ஸ்டைல் மற்றும் உழைப்பிற்காகவே அதன் மதிப்பு கூடுகிறது. வாரணாசி பனாரசின் இருப்பிடமாகும்.
இந்த பனாரஸ் புடவையில் பெர்லின், மொகலாய மற்றும் இந்திய டெக்ஸ்டைல் பாதிப்புகள் இருக்கும். இதில் ஃப்ளோரல், புடின், கல்கா, மற்றும் அல்லர் என்ற நெய்தல் முறைகள் உள்ளன.
பனாரஸ் புடவை எப்படி உருவாகிறது?
கைகளால் பல டிசைன்கள் உருவாக்கப்பட்டு பிறகு நெய்யப்படுகின்றன. இந்த பனாரஸ் புடவையை உருவாக்குவதில் பலவித தொழில் நுட்பங்கள் உள்ளன. அவைகள் குறித்துக் காண்போம்.
கத்வா
இந்த முறையில் பல டிசைன்கள் கைகளால் உருவாக்கப்படுகின்றன.
ஜரிகை வேலைப்பாடு
புடவை செய்யப்படும்போது மெட்டாலிக் நூல் தரியில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் புடவைக்கு ஒரு தனி பளபளப்பு ஏற்படுகிறது.
புடி நெய்தல்
சிறிய டிசைன்கள் புடவை எங்கும் காணப்படும்.
ஜங்லா
நல்ல அழுத்தமான பூ டிசைன்கள் புடவையை ஆக்ரமிக்கும். பாரம்பரிய டிசைன்களை கைகளால் டிசைன்களை உருவாக்குகிறார்கள்.
பனாரஸ் புடவையின் தன்மை
மற்ற புடவைகளிலிலிருந்து இது வித்தியாசமானது. கனமான மற்றும் மெட்டாலிக் நூல்கள் இதற்காக பயன்படுத்தப்படுகிறது. கெட்டியாக நெய்யப்படுவதால் இது தனித்துக் காணப்படுகிறது. இதன் ஜரிகை மற்றும் டிசைன் தனித்துவமானது. இதில் உள்ள அடர்த்தியான சில்க் மற்றும் ஜரிகை உடலுக்கு வெப்பமாக இருக்கும்.
பனாரஸ் புடவையில் குறைந்த எடையுள்ளது கோரா பனாரஸ் என்றும், நல்ல அடர்த்தியான டிசைன் உள்ளவைகள் கதான் என்றும் அழைக்கப்படுகிறது. திருமணங்கள் மற்றும் முக்கியமான விசேஷங்களுக்கு கதான் மற்றும் ப்ரோகேட் வேலைப்பாடுகள் நிறைந்தது சரியான தேர்வாகும்.
பண்டிகை நாட்களில் அதிக எடையில்லாத கோரா மற்றும் ஜார்ஜெட் பனாரஸ் வகைகள் ஏற்றதாகும். ஜரிகை அதிகம் இருந்தால் புடவை எடை அதிகமாக இருக்கும். பனாரஸ் புடவைகளின் ரகங்கள்.
கதான்
மென்மையாக செய்யப்பட்டது
கோரா அல்லது ஆர்கன்சா
எடை குறைவாகவும் சில்க் மற்றும் ஜரிகையுடன் இருக்கும்.
ஜார்ஜெட் பனாரஸ்
இதன் தன்மை க்ரேப் கலந்ததாக இருக்கும்.
தன்சாய்
பலவித வண்ண டிசைன்கள் அதிகமாகவும் ஜரிகை குறைவாகவும் இருக்கும்.
ஜங்லா
பூக்கள் டிசைன்கள் அதிகமாக இருக்கும்.
டிஷ்யூ
அதிக அளவு மெடாலிக் ஜரிகை வேலைப்பாடுடன் இருக்கும்.
கட் ஒர்க்
குறிப்பிட சில நூல்களால் தயாரிக்கப்பட்டு டிசைன்கள் தனித்தன்மையோடு இருக்கும்.
ஷட்டிர்
மிகவும் லேசானதாக இருக்கும் ரகம்.
பனாரஸ் காஞ்சீபுரம்
இரண்டும் பட்டு ரகம் என்றாலும் வாரணாசியில் பனாரஸ் பட்டு ப்ரோகேட் டெக்னிக் மற்றும் ஜரிகை டிசைன்கள் கொண்டவையாகும். தமிழகத்தின் காஞ்சீபுரம் பட்டு மல்பெரி சில்க் மறறும் வித்தியாசமான கான்ட்ராஸ்ட் பார்டர்கள் கொண்டதாகும். காஞ்சிபுரம் சேலையில் இன்டர் லாக்டு பார்டர் தயாரிப்பு உடையது. பனாரஸ் புடவையில் அலங்கார டிசைனுடன் ப்ரோகேட் நெய்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.
பனாரஸ் புடவை பாதுகாப்பு
ட்ரை க்ளீனுக்குக் கொடுக்கலாம். இதை காட்டன் துணி அல்லது மஸ்லின் தணியைச் சுற்றி வைக்கலாம். பிளாஸ்டிக் பை தவிர்க்கவும். கோடுகள் வராமலிருக்க அடிக்கடி புடவைகளை மாற்றி மடித்து வைக்கவும்.
சூரிய வெளிச்சத்தில் காயவைக்கக் கூடாது.
நன்றாக தயாரிக்கப்பட்ட பனாரஸ் புடவைகள் பல வருடங்கள் உழைக்கும் தன்மை உடையது. இது பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வைக்கக் கூடியது. இதை உருவாக்கத் தேவையான சில்க், பயன்படுத்தப்படும் ஜரிகையின் தன்மை இவைகள்தான் இதன் தரத்தை நிர்ணயிக்கின்றன. இந்தப் புடவைகளை மில் ஆர்டலிருந்து பெறும்போது இது அதிக காலம் உழைக்கும் என நம்பலாம். பட்டும் நல்ல தரமாக இருக்கும்
காசிக்குச் சென்றால் மேற்கூறிய விஷயங்களை கவனத்தில் வைத்து தரமான பனாரஸ் பட்டை வாங்கி மகிழுங்கள்.
எந்தெந்த விசேஷங்களுக்கு எந்த வகை பனாரஸ் சேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் தெளிவு கிடைக்கும். பணத்திற்கு ஏற்ற சரியான தரமான பட்டுச் சேலையை வாங்குவதற்கான நுட்பங்களை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.