
கோடையில் வியர்வை வாடை தாங்க முடியாத அளவுக்கு ஏற்படுவது இயற்கையே. அதற்கு சில எளிய முறைகளை கையாண்டால் போக்கிவிடலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:
குளித்து முடித்ததும் இரண்டு துளி ரோஸ் ஆயில், இருதுளி லாவண்டர் ஆயில், இரு துளி யுடி கோலன் சேர்த்து உடல் முழுவதும் தடவவேண்டும். இதனால் அந்தநாள் முழுவதுமே இனிய நாளாய் இருக்கும். வியர்வை போய்விடும். வாடைக்கு சான்சே இல்லை.
சிலருக்கு கோடை வந்துவிட்டால் உடலில் அரிப்பு ஏற்படும். அதற்கு தினமும் குளிப்பதற்கு முன் மல்லிகை பூவை அரைத்து உடம்பில் பூசி ஒருமணி நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் அரிப்பு நீங்கும். உடலும் வாசம் பெறும்.
தாம்பூலம் போடும்போது ரோஜா இதழ்களையும் சேர்த்துக் கொண்டால் வாய் நாற்றம் நீங்கும். ரோஜா இதழ்களை எடுத்து கஷாயம் செய்து குடித்தால் வாய்ப்புண் ஆறும். ரோஜா பூ சர்ப்பத்தை தினமும் சாப்பிட உடலில் குளிர்ச்சி வரும் . உடல் குளிர்ச்சி அடைந்தால் வியர்வை குறையும். இதனால் வியர்வை வாடையும் குறையும்.
முல்தானி மட்டியுடன் பன்னீர் கலந்து வியர்க்குருவின் மேல் பூசி இரவு முழுவதும் விட்டு காலையில் குளித்தால் வியர்க்குரு ஓடிவிடும். தோலும் பளபளப்பாகும். வியர்வை நாற்றம் குறையும்.
முக அழகு கிரீம்களை ஃப்ரிட்ஜிலேயே போட்டு வைத்து முகத்தில் தடவும் பொழுது ஜில்லென்று இருக்கும். இதனால் வியர்வை குறையும்.
உடம்பில் அதிகமான முடி இருந்தாலும் வியர்வை அதிகமாகும். அதற்கு கோரைக்கிழங்கை அம்மியில் அரைத்து குளிக்கும்போது உடலில் பூசி குளித்தால் தேவையில்லாத பகுதியில் வளரும் உரோமம் உதிர்ந்து கை கால்கள் மழ மழவென பளபளப்பாக இருப்பதுடன் வியர்ப்பது குறையும். வாடை வராது.
இரவு நேரங்களில் தினமும் படுக்கப்போவதற்கு முன் குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை மாற்றிக்கொண்டு மனதையும் தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி இருக்கும்பொழுது உடம்பே ஏ.சி செய்தார் போல் ஆகிவிடும். சிறிது நேரம் முடிந்தால் தியானம் செய்துவிட்டு படுத்துத் தூங்கி எழுந்தால் உடம்பில் வியர்வை இருக்காது. டென்ஷன் அதிகமானால் வியர்வையும் அதிகமாகும். டென்ஷனின்றி இருந்தால் வியர்ப்பது நின்றுவிடும். வாடைக்கு வழியே இருக்காதே.
பச்சை காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக கோடையில் எடுத்துக்கொண்டு, சலனம் இல்லாத மனத்துடன் இருந்தால் வியர்வைக்கு வேலை இல்லை.
காட்டன் துணியே ஆனாலும் புத்தம் புதியதாக இருப்பதை அணிந்தால் அதிகமான வியர்வை ஏற்படும். அதற்கு நன்றாக துவைத்து நைசாக இருக்கும் காட்டன் துணிகளை அணிந்தால் வியர்வை அதிகமாக ஏற்படாது .அதனால் நாற்றம் வராது.
வெந்நீரில் சிறிதளவு உப்பு, வேப்பிலை சாறு போட்டுக் குளித்தால் சரும நோய்கள் அண்டாது. கோடையில் தோன்றக்கூடிய வியர்க்குரு, அரிப்பு, படை போன்றவையும் அகலும். இதனால் வியர்வை வாடை வராது.
கொத்தமல்லி தழைகளை ஊறவைத்த வெந்தயம் தயிருடன் சேர்த்து நைசாக அரைத்து தலைக்குத் தடவி குளித்துவர உடல் குளிர்ச்சியாக இருக்கும். அப்பொழுது வியர்க்காது. வியர்வை வாடை வீசாது.
நாள் முழுவதும் அடுப்படியிலேயே சமைத்துவிட்டு திடீரென குளிர்ந்த நீரை கொட்டிக்கொள்வது சருமத்தை உலர்ந்து வெடிக்க செய்துவிடும். வேலை முடிந்ததும் சிறிது நேரம் திறந்த வெளியிலோ, ஃபேன் காற்றிலோ இளைப்பாறி அதன் பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்வை போகும். வாடை வராது.
குளிர்ச்சியான உணவுகள், குளிர்ச்சியான பானங்கள், குளிர்ச்சியான சாலட்டுகள், பச்சடிகள், கீர் வகைகள், கீரை வகைகள், நீர் காய்கறிகள், பழரசங்கள், அருந்தும் தண்ணீரின் அளவை கூட்டுதல் அனைத்தும் நமக்காகவே இருக்கும் பொழுது அவற்றை அற்புதமாகப் பயன்படுத்தி வியர்க்குருவை விரட்டி, வாடை இன்றி வாழலாம்.