
முகத்தில் ரோம வளர்ச்சி அதிகம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் பால் ஏட்டை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது இவைகள் முடியை கருப்பாக பளிச்சென காட்டும்.
முகத்தில் ஏதாவது தழும்புகள் நீண்ட காலமாக மாறாமல் இருந்தால் அவரை இலையைச்சாறு பிழிந்து தடவி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். முகத்தில் பருக்கள் தோன்றினால் ஜாதிக்காயை சிறிதளவு அரைத்து தினமும் பருக்கள் மீது தடவி வந்தால் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு அதனை சிறு துண்டுகளாகி அதன் உள்பக்கத்தை முகத்தில் வைத்து தேய்க்க முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தேமல் ஆகியவை மறைந்துவிடும்.
எலுமிச்சை சாறு முள்ளங்கி சாறு மோர் இவற்றை கலந்து பஞ்சில் மாஸ்க்போல போட்டு பத்து நிமிடம் கழித்து பஞ்சை எடுத்துவிட்டு முகத்தை கழுவினால் மங்கிய தோல் நிறம் பெற்று முகம் பொலிவுடன் விளங்கும்.
பாதாம் பருப்பையும் மஞ்சளையும் சமஅளவு எடுத்து பன்னீர் விட்டு நன்கு அரைத்து மக்காச்சோளம் மாவு காய்ச்சாத பால் சேர்த்து பிசைந்து முகத்தில் பூசி ஊறவைத்து முகம் கழுவினால் முகம் பிரகாசமாகும். எண்ணெய் பசை தோல் உள்ளவர்கள் முகத்திற்கு அடிக்கடி கிளன்சிங் மில்க் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் இதனால் துவாரத்தில் உள்ள அடைப்பு நீங்கும் மோரில் பஞ்சை நினைத்து முகத்தின் மேல் மாஸ்க் போல போட வேண்டும் பஞ்சு காய்ந்ததும் முகத்தை கழுவிவிட வேண்டும்.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது பன்னீர் சிறிது கிளசரின் கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவ வேண்டும் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்தால் முகத்தில் உள்ள சுருக்கம் விரைவில் மறைந்துவிடும்.
தயிரில் கொஞ்சம் கடலைமாவை கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடம் கழித்து நன்றாக கழுவிவிட வேண்டும் மாதம் இரண்டு முறை இப்படி செய்தால் சுருக்கம்போய் முகம் பளீரென விளங்கும். ஆலிவ் எண்ணெயில் கருஞ்சீரகத்தை பொடி செய்து போட்டு அதை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும்.
இரண்டு தேக்கரண்டி தயிரில் ஒரு தேக்கரண்டி சந்தன பொடி கலந்து முகத்தில் தடவி முப்பது நிமிடம் கழித்து முகத்தை குளித்து நீரில் கழுவினால் முகம் பளீரெனமின்னும்.
மோரில் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து கொண்டு அதை இரவு படுக்க போகும் முன்பு முகத்தில் பூசிக்கொண்டு காலையில் எழுந்ததும் சுத்தம் செய்ய வேண்டும் அந்த மாதிரி செய்வது தான் முகத்தின் தோல் மிருதுவாக இருக்கும்.
கேரட் ஒன்றை எடுத்து நன்றாக துருவி ஆரஞ்சு பழச்சாறு ஒரு கோப்பை பால் இத்துடன் கலந்து தடவி விட்டு உலர்ந்தவுடன் முகத்தை அலம்பி வந்தால் முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மறையும்.