கோடையில் பெண்கள் தங்கள் மேனியை பராமரிக்க பல வகையான டிப்ஸ்!

To maintain their face
Beauty tips
Published on

கன்னங்கள் வண்ணம் பெற

காடி எனப்படும் வினிகரில் ரோஜா இதழ்களை ஊறவைத்து கன்னங்களில் தடவி வந்தால் கன்னங்கள் ரோஜா நிறமாக மாறும்.

சரும பாதுகாப்புக்கு

எலுமிச்சம் பழத்தை அதன் சாற்றை அடிக்கடி ஏதாவது ஒரு விதத்தில் உள்ளுக்கு சாப்பிடுவுடன் உடலில் பூசி குளித்து வந்தால் சருமத்திற்கு அது பெரிய பாதுகாப்பு சாதனமாக திகழும்.

வெள்ளரிக்காயை அரைத்து அடிக்கடி சருமத்தின் மீது பூசி வந்தாலும் சருமம் மென்மையும் பிரகாசமும் பெறும்.

வெள்ளரிக்காயை அறுத்து கண்களில் ஒத்தி ஒத்தி எடுத்தால் கண்கள் நல்ல குளிர்ச்சியினையும் ஒளியையும் பெரும்.

முகம் அழகு பெற

ஆரஞ்சு பழத்தை இரண்டாக நறுக்கி பெண்கள் தங்கள் முகத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும் பத்து நிமிஷங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு முகத்தை சோப்பு போட்டு கழுவி விட வேண்டும் இவ்வாறு வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் செய்து வந்தால் முகம் மாசு மருவற்று பட்டு போன்று மிருதுவாகவும் மினுமினுப்புடனும் இருக்கும்.

முழங்கை கால்களில் கருப்பு நிறம்

சில பெண்களுக்கு முழங்கை முட்டி கால்கள் கருமை நிறமாக இருக்கும் அது காண்பதற்கு அசிங்கமாக  இருக்கும் அந்த மாதிரி இடங்களில் எலுமிச்சை பழச்சாற்றை நன்றாக தேய்த்து பிறகு சோப்பு போட்டு குளிக்கவேண்டும் இவ்வாறு தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் கருமை நிறம் மாறி சருமம் இயல்பான நிறமடையும்.

கண் இமைகள் எழில் பெற

உயர்ந்த ரக பன்னீராக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் வாரத்துக்கு இரண்டுமுறை இந்த பன்னீரை கண்ணிமைகள் நனையுமாறு செய்யுங்கள் கையினால் தொட்டு இமைகளில் தாராளமாக தடவினால்கூட போதுமானதாகும் கண்ணிமைகளில் உள்ள சுருக்கம் நீங்கும் இமைகள் கருமை நிறத்துடன் அழகாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கோடைக்காலத்தில் இந்த பொருட்களை பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள்!
To maintain their face

உள்ளங்கை மென்மை பெற

சர்க்கரை உடன் சிறிதளவு கிளிசரினை சேர்த்து குழப்பி உள்ளங்கைகளில் தொடர்ந்து தடவி வந்தால் உள்ளங்கைகள் மலர் போல மென்மை தன்மை உடன் நல்ல நிறமும் பெற்று திகழும்.

முகம் மினுமினுக்க

ஆப்பிள் பழத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு மத்து கொண்டு கடைய வேண்டும் மாவு போன்று ஆனவுடன் அந்த மாவுடன் சுத்தமான பாலேட்டை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து முகத்தை கழுவிவிட வேண்டும் இம்மாதிரி தொடர்ந்து சில நாட்கள் செய்து வர முகம் நல்ல மினு மினுப்புடன் கவர்ச்சியாக காணப்படும்.

நல்ல நிறமாக இருக்க

பெண்கள் நல்ல நிறமாகவும் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆகவேண்டும் என்றால் தேங்காய் எண்ணெயுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழப்பி உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பயத்தம் பருப்பு மாவு தேய்த்து குளித்து வந்தால் உடல் பளபளப்பாகவும் நல்ல நிறத்துடனும் காட்சியளிக்கும்.

இதையும் படியுங்கள்:
கோடையில் சருமத்தை பராமரிக்க... சிரமமின்றி செய்ய 5 Face Packs!
To maintain their face

முகத்தில் சுருக்கங்கள் தோன்றினால்

முகத்தில் சுருக்கங்கள் தோன்றியிருந்தாலும் அது முகத்தின் எழிலை குறைத்து விடும் சிறிதளவு கிளிசரினை  பன்னீர் விட்டு கலந்து நாள்தோறும் படுக்கைக்கு செல்லும்போது தடவி வந்தால் முகச்சுருக்கம் மறைந்து முகம் பளபளப்பாகும் அழகாகவும் மாறும் முக சுருக்கம்  முற்றிலுமாக மறையும் வரை தொடர்ந்து தடவி வர வேண்டும்.

உடல் கருமை வெயிலுக்கு

பாதாம் எண்ணைக்கு உடல் சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் செய்யும் இயல்பு உண்டு பெண்கள் வாரத்திற்கு இரண்டு தடவையாவது உடல் முழுவதும் பாதாம் எண்ணெயை தடவி வைத்திருந்து சிறிது பொறுத்து கடலைமாவு தேய்த்து குளித்து வந்தால் உடல் சருமம் மென்மை மிகுந்த பளபளப்புடன் அமையும் வாய்ப்பு ஏற்படும்போது கொஞ்சமாக பாதாம் எண்ணையை உடல் முழுவதும் தடவி நன்றாக உடம்பை தேய்த்து பாலிஷ் செய்வது உடல் சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து மென்மையை அளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com