
பயோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த முட்டையின் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்குகிறது.
முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்
தேவை:
முட்டை 2
ஆலிவ் ஆயில் 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்தது. முடியை நீரேற்றமாக வைக்கக்கூடியது. இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்த முடி பிளவு தடுக்கப்பட்டு ஆரோக்கியமாகும்.
முட்டையை நன்கு அடித்து ஆலிவ் ஆயில் உடன் கலக்கவும். இதை வேர்க்காலில் தடவி அரைமணி நேரம் கழித்து ஷாம்பூ வாஷ்செய்ய முடி வளர்ச்சி தூண்டப்படும். வாரத்தில் ஒருநாள் இப்படிச் செய்யலாம்.
முட்டை மற்றும் தேன் மாஸ்க்
முட்டை. 1 தேன் 1 டேபிள் ஸ்பூன்,ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன்
தேன் முடிக்கு ஈரப்பதத்தைத் தரும். ஆலிவ் ஆயில் பளபளப்பு தரும். முட்டை, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து மென்மையான பேஸ்ட் ஆக்குங்கள் இதை முடியில் நன்கு தடவங்கள்அரைமணி நேரம் கழித்து அலச முடி ஈரப்பதத்துடன் பளபளப்பாகும்.
முட்டை மற்றும் வாழைப்பழ மாஸ்க்
வாழைப்பழம். 1 முட்டை 1,ஆலிவ் ஆயில் 2 டேபிள் ஸ்பூன் மாற்றும் 1டேபிள் ஸ்பூன் தேன். வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இயற்கை எண்ணெய் இருப்பதால் முடியை வலுவாக்கும். இது முடியை நெகிழ்வாகவும் ,முடிப்பிளவுகளைத் தடுத்தும் வளர்ச்சியைத் தூண்டுகிறது. வாழைப்பழத்தை நன்கு மசித்து முட்டை, ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து இக் கலவையை முடியில் தடவி அலச முடி நெகிழ்வுடன் வலுவாகும்.
முட்டை ஆலோவேரா மாஸ்க்
இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலோவேரா ஜெல்லுடன் ஒரு முட்டையை சேர்த்து இதை முடியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து ஆலச முடி நன்கு ஆரோக்கியமாகும்.
முட்டை மற்றும் வெந்தய மாஸ்க்
இரண்டு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை இரவே ஊற வைக்கவும். மறுநாள் ஊறவைத்த வெந்தயம்,ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து ஒரு முட்டையையும் சேர்த்து நன்கு கலந்து தலைமுடியில் தடவி அரைமணி நேரம் கழித்து அலசவும். வெந்தயத்தில் முடி வளர்ச்சியைத் தூண்டும் நிகோடினிக் அமிலம் உள்ளதுமுடி உதிர்வு தடுக்கப்பட்டு வளர்ச்சியும் ஆரோக்கியமாகும்.
அரிசி மாவு மற்றும் முட்டை ஹேர்மாஸ்க்
தலைமுடி வளர்ச்சிக்கு மிக உகந்தது. முடி நீளமாக வளரும். முடிமை ஈரப்பதத்துடன். வைத்திருக்கும்.
நான்கு ஸ்பூன் அரிசி மாவு
பால் கால் கப்
முட்டையின் வெண்கரு 1
முல்தானி மிட்டி 1கப்
மேற்கூறிய அனைத்தையும் கலந்து பேஸ்ட் ஆக்கி முடியில் தடவவும். பிறகு அரைமணி நேரம் கழித்து ஷாம்பூவால் அலசவும்.இது முடியில் இருக்கும் அழுக்கைப் போக்கி மென்மையாக்கும்.