முகம் பளபளக்க, சுருக்கங்களை குறைத்து இளமையாக்க அரிசி மாவு இருந்தால் போதும். அரிசி மாவை வைத்து ஸ்கிரப்பராக செயல்படும் அழகியல் பொருளாக மாற்றலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
உடனே அரிசி மாவு வாங்க...
ஸ்கிரப்பர்
ஒரு ஸ்பூன் அரிசிமாவு எடுத்து சிறிது நீர் சேர்த்து முகத்தில் வட்ட வடிவில் தேய்த்து ஸ்க்ரப் செய்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள், எண்ணெய் பிசுக்குகள் போய்விடும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். முகத்தில் அழுத்தம் கொடுக்காமல் லேசாக 2 அல்லது மூன்று நிமிடங்கள் அப்படியே சப்ஸ்கிரைப் செய்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட்டால் முகம் பளிச்சென்று இருக்கும்.
தயிர் பேக்
அரிசி மாவை ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தயிர் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கரைத்து லேயர்போல முகம் முழுவதும் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் இறுகி சருமம் இளமையான பொலிவு பெறும் . முகம்புத்துணர்ச்சி கிடைக்கும். தயிரால் முகம் சருமம் மிருதுவாகும்.
ஸ்ட்ரெச் மார்க்
பெண்கள் குழந்தை பெற்ற பின் வயிற்றில் ஸ்ட்ரெச் மார்க் அதிகம்காணப்படும். இதனைபோக்க முதலில் அரிசிமாவுடன் மஞ்சள் தூள் பால் சேர்த்து பேஸ்ட்டாக்கி குழைத்து இந்த பேஸ்ட்டை ஸ்ட்ரெச் இருக்கும் இடத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் குளிக்கும் முன் குப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வாரம் 2 முறை இதை செய்யலாம்.
முக பேசியல்
திருமணவிழா விசேஷங்களுக்கு செல்லும் முன்பாக இன்ஸ்டன்டாக அரிசி மாவு பேஷியல் செய்யலாம். இதற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, சிறிது தேன், பால் எடுத்து நன்கு கலக்கி முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து சிறிது நீர் சேர்த்து மிகவும் மிருதுவாக ஸ்கிரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவவும். பின்பு ஐஸ் க்யூப் கொண்டு முகத்தில் தடவவும். தேன் மற்றும் பால் இந்த கலவையில் சேர்க்கப்படுவதால் முகம் பளபளப்பாகும்.
சர்க்கரை பேக்
அது ஒரு ஸ்பூன் அரிசி மாவு சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் லேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், மூக்கு நுனிகள், கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக ஸ்கிரப் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ் கட்டிகள் எடுத்து முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் முகம் பளிச்சென ஜொலிக்கும்.
வெள்ளரி சாறு பேக்
ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு சிறு துளிகள் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் 15 நிமிடங்கள் காயவிட்டு நன்றாக காய்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவும். இதனால் சருமம் சுத்தமாகவும், முகப்பருக்கள் இல்லாமல் இது உதவும்.
தேன் ஸ்க்ரப்
அரிசி மாவு ஒரு டீஸ்பூன் தேன் இரண்டு டீஸ்பூன் சேர்த்து கலந்து மூக்கு மற்றும் கழுத்து பகுதியில் ஸ்கிரப் செய்து வந்தால் அழுக்குகள் நீங்கி சருமம் பொலிவுடன் பளபளப்புடன் பிரகாசமாக இருக்கும்.
மேக்கப்பை கலைக்க
விழாக்களுக்கு சென்று விட்டு வந்து அதிக மேக்கப் இருந்தால் இரவு தூங்கும்போது ரசாயனம் பாதிப்பை உண்டாக்கும். அதற்கு அரிசி மாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி லேசாக ஐந்து நிமிடங்கள் கழிந்த பின் தேய்த்து கழுவினால் மேக்கப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.
உடனே அரிசி மாவு வாங்க...