
முடி உதிர்தல் பொடுகு தொல்லை போன்ற முடி தொடர்பான அனைத்து பிரச்னைகளும் ஆண் பெண் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இன்றைய சூழ்நிலையில் இருக்கிறது. ஊட்டச்சத்து நிறைந்த பானமான இளநீரை தலைமுடிக்கு பயன்படுத்தும்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ஹைட்ரேட்டிங்காக வைத்திருக்கும்
இளநீரில் வைட்டமின்கள், பொட்டாசியம், மினரல்கள் எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால் குடித்தவுடன் புத்துணர்ச்சி அடைவது போல தலைமுடிக்கு பயன்படுத்தும்போது இது முடிக்கு உள்ளிருந்து ஊட்டமளித்து முடி வறட்சி அடைவதை தடுத்து நன்கு ஹைட்ரேடிங்காக வைக்க உதவுகிறது .
முடி உடைதலை தடுக்கும்
இளநீரில் இருக்கும் மாய்ஸ்ச்சரைஸிங் பண்புகள் தலைமுடியின் எலாஸ்டிசிட்டியை அதிகரிக்கச்செய்து முடி உடைதல், முடியின் நுனியில் ஏற்படும் பிளவுகள் ஆகியவற்றைத்தடுப்பதோடு,சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் சேதங்கள், தலை சீவும்போது முடி உடைவது, மற்றும் பிற சேதங்களைத் தடுக்க இந்த இளநீர் ஹேர்வாஷ் முறை உதவி செய்கிறது.
முடி வளர்ச்சியை தூண்டும்
இளநீரில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் முடி உதிர்வைத் தடுத்து நிறுத்தி முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வதோடு, மெலிந்திருக்கும் முடிக்கு தொடர்ந்து இளநீரில தலையை அலசி வரும்போது வேர்க்கால்களில் இருந்து உறுதியாகி நீளமாகவும் திக்காகவும் முடி வளர்ச்சி இருக்கும்.
முடி உதிர்வை தடுக்கலாம்
மன அழுத்தம், ஊட்டச்சத்து பற்றாக்குறை, மோசமான ஸ்கால்ப் பராமரிப்பு, ஹீட்டிங் பொருள்கள் அதிகம் பயன்படுத்துதல், கடும் ரசாயனங்கள் கொண்ட பொருள்களால் முடி உதிர்ந்தாலும் இளநீர் பயன்படுத்துவதால் வேர்க்கால்களை பலப்படுத்தி உச்சந்தலை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதால் முடி உதிர்தலை பெரிய அளவில் தடுக்க முடியும்.
உச்சந்தலை pH அளவு சமநிலைக்கு வரும்
இளநீரின் pH அளவும் நம்முடைய தலைமுடியின் pH அளவும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதால் இளநீரைப் பயன்படுத்தி தலைமுடியை அலசும்போது தலைமுடி ஸ்மூத்தாகவும் பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் மாறும்.
முடி பளபளக்கும்
முடி வறட்சி அதிகம் உள்ளவர்கள் சுருட்டை முடி உள்ளவர்கள் இளநீரைக் கொண்டு தலைமுடியை அலசும்போது உச்சந்தலை ஹைட்ரேட்ங்காகவும் கன்டிஷ்னிங்காகவும் மாறுவதோடு முடியை சிக்கு இல்லாமல் கண்ணாடிபோல பளபளப்பாக மாற்றுகிறது. இதனால் முடிக்கு சீரம் கூட பயன்படுத்த தேவை இருக்காது.
ஸ்கால்ப் எக்ஸ்ஃபோலியேட்
ஸ்கால்ப்பை எக்ஸ்ஃபோலியேட் செய்வதற்கும் ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்களை நீக்கி சுத்தம் செய்வதோடு தலையில் பயன்படுத்தி இருக்கும் ரசாயனங்கள் தேங்கி இருந்தாலும் அதை சுத்தம் செய்யவும் இளநீர் பயன்படுகிறது.
இளநீரை முடிக்கு பயன்படுத்தும் முறை
தலைமுடியின் நீளத்தைப் பொருத்து நீளமான தலைமுடியாக இருந்தால் 2 இளநீர் வரை எடுத்துக் கொள்ளலாம். தலைக்கு வழக்கம்போல ஷாம்பு தேய்த்து தலையை சுத்தம் செய்யுங்கள். அதன்பின்பு வழக்கம்போல கன்டிஷ்னரும் அப்ளை செய்யுங்கள்.
அதன்பிறகு இளநீரை எடுத்து மெதுவாக தலைமுடியை உச்சந்தலையில் இருந்து நுனி வரைக்கும் அலசி விடுங்கள். அதன்பின் 10 நிமிடங்கள் அப்படியேவிட்டு அதன்பிறகு பிளெயின் வாட்டர் கொண்டு முடியை நன்கு அலசினால் போதும்.
ஆரோக்கியமான புத்துணர்ச்சி அளிக்கும் இளநீர் முடிக்கு ஊட்டம் கொடுப்பதோடு நல்ல அரோமா தெரப்பி செய்தது போலவும் இருக்கும். வாரத்திற்கு ஒன்றிரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.