
பேக்கி ஜீன்ஸ் என்பது ஒருபொழுதும் ஃபேஷனிலிருந்து வெளியேறியதில்லை. 1980களின் பிற்பகுதியல் பேக்கி பேண்டுகள் பிரதான ஃபேஷனில் நுழைந்தன. இது ஹிப்-ஹாப் கலைஞர்கள், ஸ்கேட்டர்கள் மற்றும் ராப்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. இருந்தாலும் இந்த போக்கு மறைந்து பூட்-கட் ஜீன்ஸால் மாற்றப்பட்டது. சமீபத்தில் மீண்டும் கான்யே வெஸ்ட் மற்றும் ஜஸ்டின் பீபர் ஆகியோரால் மீண்டும் பிரபலப்படுத்தப்பட்டது.
பேக்கி ஜீன்ஸ் இடுப்பில் லேசாகவும், காலில் தளர்வாகவும் இருக்கும். இருப்பினும் அழகாக ஃபிட்டாக தோன்றுவதற்கு பேக்கி ஜீன்ஸை சரியான மேல் உடையுடன் இணைக்க நல்ல தோற்றம் தரும். பேக்கி ஜீன்ஸுடன் தளர்வான ஃபிட்டிங் கொண்ட ஸ்வெட்ஷர்ட் அல்லது டி ஷர்ட்டுடன் அணியலாம். பாம்பர் ஜாக்கெட்டும் பேக்கி ஜீன்ஸுடன் நன்றாகப் பொருந்திப் போகும். இந்தப் பெரிய ஜாக்கெட்டுகள் இரவு விருந்து உணவு போன்ற நிகழ்வுகளுக்கு சிறந்த தேர்வாக அமையும்.
பேக்கி ஜீன்ஸ் அணியும்போது சரியான பொருத்தத்தை தேர்ந்தெடுத்து அணிவது அவசியம். நம் உடல் அமைப்புக்கு ஏற்ப ரொம்பவும் இறுக்கமாக இல்லாமல், இடுப்பில் நன்கு பொருந்தக்கூடிய ஜீன்ஸை தேர்ந்தெடுக்கவும். பேக்கி ஜீன்ஸுடன் டி ஷர்ட் அல்லது இறுக்கமான மேல்புற சட்டை அணிவதும் அதனை ஜீன்ஸ்க்குள் டக் செய்வதும் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்தி அழகாக காட்டும். பெரிய அளவிலான ஹூடியைக் கூட பேக்கி ஜீன்ஸுடன் அணிய தேர்வு செய்யலாம்.
இவை வசதியாகவும், நன்றாக பொருந்தவும் செய்யும். பேக்கி ஜீன்ஸை ஒரு பெரிய டெனிம் ஜாக்கெட்டுடன் அணிய கிளாசிக் தோற்றத்தை அளிக்கும். கரடு முரடான தோற்றம் வேண்டுபவர்கள் நீலம், கருப்பு டிரக்கர் டெனிம் ஜாக்கெட்களை அணியலாம்.
பேக்கி ஜீன்ஸின் நிறத்திற்கு ஏற்ப மேல்புறத்தில் அணியும் சட்டை அல்லது டி ஷர்டின் நிறத்தை தேர்ந்தெடுப்பது ரிச் லுக்கை கொடுக்கும். அடர்ந்த மேல்புற சட்டை வெளிர் நிற ஜீன்ஸுக்கு பொருத்தமாக இருக்கும். பேக்கி ஜீன்ஸில் பல ஷேடுகள் கிடைக்கின்றன. பேக்கி ஜீன்ஸில் நம் தோற்றத்தை மேம்படுத்துவதற்கு கான்ட்ராஸ்ட் கலரில் மேல் சட்டையை பெறுவது நல்ல தோற்றத்தை தரும்.
பேக்கி ஜீன்ஸுக்கு ஏற்ற காலணிகளை தேர்ந்தெடுப்பதும் அவசியம். சரியான காலணிகள் இல்லாமல் எந்த பேக்கி ஜீன்ஸ் தோற்றமும் முழுமை அடையாது. ஸ்னீக்கர்கள், ஸ்கேட் ஷூக்கள் அல்லது லோஃபர்ஸ் போன்ற ஸ்மார்ட் காலணிகள் பேக்கி ஜீன்ஸுடன் அழகாக பொருந்தும். கிளாசிக் லுக் கிடைக்க பேக்கி ஜீன்ஸுடன் பருமனான வெள்ளை ஸ்னீக்கர்களை அணியலாம். இது எளிமையானது அதே சமயம் வசதியானதும் கூட.
பேக்கி ஜீன்ஸுடன் நன்கு பொருந்தக்கூடிய ஏராளமான அணிகலன்கள் உள்ளன. பெல்ட், பேஸ்பால் தொப்பி போன்ற அணிகலன்கள் பேக்கி ஜீன்ஸின் தோற்றத்தை மேம்படுத்த உதவும்.