கோடை வெயில் கொளுத்துகிறது. இந்த வெயில் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைக்க வேண்டும். சருமத்திற்கும் வழக்கத்தை விட கூடுதல் பராமரிப்பு கொடுக்க வேண்டும். கோடை காலத்தில் சருமத்திற்கு ஏற்ற சரியான பராமரிப்பு என்றால் முகத்திற்கு சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக்குகள் போடுவது. அதுவும் கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பேஸ் பேக்குகள் போடுவதை விட இயற்கை பொருட்களால் போடும்போது சரும செல்களின் ஆரோக்கியம் மேம்படும். சருமம் குளிர்ச்சி ஆகும். கோடைக் காலத்தில் சரும செல்கள் சேதம் அடையாமல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்குரிய ஃபேஸ் பேக்குகள் என்ன என்று பார்ப்போம்.
இந்த மாஸ்க்கிற்கு நன்கு பழுத்த பப்பாளியை சிறிது எடுத்து மசித்து அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் வெவெதுப்பான நீரால் முகத்தை கழுவினால், சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்றி சருமம் பளபளப்பாக இருக்க உதவுகிறது. இதில் உள்ள எலுமிச்சை சாறு சருமத்தை பிரகாசமாக்கி சருமத்தை சமம் செய்யும்.
இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு கிண்ணத்தில் பாதி வெள்ளரிக்காய் எடுத்து நைசாக அரைத்து அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலக்க வேண்டும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால், வெள்ளரியில் உள்ள ஈரப்பதம் சருமத்தை குளிர்விக்கும். அதே நேரத்தில் கற்றாழை சருமத்தில் உள்ள வீக்கம், புள்ளிகள் போக்க உதவும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்து அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அது முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து மெதுவெதுப்பான நீரால் கழுவி வந்தால் சருமம் புத்துணர்ச்சியுடன் நீ நீரேற்றமாகவும் இருக்கும். மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன . தேங்காய் எண்ணெய் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.
இதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதை முகம், கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதில் உள்ள எலுமிச்சை சருமத்தை பிரகாசமாக்கி சருமத்தை தெளிவாக்கும். தேனில் அற்புதமான ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளதால் இது சருமத்தை ஆற்றவும் உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் தயிருடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதை முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர சருமத்தை மென்மையாக்கும். தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளதால் சருமத்தை பிரகாசமாக்கி சூரிய ஒளி முகத்தில் படாமல் நீக்கும்.