

பனாரஸ் மற்றும் காஞ்சீவரம் கைத்தறி சேலைகளைப் போன்று பெங்கால் சேலைகளிலும் பல ரகங்கள் உள்ளன. அவை என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.
1. காய் ஜாம்தானி புடவைகள்_Dhakai jamdhani sarees
கைத்தறி புடவைகளாக இவை இருந்தாலும் சிறிது சில்க் காட்டன் கலந்து இருக்கும். கைத்தறியிலேயே இதில் எம்பிராய்டரி வேலைப்படுகளுடன் செய்யப்படுகிறது. பூஜைகளில் அணிந்து கொள்ள ஏற்றது. இது மிகவும் லேசாக இருக்கும். பார்க்க பளபளவென்று இருக்கும்.
2. ஜாம்தானி பேஸ்டல்
இதை கல்லுரி நிகழ்ச்சிகளுக்கும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற வண்ணம் செய்யப்படும். சேவை மிக மென்மையாக இருக்கும். இதில் பூதி என்று சொல்லப்படும் டிசைன் புடவையை கனமாக்காமல் இருக்கும். பிங்க் மற்றும் நல்ல மஞ்சள் நிறத்தில் இந்த சேலை அணிந்து அணிகலன்கள் அணியும்போது அழகைக்கூட்டும். வேலை பார்க்கும் இடம், கல்லூரிகள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் அணிவதற்கு ஏற்றது.
3. காதி லினன் ஜாம்தானி
நவீன காலத்திற்கு ஏற்றார் போல் நெய்யப்பட்டது. லினன் மற்றும் ஜாம்தானி தலைப்பு உள்ள இது கைத்தறி மில் தனி சிறப்பைப் பெற்றது. மஞ்சள், வெள்ளை மற்றும் லாவெண்டர் நிறத்தில் காதிலினன் சேவைகள் ஜாம்தானி முகப்புடன் மிக அருமையாக இருக்கும். பெங்கால் கைத்தறி மில் சிறந்த முத்திரை பதிந்துள்ளது. இந்த காதிலினன் ஜாம்தானி ரக சேவைகள்.
4. பாலுசரி சில்க் சாரி
இந்த வகைப் புடவைக் தலைப்பில் புராணக் கதைகளின் காட்சிகளைக் காணலாம். சிக்கித் செய்யப்பட்டு எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு புடவை முந்தானையில் சிறப்பு மிக்க டிசைன்களைக் காணலாம். பண்டிகைக் காலங்களில் அணிவதற்கு ஏற்றது. மேலும் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இதை அணிவது முக்கியமாகிறது. நடனம் பெண்கள் அணிந்து நடனமாடுவதற்கு மிகச் சிறந்தது இந்த ரகம் புடவைகள்.
5. துஷார் சில்க் புடவைகள்
இது மிகவும் மென்மையாக இருப்பதுடன் பளிச்சென்று காணப்படும். கைகளால் இடப்பட்ட ப்ளாக் ப்ரிண்டுகள், கலம்காரி வடிவமைப்புகள் மற்றும் சரிகை வேலைப்பாடுகள் நிறைந்த சேவையாகும். இது கனமாக இல்லாமல் இருப்பது தனிச்சிறப்பு. கோல்டு துபாய் சிக்கித் கலம்காரி டிசைன்கள் சிறப்பாக இருக்கும். கருப்பு, கோல்டன் நிறம் மற்றும் பிங்க் தருவார் சேவைகள் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.
6. பகல் பூரி லினன் புடவைகள்
இவை லினன் மற்றும் பட்டி தலைப்பு கொண்டிருக்கும் சேவைகள் ஆகும். இதை கட்டினால் கலையவே கலையாது. மிகச் சுலபமாகத் கட்ட முடியும். பார்ட்டிகளுக்கு இதை கட்டுவது சிறப்பு. புடவை மிக லேசாக இருக்கும். பகல் பூரி லினனுடன் நீலநிற முந்தானை, ஆரஞ்சு மற்றும் பிங்க் முந்தானைகள் காணச் சிறப்பாக இருக்கும்.
ஜாம்தானி, காதிலினன் மற்றும் பகல்பூரி சேவைகளுக்கு எம்பிராய்டரி ப்ளௌஸ்கள் அணிய சிறப்பாக இருக்கும். பாலுசரி மற்றும் துபாய் சில்க் சேவை அணிந்து தங்க நகைகளை அணியும்போது அது உங்கள் அழகை மெருகூட்டும். சரஸ்வதி பூஜை மற்றும் துர்கா பூஜை மற்றும் பல பூஜைகளில்போது ஜாம்தானி சேவைகளில் சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த சேவைகள் அணிவது சிறப்பு. பெங்கால் ஜாம்தானி புடவைகள் தனிச் சிறப்புக்குக் காரணம் நெய்யும்போதே அவைகளில் வடிவமைப்புகள் மற்றும் எம்பிராய்டரிகளோடு நெய்யப்படுவதுதான்.
இந்தப் புடவைகளை நன்கு பாதுகாக்க அவற்றை காட்டன் துணிக்குள் வையுங்கள். இனி வரிசையாக பண்டிகைகள் வரப்போகின்றன. எப்போதும் ஒரே மாதிரியான புடவைகளை தவிர்த்து வித்தியாசமான சிறப்புக்கள் நிறைந்த பெங்கால் ரகம் புடவைகளை வாங்கி அணிந்து மகிழ்வோம்.
இந்தப் பதிவைப் படிப்பதன் மூலம் பண்டிகைகள் மற்றும் குடும்ப விசேஷங்களுக்கு உங்களது தோற்றத்திற்கு ஏற்ப எந்த பெங்கால் சேலைகள் ரகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தெளிவும், அவற்றை நீண்ட நாட்கள் புதியது போல் பராமரிக்கும் திறனும் உங்களுக்குக் கிடைக்கும்.