
நம் முடி மற்றும் சரும ஆரோக்கியம் காக்கவும், மன நிலையில் அமைதி பெறவும் பல வகையான அழகு சாதனப் பொருட்கள் மற்றும் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் 5 வகையான முக்கிய ஆயில் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1.பெர்காமட் ஆயில் (Bergamot oil): பெர்காமட் ஆயில்
ஒரு புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய சிட்ரஸ் சென்ட். இது நாம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், மன அமைதி குன்றி, குழப்பத்திலும் வருத்தத்திலும் இருக்கும்போது நம் மனதை அமைதியுறச் செய்யும். மேலும், மூடை மாற்றியமைக்க உதவும் செரோட்டோனின் மற்றும் டோப்பமைன் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் நம் சோகமான மனநிலையும், மந்தமான உடல் நிலையும் படிப்படியாக மாறி இயற்கை முறையில் சுறுசுறுப்புப் பெற்று அமைதியாக செயலாற்ற முடியும்.
2.கெமோமைல் ஆயில்: இது ஒரு மென்மையான பூவிலிருந்து தயாரிக்கப்படும் சென்ட். இது உடலை ரிலாக்ஸ் செய்ய வைத்து, மனதில் ஓடும் பல வகையான எண்ண ஓட்டங்களிலிருந்து விடுபட உதவும். இதனால் அமைதியற்ற மனநிலையை விரட்டி விட்டு படுக்கைக்குச் செல்லும்போது சுகமான தூக்கம் கண்களைத் தழுவும்.
இந்த சென்ட் ஆன்டி இன்ஃபிள மேட்டரி குணமுடையது. ஆகவே இது சென்சிடிவ் மற்றும் எரிச்சலுற்ற தன்மை கொண்ட சருமம் உள்ளவர்களும் உபயோகிக்க ஏற்றது. ஸ்ட்ரெஸ் மற்றும் ஒவ்வாமை காரணமாக சருமத்தில் உண்டாகும் திடீர் வெடிப்பு மற்றும் சிவந்த திட்டுக்களையும் இது குணமாக்க உதவும்.
3.லாவெண்டர் ஆயில்: இது உடலின் நரம்பு மண்டல டென்ஷனை அமைதிப்படுத்தி, ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவும் ஒரு பிரசித்தி பெற்ற சென்ட். இதை பாட்டிலிலிருந்து உடல் மீது ஸ்பிரே பண்ணவும் செய்யலாம் அல்லது சருமத்தில் நேரடியாக தடவிக் கொள்ளவும் செய்யலாம். இது உங்கள் ஆழ்மனதில் ஓடிக் கொண்டிக்கும் அனாவசிய சிந்தனைகளை துரத்தி அடிக்கும். நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் இருக்கும் உங்கள் உடலை ஆசுவாசப்படுத்தி ஆழ்ந்த அமைதியான உறக்கம் பெற உதவும்.
4.டீ ட்ரீ ஆயில்: டீ ட்ரீ ஆயில் இயற்கையாகவே ஆன்டி பாக்ட்டீரியல் குணம் கொண்ட ஒரு ஸ்ட்ராங் ஆயில். இது சென்சிடிவ் சருமம் உடையவர்களுக்கும் எந்த பாதிப்பும் உண்டாகாத வகையில் பருக்களை உருவாக்கும் பாக்ட்டீரியாக்களை அழிக்கும் தன்மையுடையது. இதன் சுத்தப்படுத்தும் குணம் மற்றும் ஆன்டி ஃபங்கல் குணம் இரண்டும் இணைந்து தலையின் ஸ்கேல்ப் (Scalp) பகுதியில் உண்டாகும் அரிப்பு, பொடுகு போன்ற அசௌகரியங்களை நீக்கவும் முடியின் வேர்க்கால்களைச் சுற்றியுள்ள நுண்ணறைகளில் தேங்கியிருக்கும் எண்ணெய்ப் பிசுக்கு மற்றும் ஷாம்பு நுரை போன்ற அசுத்தங்களை அகற்றவும் உதவிபுரிகின்றன.
5. ஜெரானியம் (Geranium) ஆயில்: இது ஹார்மோன் உற்பத்தி அளவை சமநிலைப்படுத்தி வைக்க உதவி புரியும். குறிப்பாக பெண்களுக்கு மாதாந்திர மாதவிடாய் சுழற்சி வருவதற்கு முன்பாக மனநிலையில் உண்டாகும் ஏற்றத் தாழ்வு மற்றும் உடல் வலி போன்றவற்றிற்கு நிவாரணம் தரும்.
மேலும், இந்த ஆயில் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதன் மூலம், உப்பலாகவும் மந்தமாகவும் தோற்றமளித்த சருமத்தை சமநிலைப் படுத்தி, உங்கள் முகம் சுத்தமாகவும் புத்துணர்ச்சி பெற்றும் பள பளப்புடன் மின்னச் செய்யும்.